உள்ளடக்கத்துக்குச் செல்

சரப்சீத் சிங் கல்சா

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
சரப்சீத் சிங் கல்சா
நாடாளுமன்ற உறுப்பினர்
பதவியில் உள்ளார்
பதவியில்
4 சூன் 2024
முன்னையவர்முகமது சாதிக்
தொகுதிபரித்கோட்
தனிப்பட்ட விவரங்கள்
பிறப்புநவம்பர் 1, 1979 (1979-11-01) (அகவை 44)
அரசியல் கட்சிசுயேச்சை
பெற்றோர்
உறவினர்பாபா சுச்சா சிங் (தாத்தா)
வாழிடம்மொகாலி

சரப்ஜீத் சிங் கல்சா (Sarabjeet Singh Khalsa) என்பவர் இந்தியாவின், பஞ்சாப் மாநிலத்தைச் சேர்ந்த ஓர் இந்திய அரசியல்வாதி ஆவார்.[1] இவர் 2024 முதல் பரித்கோட் மக்களவைத் தொகுதிக்கான பாராளுமன்ற உறுப்பினராக பணியாற்றி வருகிறார்.

தனிப்பட்ட வாழ்க்கை

[தொகு]

கல்சா, முன்னாள் இந்தியப் பிரதமரின் இந்திரா காந்தியின் மெய்க்காப்பாளரும், இந்திரா காந்தியைக் கொன்ற கொலையாளிகளில் ஒருவரான பியாந்த் சிங் மற்றும் ரோபார் தொகுதியின் முன்னாள் மக்களவை உறுப்பினர் பிபி பிமல் கவுர் ஆகியோரின் மகனாவார்.[2]

இவரது தாத்தா பாபா சுச்சா சிங்கும் பதிண்டா மக்களவைத் தொகுதியில் இருந்து உறுப்பினராக தேர்தெடுக்கபட்டவார்.[3]

அரசியல் வாழ்க்கை

[தொகு]

கல்சா, 2004 மக்களவைத் தேர்தலில் பதிண்டா தொகுதியில் போட்டியிட்டு 1,13,490 வாக்குகள் பெற்றார். 2007ஆம் ஆண்டு பஞ்சாப் சட்டமன்றத் தேர்தலில் பர்னாலா மாவட்டத்தில் உள்ள படவுர் தொகுதியில் போட்டியிட்டு 15,702 வாக்குகள் மட்டுமே பெற்றார். 2009 மற்றும் 2014ஆம் ஆண்டுகளில் இவர் மீண்டும் முறையே பதிண்டா மற்றும் பதேகர் சாகிப் தொகுதிகளில் போட்டியிட்டு தோல்வியடைந்தார்.[4]

கல்சா, 2024 பொதுத் தேர்தலில் சுயேச்சை வேட்பாளராக பரித்கோட்டில் இருந்து நாடாளுமன்ற உறுப்பினராகத் தேர்ந்தெடுக்கப்பட்டார்.[5][6][7] பதிவான மொத்த வாக்குகளில் 29.38 விழுக்காட்டு வாக்குகளை அதாவது 2,98,062 வாக்குகள் பெற்று பஞ்சாப் முதல்வரின் நெருங்கிய நண்பரான பஞ்சாபி நடிகர் கரம்ஜித் அன்மோலை தோற்கடித்து வெற்றி பெற்றார்.[8]

மேற்கோள்கள்

[தொகு]
  1. "Amritpal, radical preacher and son of Indira Gandhi's killer expected to win - CNBC TV18". CNBCTV18 (in ஆங்கிலம்). 2024-06-04. பார்க்கப்பட்ட நாள் 2024-06-04.
  2. "Sarabjeet Singh Khalsa, son of Indira Gandhi's assassin, wins from Punjab's Faridkot Lok Sabha seat". Firstpost (in அமெரிக்க ஆங்கிலம்). 2024-06-04. பார்க்கப்பட்ட நாள் 2024-06-04.
  3. Sethi, Chitleen K. (5 June 2024). "Amritpal, Sarabjeet Singh Khalsa — Sikh radicals' poll victories pose challenge for Mann govt". ThePrint. https://theprint.in/politics/amritpal-sarabjeet-singh-khalsa-sikh-radicals-poll-victories-pose-challenge-for-mann-govt/2117825/. 
  4. Upadhyay, Deepak Upadhyay. "Lok Sabha polls: Who is 12th dropout Sarabjit Singh Khalsa, son of Indira Gandhi's assassin, contesting from Punjab?". LiveMint. https://www.livemint.com/news/india/lok-sabha-polls-2024-sarabjit-singh-khalsa-beant-singh-indira-gandhi-punjab-faridkot-11712842188889.html. 
  5. "Independent Candidate Sarabjeet Singh Khalsa Leading From Faridkot Seat, Kamaljit Anmol Trailing". Times Now (in ஆங்கிலம்). 2024-06-04. பார்க்கப்பட்ட நாள் 2024-06-04.
  6. "Punjab, Haryana Election Results Live Updates: Independent candidate Sarabjeet Singh Khalsa wins from Faridkot over AAP Karamjit Singh Anmol". The Indian Express (in ஆங்கிலம்). 2024-06-04. பார்க்கப்பட்ட நாள் 2024-06-04.
  7. "Faridkot Election Result 2024 LIVE Updates Highlights: Lok Sabha Winner, Loser, Leading, Trailing, MP, Margin". News18 (in ஆங்கிலம்). 2024-06-04. பார்க்கப்பட்ட நாள் 2024-06-04.
  8. "June 2024 Faridkot results". Election Commission of India. பார்க்கப்பட்ட நாள் 2024-06-04.
"https://ta.wikipedia.org/w/index.php?title=சரப்சீத்_சிங்_கல்சா&oldid=4000317" இலிருந்து மீள்விக்கப்பட்டது