பிபி பிமல் கவுர்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.

பிபி பிமல் கவுர் (Bibal Kaur Khalsa) (இறப்பு: 1991) ஓர் இந்திய அரசியல்வாதியும், இந்திரா காந்தியைக் கொலை செய்த இரு கொலையளிகளுள் ஒருவரான பியாந்த் சிங்கின் மனைவியும் ஆவார்.

பின்னணி[தொகு]

இவரது கணவர் முன்னாள் பிரதமர் இந்திரா காந்தியை படுகொலை செய்தபோது பிபி பிமல் கவுர் லேடி ஹார்டிங் மருத்துவக் கல்லூரியில் ஒரு செவிலியராகப் பணிபுரிந்து கொண்டிருந்தார்.[1] படுகொலை நடந்த உடனேயே இவர் இந்திய பாதுகாப்பு படையினரால் தேடுதலுக்கு ஆளானார். இவர் தனது குழந்தைகளான அம்ரித், சரப்ஜீத், ஜாஸ்ஸி ஆகியோரை வீட்டில் விட்டுவிட்டு பல நாட்கள் காணாமல் போனார். தம்தாமி தக்சல் என்ற சீக்கிய மரபு சார்ந்த கல்வி அமைப்பானது இவரது குழந்தைகளின் கல்விக்காக இரண்டு ஆண்டுகளுக்கான செலவினைக் கொடுத்தனர்.

போராட்டம்[தொகு]

பிமல் கவுர் பின்னர் குருத்துவார் ஒன்றில் தீக்குளிக்கப் போவதாக பேசிய பேச்சுக்காக கைது செய்யப்பட்டு இரண்டு ஆண்டுகள் சிறையில் அடைக்கப்பட்டார். 1986 ஆம் ஆண்டு சூன் 4 ஆம் நாள் தனக்கு 35 வயதாக இருந்தபோது, அமிர்தசரசு பொற்கோயிலில் நடத்தப்பட் புளூஸ்டார் நடவடிக்கையை எதிர்த்து இருநூறுக்கும் மேற்பட்ட ஆயுதமேந்திய கலகக்காரர்கள் கூட்டத்துடன் நுழைந்தார். இக்கூட்டம் காலிஸ்தானுக்கு ஆதரவான முழக்கங்களை எழுப்பியது. அப்போது முதல்வராயிருந்த மிதவாதப் போக்கு கொண்ட சுர்ஜித் சிங் பர்னாலாவை கொலை செய்யப்போவதாக பகிரங்கமாக அச்சுறுத்தியது.[2] இதில் ஒரு காவலர் கொல்லப்பட்டார். மேலும், 7 பேர் காயமடைந்தனர். பல பத்திரிகையாளர்கள், சுமார் பன்னிரெண்டு காவலரின் மரணத்தைக் கண்டும் மௌனமாகவே இருந்தனர்.[3]

அரசியல்[தொகு]

பின்னர், இவர் ரூப்நகர் மக்களவைத் தொகுதியிலிருந்து மக்களவை உறுப்பினராக தேர்ந்தெடுக்கப்பட்டார். இவரது மாமனார், பியாந்த் சிங்கின் தந்தை, சுச்சா சிங் மலோவா நாடாளுமன்ற உறுப்பினராக இருந்தார்.[4] இவரது மகன் சர்ப்ஜித் சிங், சிம்ரஞ்சித் சிங் மான் தலைமையிலான சிரோன்மணி அகாலிதளம் (ஏ) கட்சியின் சார்பில், 2004 ஆம் ஆண்டில் பஞ்சாப்பில் உள்ள மானசாவின் பட்டிண்டா தொகுதியிலிருந்து மக்களவைக்குப் போட்டியிட பரிந்துரைக்கப்பட்டார்.[5]

சர்ச்சை மரணம்[தொகு]

இவர் 1991 ஆம் ஆண்டு செப்டம்பர் 2 ஆம் நாள் இறந்தார்.[6] பிமல் கவுரின் மரணத்தில் மர்மம் மறைந்துள்ளதாக பேசப்பட்டது. பத்திரிகைகளின் முதல் கட்ட அறிக்கைகள் பிமல் கல்சா சயனைடு உட்கொண்டதாகக் குறிப்பிட்டது. இவரது பராமரிப்பில் சிறு குழந்தைகள் இருந்ததால், “பலவந்தமாக சயனைடு வழங்கப்பட்டதா?” என்ற சந்தேகம் உடனடியாக எழுந்தது. இதனையடுத்து, இவர் துணிகளை சலவை செய்து மின் இஸ்திரிப்பெட்டியைப் பயன்படுத்திய போது மின்அதிர்ச்சியின் காரணமாக இறந்ததாக காவல்துறை இவரது மரணத்தில் உள்ள மர்மத்தை முடித்து வைத்தனர். பொதுவாக 13 வயது சிறுவன் ஒருவன் இந்த வேலையைச் செய்து வந்தார். ஆனால் இந்தச் சிறுவன் பிமல் கவுர் இறக்கும் போது வீட்டில் இல்லை. இவரது வீட்டின் அருகிலுள்ள உறவினர் பிரேதப் பரிசோதனையைக்கு கோரினார். சாதாரணமான சூழ்நிலையில், காவல்துறை கோரிக்கையின் பேரில் பிரேதப் பரிசோதனையை நடத்த வேண்டிய கட்டாயத்தில் இருந்தது. இருப்பினும், காவல்துறை இதை மறுத்துவிட்டது.

மேற்கோள்கள்[தொகு]

  1. http://www.preventgenocide.org/prevent/news-monitor/2003mar.htm Playing at Grown-Ups FEAR has been their childhood companion
  2. SIKHS SOUGHT IN SLAYING, NYTimes 6 June 1986
  3. Assassin’s Widow Charged With Murder After Rioting In Golden Temple, June 5, 1986[1]
  4. Fighting for Faith and Nation: Dialogues with Sikh Militants By Cynthia Keppley Mahmood, p. 136 Published 1996
  5. The Tribune, Chandigarh, India - Punjab
  6. Inderjit Singh Jaijee, Politics of Genocide, Pg 119-120
"https://ta.wikipedia.org/w/index.php?title=பிபி_பிமல்_கவுர்&oldid=3205603" இருந்து மீள்விக்கப்பட்டது