சமயத்தில் பெண்கள்
இக்கட்டுரையோ இக்கட்டுரையின் பகுதியோ துப்புரவு செய்ய வேண்டியுள்ளது. இதை விக்கிப்பீடியாவின் நடைக்கேற்ப மாற்ற வேண்டியுள்ளது. தொகுத்தலுக்கான உதவிப் பக்கம், நடைக் கையேடு ஆகியவற்றைப் படித்தறிந்து, இந்தக் கட்டுரையை துப்புரவு செய்து உதவலாம். |
இக் கட்டுரையின் நடுநிலைமை கேள்விக்குட்படுத்தப் பட்டுள்ளது. |
பல்வேறு சமய தொன்மங்கள், நம்பிக்கைகள், கோட்பாடுகள், நடைமுறைகள் பெண்களின் ஒடுக்குமுறைக்கு காரணமாகி உள்ளன. பெண்களை தீய சக்திகளாக கட்டமைப்பது, அவர்களை கட்டுப்படுத்தும் அடக்கும் சட்டங்களை இயற்றுவது, சம உரிமைகளை வழங்காதது என பல வழிகளில் சமயங்களால் பெண்கள் ஒடுக்குமுறைக்கு உட்பட்டார்கள். பெரும்பான்மைச் சமயங்கள் ஆண் ஆதிக்க மரபைக் கொண்டவை. பெண் ஆணுக்கு கட்டுப்பட்டவள் என்ற கொள்கை உடையவை.
சமயங்கள் வாரியாக
[தொகு]கிறித்தவம்
[தொகு]கிறித்தவ தொன்மவியலில் ஆண் இறையின் உருவாகவும், பெண் ஆணின் உருவாகவும் படைக்கப்படுகிறார்கள். பெண் இறையை மீறி ஆசைப்பட்டு விலக்கப்பட்ட கனியை உண்டதால்தான் மனித இனமே பாவப்பட்டு இறப்பு, நோய், துன்பம் ஆகியவற்றை எதிர்கொள்ளவேண்டி வந்தது. பெண்ணை தீய நிகழ்வுக்கு இட்டு சென்றவளாக இந்த தொன்மம் சித்தரிக்கின்றது. பெண்கள் சமய குருக்களாக அருட்பொழிவு பெறுவதை பல கிறித்தவப்பிரிவுகள் இன்னும் வன்மையாக எதிர்க்கிறன.[1]
இசுலாம்
[தொகு]பல இசுலாமிய நாடுகளில் பெண்கள் ஆண்களுக்கு நிகரான உரிமைகளை சட்ட நோக்கிலோ நடைமுறை நோக்கிலோ இன்றுவரைப் பெறவில்லை. எடுத்துக்காட்டாக புனித இசுலாமிய நாடாக கருதப்படும் சவூதி அரேபியாவில் பெண்கள் தேர்தலில் ஓட்டுப் போட முடியாது.[2] பெண்களுக்கு வேலைகள் வாய்ப்புக்கள் அரிது.[3] குறைந்த பட்சம் அவர்கள் விரும்பும் படி உடைகளும் அணிய முடியாது. ஒர் ஆண் நான்கு மனைவிகளை வைத்திருக்க இசுலாம் அனுமதி தருகிறது. ஆனால் பெண் அப்படிச் செய்ய முடியாது. ஆணும் பெண்ணும் இணைந்து வழிபாடு கூடச் செய்ய முடியாது.[4]
இந்து சமயம்
[தொகு]இந்து சமய மரபுகள் பெண்களை பல கொடுமைகளுக்கு உட்படுத்தின. உடன்கட்டை ஏறல் முற்காலத்தில் வற்புறுத்தப்பட்டது. பெண் குழந்தை வெறுக்கப்பட்டது.[5] குழந்தைத் திருமணம் பரிந்துரைக்கப்பட்டது.[6] பெண்ணை வன்முறைக்கு உட்படுத்த அனுமதித்தது.[7] பெண்களுக்கு சுதந்திரம் இல்லை என்று ஆணித்தரமாய் இந்து சமய நூற்களில் ஒன்றான மனு சமிதி பின்வருமாறு கூறுகின்றது.[8] "In childhood a female must be subject to her father, in youth to her husband, when her lord is dead to her sons; a women must never be independent". தமிழில், "ஒரு பெண் குழந்தையாய் இருக்கும் பொழுது அவளது தந்தைக்கு கட்டுப்பட்டு இருக்க வேண்டும். இளம் வயதில் அவளது கணவனுக்கு கட்டுப்பட்டு இருக்க வேண்டும். அவளது கணவன் இறந்த பின்பு அவளது மகன்களுக்கு கட்டுப்பட்டு இருக்க வேண்டும். ஒரு பெண் என்றும் சுந்ததிரமக இருக்கக் கூடாது."
மேற்கோள்கள்
[தொகு]- ↑ "The theology of subordination is based on the notion of “male headship of the order of creation.”…Any effort to upset this order by giving women autonomy or equal rights would constitute a rebellion against God and would result in moral and social chaos in human society. This notion that male headship is the order of creation usually carries with it the hidden or explicit assumption that God is male. ...women is, in fact morally, ontologically, and intellectually the inferior of the male…Moreover, her inferiority leads to sin when she acts independently." Equivlance or Subordination by Rusemary Radford Ruether quoted in page 197 of Mary Pat Fisher. (2005). Women in Religion. Toronto: Priscilla McGeehon.
- ↑ "Saudi Arabia: Women Without the Vote". Archived from the original on 2013-08-03. பார்க்கப்பட்ட நாள் 2013-09-12.
- ↑ "we do know that, currently, of the 23 countries with the worst records of jobs for women (women making up only 10-20% of all workers), 17 are Muslim countries (Kidron 1991:96-97). Similarly, of the 11 worst offenders of opportunity between men and women, 10 are Muslim states. The widest gaps were found in Bangla Desh, Saudi Arabia, and Egypt (Kidron 1991:57)."[1]
- ↑ "Muslim male privilege is a reality that cannot be denied. It is not as simple as Muslim men enjoying greater space, comfort and accessibility in the mosque." Time to end gender segregation in mosques பரணிடப்பட்டது 2011-09-11 at the வந்தவழி இயந்திரம்
- ↑ "Let a female child be born somewhere else; here, let a male child born" (Atharva Veda VI, 2, 3) quoted in Mary Pat Fisher. (2005). Women in Religion. Toronto: Priscilla McGeehon.
- ↑ "A man, aged 30 years, shall marry a maiden of 12 who pleases him, or a man of 24 a girl of eight years of age" (Manu Smarti IX, 94) quoted in Mary Pat Fisher. (2005). Women in Religion. Toronto: Priscilla McGeehon.
- ↑ "if wife refuses her husband's sexual advances, he should try to persuade her by coaxing, then by gifts, and finally by beating her with his firsts or with rods (Brhad Aranyaku Upanishad VI, 4, 7) quoted in Mary Pat Fisher. (2005). Women in Religion. Toronto: Priscilla McGeehon.
- ↑ Manu Smrti V, 148: quoted in Mary Pat Fisher. (2005). Women in Religion. Toronto: Priscilla McGeehon.