பேச்சு:சமயத்தில் பெண்கள்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
Jump to navigation Jump to search

இக் கட்டுரைக்கு ஏன் நீக்கல் வார்ப்புரு சேர்க்கப்பட்டுள்ளது? --Natkeeran (பேச்சு) 14:30, 12 செப்டம்பர் 2013 (UTC)

இக்கட்டுரையின் தலைப்பே கலைக்களஞ்சியக் கட்டுரை போல் தோன்றுகிறது. பெண்கள் ஒடுக்குமுறை எனும் தலைப்பில் கட்டுரையைத் தொடங்கி அதில் சமயம் உட்பட, பெண்களுக்கான அனைத்து ஒடுக்குமுறைகள் குறித்தும் குறிப்பிடலாமென நினைக்கிறேன்.--தேனி. மு. சுப்பிரமணி./உரையாடுக. 14:35, 12 செப்டம்பர் 2013 (UTC)

பெண்கள் ஒடுக்குமுறை உண்டு. சமயத்தில் பெண்கள் ஒடுக்குமுறை உண்டு. உருசியாவில் இனவாதம் போன்று இக் கட்டுரையை தகவல் நோக்கில் அணுக முடியும். எழுத்து நடை சீர் செய்யப்பட வேண்டும் என்பதை ஏற்றுக் கொள்கிறேன். சமய விமர்சனத்தின் ஒரு விரிவான கட்டுரையாகவும் இது அமையும். நன்றி. --Natkeeran (பேச்சு) 14:39, 12 செப்டம்பர் 2013 (UTC)
அப்படியானால், சமயக் கட்டுப்பாடுகளில் பெண்கள் ஒடுக்குமுறை எனும் தலைப்புக்கு நகர்த்தலாம்.--தேனி. மு. சுப்பிரமணி./உரையாடுக. 14:47, 12 செப்டம்பர் 2013 (UTC)

இசுலாத்தில்[தொகு]

சவூதி அரேபியா முடியாட்சி நாடு மக்களாட்சி நாடு அல்ல அங்கு ஆண்களுக்கே ஓட்டுரிமை எந்த அளவில் உள்ளது என்று தெரியவில்லை. ஐக்கிய அரபு அமீரகம், அபுதாபியில் நடக்கும் அரசியல் முக்கியத்துவம் வாய்ந்த வழக்கு ஒன்றில் அந்நாட்டு நீதிமன்றம் குற்றம்சாட்டப்பட்டுள்ள பெண் ஒருவருக்கு பிணை வழங்கி மருத்துவத்திற்காக வெளிநாடு செல்ல அனுமதியளித்துள்ளது. பார்க்க:hearing of the clandestine group to resume on April 30 //In a humanitarian move by the court, the judge also ordered the release of the passport of one of the accused women, Fatima Al Za’abi, in order to go abroad for further medical attention and treatment.//

இன்று (12-09-2013) வந்த செய்தி சவூதி அரேபியாவில் கணவன் தன்னை அடித்ததாக தொடரப்பட்ட வழக்கில் வழங்கப்பட்டுள்ள தீர்ப்பு.lashes for husband despite wife's pardon

பெண்கள் பள்ளிவாசலில் தொழ அனுமதி உள்ளது. மக்காவில் ஹராம் சரீப் பள்ளிவாசலில் ஆண்களும் பெண்களும் ஒன்றாகவே தொழுகின்றனர். அநேக அரபு நாடுகளில் பெண்கள் பள்ளிவாசலில் தொழுகின்றனர். அங்கு வசிப்பவர்களுக்குத் தெரியும். இன்னும் சொல்லப்போனால், இரண்டு பெருநாட்கள் தொழுகையில் ஆண்களுடன் பெண்கள் அவசியம் கலந்து கொள்ள அறிவுறுத்தப்பட்டுள்ளது. அதிலும் குறிப்பாக மாதவிடாய் பெண்களும் (தொழாவிட்டாலும்) கலந்து கொள்ள வேண்டும் என்று முகம்மது நபி வலியுறுத்தியுள்ளார்.

நன்றி. --மாகிர் (பேச்சு) 15:45, 12 செப்டம்பர் 2013 (UTC)

சமயம் சார்ந்த கட்டுரைகளில் அந்த சமயத்தை பின்பற்றுபவர்களை அல்லது தொடர்புடைய நாடுகளை அடிப்படையாக வைத்து கட்டுரைகள் எழுதப்படுவது சரியல்ல. அந்த சமயங்களின் அடிப்படை கொள்கைகளை பற்றி எழுதுவதுதான் சரி. பல்வேறு சமூகத்தில் பெண்களுக்கு எதிரான ஒடுக்குமுறைகள் என்றிருந்தால் பின்பற்றுபவர்களையும், சமயத்தையும் சேர்த்து எழுதலாம். -- மாகிர் (பேச்சு) 16:28, 12 செப்டம்பர் 2013 (UTC) --மாகிர் (பேச்சு) 16:28, 12 செப்டம்பர் 2013 (UTC)


இந்தக் கட்டுரை மேலும் விளக்கமாக, வலுவான ஆதரங்களோடு எழுதப்பட வேண்டும். இதன் நடை, எழுதப்பட்ட விதம் பொருத்தம் இல்லை என்பது விளங்கிறது. இதைக் கவனத்தில் கொள்கிறேன். சமயத்துக்கு தனித்துக் கட்டுரை இருப்பது மிகப் பொருத்தம். அதே வேளை, தமிழ்ச் சமூகத்தில் பெண் ஒடுக்குமுறை போன்ற கட்டுரைகளும் எழுதப்பட வேண்டும். நன்றி. --Natkeeran (பேச்சு) 17:19, 12 செப்டம்பர் 2013 (UTC)

இக்கட்டுரையின் நடுநிலைமை குறித்து[தொகு]

இக்கட்டுரையின் பாணியையும் போக்கையும் மாற்றியமைக்க பரிந்துரை[தொகு]

இக்கட்டுரைத் தலைப்பு நல்ல முறையில் அமையவில்லை என்பது என் கருத்து. "பெண்கள் ஒடுக்குமுறையும் சமயமும்" என்றால் முதலில் பெண்கள் ஒடுக்குமுறை என்றால் என்னவென்று வரையறுக்க வேண்டும். பெண்கள் கல்வி கற்கக் கூடாது, பெற்றோர் தேர்ந்தெடுத்த வரனை மணந்துகொள்ள வேண்டும், ஆண்களுக்கு நிகரான கூலி பெண்களுக்குக் கொடுக்கப்படவில்லை, வரதட்சணை கொடுத்தால் தான் திருமணம், வரதட்சணைக் கொடுமையால் அடுப்பு வெடித்து சாதல், சாதி சமயம் கடந்து திருமணம் செய்தால் தண்டனை என்று அடுக்கிக் கொண்டே போகலாம்.

இதற்கு அடுத்தபடியாக, சமயம் என்றால் என்னவென்று வரையறுக்க வேண்டும். சமயம் என்பது பொதுப் பெயர் ஆதலால், தன் இயல்பிலேயே சமயம் பெண்களை ஒடுக்குகிறதா? ஆம் என்றால் எந்த வகைகளில் எல்லாம் ஒடுக்குகிறது? கலாச்சாரமும் சமயமும் சமுதாயமும் ஒரு நாட்டின் அரசியல் அமைப்பும் பெண்களை ஒடுக்குகின்றனவென்றால் கலாச்சாரத்தையும் சமயத்தையும் சமுதாயத்தையும் அரசியல் அமைப்பையும்பெண் ஒடுக்குமுறையைப் பொறுத்த மட்டில் எவ்வாறு பிரித்துப் பார்ப்பது? இந்தியாவில் பெண்குழந்தைகள் ஆண்குழந்தைகளுக்கு சமமாக நடத்தப்படவில்லை என்றால் அது ஒடுக்குமுறையா? அவ்வாறு ஒடுக்குமுறை நிகழ்ந்தால் அதில் எந்த சமயம் எந்த அளவுக்குப் பங்கேற்கிறது? அல்லது இது ஒரு கலாச்சாரப் பாணியா? அல்லது சீனாவில் பெண்கள் ஒடுக்குமுறை நடந்தால் அதற்குப் பொறுப்பு பவுத்தமா கன்பூசியமா பொதுவுடைமை ஆட்சியா? சவுதி அரேபியாவும் துருக்கியும் பெண்களை வெவ்வேறு வகையில் பார்க்கின்றன என்பது அறிந்த உண்மை. அதுபோலவே இசுலாம் பரவலாக உள்ள ஆப்கனிசுதானும் பாகிசுதானும் பெண்கல்வியை ஒரே முறையில் பார்ப்பதில்லை. அப்படி என்றால் இசுலாம் பெண்கல்வியை இப்படிப் பார்க்கிறது என்று எப்படி சொல்வது? ஒருசில தீவிரவாத இயக்கங்கள் ஒரு குறிப்பிட்ட கொள்கையைத் திணிக்கப் பார்க்கின்றன என்று தானே கூற முடியும்?

இவ்வாறு கேள்விகளை அடுக்கிக் கொண்டே போகலாம்.

ஆங்கில விக்கியில் இக்கட்டுரைக்கு ஒத்த கட்டுரை இருக்கிறதா என்று பார்த்தால் கண்டுபிடிக்க முடியவில்லை.

எனவே, சமயத்தையும் பெண்களையும் இணைத்து கட்டுரை எழுத வேண்டும் என்றால் அது தனித்தனி சமயத்திற்கு உரித்தானதாக, பொது முறையில் அமைய வேண்டும். அவ்வாறு அமைக்கும் போது குறிப்பிட்ட சமயத்தின் கொள்கைகள் பெண்களை ஆண்களை விடத் தாழ்ந்தவர்களாக நடத்துவதாக இருந்தால் அதையும் குறிப்பிட்டுச் செல்லலாம்.

எனவே, ஆங்கில மற்றும் பிறமொழி விக்கிகளைப் பார்த்ததிலிருந்தும், பெண்களை சமயங்கள் எவ்வாறு பார்க்கின்றன என்று எடுத்துரைப்பது தமிழ் விக்கிக்குக்குத் தேவை என்றும் உணர்ந்து, கீழ் வரும் பரிந்துரைகளை/தலைப்புகளை முன்வைக்கிறேன்:

1) கிறித்தவத்தில் பெண்கள் 2) இசுலாத்தில் (இசுலாம் சமயத்தில்) பெண்கள் 3) இந்து சமயத்தில் பெண்கள் 4) புத்த சமயத்தில் பெண்கள் 5) சீக்கிய சமயத்தில் பெண்கள் 6) சமணத்தில் பெண்கள் 7) யூதத்தில் பெண்கள்..... முதலியன.

ஆங்கில விக்கியில் கீழ்வரும் கட்டுரைத் தலைப்புகளைக் கண்டேன்: 1) Women in Christianity 2) Women in Islam 3) Women in Hinduism 4) Women in Buddhism 5) Women in Sikhism 6) Women in Judaism..... இக்கட்டுரைகளை அடிப்படையாகக் கொண்டு த.வி.யில் கட்டுரைகள் எழுதலாம்.

Women in Jainism ஆங்கில விக்கியில் இருப்பதாகத் தெரியவில்லை.

மேற்கூறியவாறு கட்டுரைகள் அமைவதாக இருந்தால் ஒரு குறிப்பிட்ட சமயம் பெண்கள் பற்றிக் கூறும் கருத்துகளை சரிவர எடுத்துரைக்கவும் முடியும், அச்சமயக் கொள்கைகளும் பழக்கங்களும் பெண்களை வெவ்வேறு வகைகளில் ஒடுக்குவதாக இருந்தால் அதுவும் அப்பொதுக் கட்டுரையின் அம்சமாக எழுதப்படும். மாறாக, "பெண்கள் ஒடுக்குமுறையும் சமயமும்" என்று பொதுத் தலைப்பு கொடுத்தபின் அதற்குப் பொருத்தமான உள்ளடக்கம் இல்லாமல் போய்விடுமோ என்று அஞ்சுகிறேன். மேலும், அந்தப் பொதுத் தலைப்பின் கீழ் ஆறு ஏழு சமயங்களின் பார்வைகளைத் தொகுத்து அளிக்கும் போது கட்டுரை அளவுகடந்து நீண்டுபோகும் ஆபத்தும் உள்ளது.

எனவே, இக்கட்டுரைத் தலைப்பை மாற்றுமாறு பரிந்துரைக்கின்றேன். நன்றி! பிற பயனர்களின் கருத்துகளை அறிய அவா. தமிழ் விக்கி வளர பங்களிப்போர் அனைவருக்கும் வாழ்த்துக்கள்!--பவுல்-Paul (பேச்சு) 03:44, 13 செப்டம்பர் 2013 (UTC)

ஒவ்வொரு நாடுகளிலும் இனங்கள் என்ற கட்டுரைகளில் அந்த அந்த நாடுகளில் உள்ள இனவாதத்தைப் பதிவு செய்ய முடியாது. எல்லா இடங்களிலும் நிலைமை ஒரே மாதிரி இல்லை என்பதோ, பண்பாட்டுத் தாக்கங்களோ பெண்கள் ஒடுக்குமுறைக்கு சமயங்கள் எவ்வாறு உதவியது என்பதையோ இல்லாமல் செய்து விடாது. ஆப்கானிசுத்தான், பாகிசுத்தானில் பெண்கள் கல்வியில் இசுலாமியியக் கருத்தாக்கத்தின் பாதிப்பு என்பது மிக விரிவாக ஆயப்பட்ட செய்திகளே. இசுலாமிலேயே பல உள் விமர்சனங்கள் இந்த நிலை பற்றி உள்ளது. --Natkeeran (பேச்சு) 12:57, 13 செப்டம்பர் 2013 (UTC)
ஆங்கில விக்கியில் Sexism என்ற ஒரு பெரிய கட்டுரை உள்ளது. ஆனால் அது பூரணமானதாக இல்லை. பெண் என்ற கட்டுரைக்குள் அந்தத் தகவல்கள் போகலாம் என்று கோரலாம், ஆனால் அது பொருத்தமன்று. இவ்வாறான ஒரு முக்கிய தலைப்பு திருத்தி எழுதப்பட வேண்டும் என்று கோருவது மிகச் சரியே. போதிய அவகாசம் தந்தால் இக் கட்டுரையை பல மடங்கு திருத்தி எழுத முடியும். அது வரைக்கும் என் பயனர் வெளிக்கு இக் கட்டுரையை நகர்த்த முடியும். --Natkeeran (பேச்சு) 13:02, 13 செப்டம்பர் 2013 (UTC)

இக்கட்டுரையில் பல சிக்கள்கள் உள்ளன[தொகு]

 1. இதன் பெரும் பகுதி இங்கிருந்து எடுக்கப்பட்டுள்ளது. இது பதிப்புரிமை மீறல் ஆகலாம்.
 2. எது ஒடுக்குமுறை என்பதை யார் வரையருப்பது? எ.கா: கிறித்தவத்தில் பெண்களுக்கு அருட்பொழிவு அளிக்கப்படாததை எத்தனையோ பெண்களே ஞாயப்படுத்தி ஏற்கும்போது, அதை பெண்கள் ஒடுக்குமுறை என எவ்வாறு வகைப்படுத்த முடியும்?
 3. தற்போதைய சமய வழக்கங்கள் பெண்களை ஒடுக்குகின்றன என்று முடிவு செய்யப்பட்டுவது போல இக்கட்டுரையின் தலைப்பு அமைந்துள்ளது. இவ்வழக்கங்களுக்கு சமயத்தரப்பினர் கூறும் எத்தகைய காரணங்களும் இக்கட்டுரையில் விளக்கப்பட வில்லை.
 4. இக்கட்டுரையின் மிக முக்கிய நோக்கம், வார்ப்புரு:இறைமறுப்புஇல் சேர்க்கப்படுவதாற்காகவே அமைந்துள்ளது போல தோன்றுகின்றது. (ஆங்கில விக்கியில் இத்தகையக்கட்டுரை இதற்கு சமமான வார்ப்புருவில் இல்லை என்பதை நோக்குக) பெண்கள் ஒடுக்குமுறையும் சமயமும் என்னும் தலைப்பில் இருக்கும் வரை சமயத்தரப்பினர் கருத்துகளுக்கு இக்கட்டுரையில் இடமிருக்காது.

சமயத்தில் பெண்கள் (en:Women and religion) என்பதே சரியானத் தலைப்பாக இருக்கும். --ஜெயரத்தின மாதரசன் \உரையாடுக 09:20, 13 செப்டம்பர் 2013 (UTC)

 • முதலாவது மிகவும் தவறான குற்றச்சாட்டு. வலைப்பதிவு கட்டுரையே விக்கியில் இருந்து எடுக்கப்பட்டுள்ளது. இதை வரலாற்றுப் பக்கம் கொண்டு உறுதி செய்யலாம். இது அந்த வலைப்பதிவிலேயே குறிப்பிட்டு இருக்கிறார்கள். எனவே மிகவும் மேம்போக்காக இந்தக் குற்றச்சாட்டு முன்வைக்கப்பட்டுள்ளது.
 • இக் கட்டுரை விரிவு செய்யப்படலாம்.
 • சமயத்தில் பெண்கள் ஒடுக்குமுறை - உருசியாவில் இனவாதம் என்றால் உருசியாவில் இனங்கள் என்ற கட்டுரை போதுமானது அல்ல.
 • ஆமாம். இக் கட்டுரை இறைமறுப்பு முன்வைக்கும் ஒரு முக்கிய வாதத்தின் விரிவாக்கமாகவும் அமையும். அதில் தவறு இருப்பதாகக் கருதவில்லை.

--Natkeeran (பேச்சு) 12:48, 13 செப்டம்பர் 2013 (UTC)

 1. ஐயா தயவு செய்து வரலாற்று பக்கத்தினை மீண்டுமொருமுறை பார்க வேண்டுகின்றேன், ஆகஸ்ட் 27, 2012இல் வலைப்பதிவு இடப்பட்டுள்ளது. விக்கியில் மே 12, 2013 வரை எதுவும் இல்லை. (காண்). எப்படி நீங்கள் வலைப்பதிவு கட்டுரையே விக்கியில் இருந்து எடுக்கப்பட்டுள்ளது என்கின்றீர்கள்? அல்லது நான் ஏதேனும் தவறாக காண்கின்றேனா? மன்னிக்கவும். இப்போது புரிந்தது.
 2. இக்கட்டுரை விரிவு செய்யப்பட இத்தைலைப்பில் எப்படி இயலும்? விக்கிப்பீடியா ஒருசார்புடையதாக இருத்தல் கூடாது. ஆனால் தலைப்போ சமயம் பெண்களை ஒடுக்குகின்றது என்ற ஒரு கருத்தை ஏற்று அதனை நியாயப்படுத்தும் முயற்சிபோன்றே தோன்றுகின்றது.
 3. உருசியாவில் இனவாதம் என்பது வேறு, உருசியர்களின் இனவாதம் என்பது வேறு. உருசியர்களின் இனவாதம் என்னும் தலைப்பில் கட்டுரை எங்கணம் துவங்க இயலாதோ அவ்வாறே இத்தலைப்பும் சரியாகத்தோன்றவில்லை. உருசியாவில் நிலவிய/நிலவும் இனவாதம் குறித்து கட்டுரை எழுதலாம். ஆனால் உருசியர் எல்லோரும் இனவாதிகள் என்பது எவ்வாறு சரியாகும்?
 4. இக் கட்டுரை இறைமறுப்பு முன்வைக்கும் ஒரு முக்கிய வாதத்தின் விரிவாக்கமாகவும் அமையும். - இவ்வாதத்திலும் இக்கட்டுரையினை வார்ப்புரு:இறைமறுப்புஇல் இடுவதிலும் எனக்கு முற்றிலும் உடண்பாடில்லை. இக்கட்டுரை இறைமறுப்பு முன்வைக்கும் வாதமானால் இக்கருத்தினை யார் ஏற்கின்றனர்? அதாவது, சமயம் பெண்களை ஒடுக்குவதால் கடவுள் இல்லை என யார் கூறுகின்றனர்? அதனை பெரும்பான்மையான இறைமறுப்பாளர்கள் ஏற்கின்றனரா? இக்கருத்தை இதுவே முதன் முறையாக கேட்கின்றேன். (இறைமறுப்பு என்பது சமுதாய சீர்திருத்தம் என்பதும் வேவ்வேறானது. இறைமறுப்பு கருத்துகள் இறைமறுப்பாளர்களின் கருத்துகள்) ஒரு சமயதில் இருக்கும் நபர்கள் அச்சமயத்தினை பின்பற்றும் விதத்தைக் கொண்டு, இறைமறுப்பினை எவ்வாறு நிலை நாட்ட இயலும்? சமயம் தீங்கிழைப்பதால் எவ்வாறு இறைமறுப்பு உண்மையாகும்?
 5. திரு. பவுல் முன்பகுதியில் கூறியுள்ளதை உங்கள் கவணத்திற்கு கொண்டுவர வேண்டுகின்றேன். எது ஒடுக்குமுறை என்பதை யார் தீர்மானிப்பது? இக்கட்டுரையில் கூறியவை எதுவுமே ஒடுக்குமுறை அல்ல என ஒருவர் கூறுவாராயின், அப்போது, இத்தலைப்பு தமிழ் விக்கிப்பீடியா ஒருசார்புடையதாக இருப்பதாகக் காட்டும் அல்லவா? --ஜெயரத்தின மாதரசன் \உரையாடுக 13:33, 13 செப்டம்பர் 2013 (UTC)
 • இந்தக் கட்டுரை இறைமறுப்புக் கட்டுரையின் ஒரு பகுதியே. அக் கட்டுரை 2011 காலப் பகுதியில் எழுதப்பட்டது. வலைப்பதிவில் விக்கியில் இருந்து பெறப்பட்டது என்று குறித்துள்ளார்கள்.
 • நடுநிலை என்பது ஒரு செய்தியை தவர்ப்பது அன்று. ஐக்கிய அமெரிக்காவில் அடிமைத்தனம் என்ற ஒரு கட்டுரை ஐக்கிய அமெரிக்க அடிமைத்தனத்தை நியாப்படுத்தாது.
 • சமயத்தில் பெண் ஒடுக்குமுறை என்று மாற்றலாம். உருசியாவில் இனவாதம் என்ற கட்டுரையில் உருசியாவில் இனவாதத்துக்கு எதிரான அமைப்புக்கள், செயற்பாடுகள் குறித்த தகவல்கள் இடம்பெறும். 👍 விருப்பம்--குறும்பன் (பேச்சு) 15:13, 13 செப்டம்பர் 2013 (UTC)
 • ஆமாம். பெண்களு ஒடுக்குமுறை இறைமறுப்பு முன்வைக்கு மிக முக்கியமான ஒரு வாதம். "ஒரு சமயதில் இருக்கும் நபர்கள் அச்சமயத்தினை பின்பற்றும் விதம்" மிக முக்கியமாக கருத்தில் எடுத்துக் கொள்ளப்பட வேண்டிய விடயம்.
 • யூதர்களின் இனப்படுகொலை (பெரும் இன அழிப்பு) நடக்கவில்லை என்று கூறுவோர்கள் இருக்கின்றனர். அதற்காக அது நிகழ்ந்துவிடவில்லை என்றோ, அல்லது அக் கட்டுரையில் அந்தக் கருத்துக்கு சமமான இடம் தரவேண்டும் என்று கோருவதோ முறையன்று. --Natkeeran (பேச்சு) 13:42, 13 செப்டம்பர் 2013 (UTC)
 • பெண்களின் ஒடுக்குமுறையினை இறைமறுப்புக்கு வாதமாக யார் முன்வைக்கின்றனர்? (I am sorry to write in English, but how can a person/group's actions determine the existence of God? How can that be a argument for the non-existence of God. By this you can say comment that a religion is not true, not the existence of God itself.)
 • எது பெண்களுக்கு எதிரான ஒடுக்குமுறை என்பதை யார் தீர்மானிப்பது? --ஜெயரத்தின மாதரசன் \உரையாடுக 14:15, 13 செப்டம்பர் 2013 (UTC)
 • ஒடுக்கு முறையை இறைமறுப்பு என்று சொல்லமுடியாது.
 • தகுதி இருந்தும் பெண் என்ற காரணத்துக்காக உரிமை மறுக்கப்பட்டால் அதை ஒடுக்குமுறை எனலாம்.--குறும்பன் (பேச்சு) 15:13, 13 செப்டம்பர் 2013 (UTC)
விரிவாகப் பதில் பின்னர் தருகிறேன். ஆனால் பெண் ஒடுக்குமுறை என்பதை வரையறை செய்வது கடினமானது இல்லை. பெண்களுக்கு எதிரனா வன்முறைகள், பெண்களுக்கான கல்வி மறுக்கப்படுதல், சொத்துரிமை போன்ற உரிமைகளில் உள்ள பாகுபாடு, தொழிலில் சம ஊதியம்/வாய்ப்பு வழங்கப்படாதல், பெண் என்பதால் ஒரு விடயத்தில் பங்கெடுக்க முடியாமல் செய்தல் உட்பட்டவற்றைக் கொண்டு பல அமைப்புகள் இதனை வரையறை செய்துள்ளன. --Natkeeran (பேச்சு) 16:02, 13 செப்டம்பர் 2013 (UTC)