உள்ளடக்கத்துக்குச் செல்

சந்திரகாந்தி

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
சந்திரகாந்தி
சந்திரகாந்தி
பரிமாறப்படும் வெப்பநிலைஇனிப்பு-விருந்துக்குப் பின்
தொடங்கிய இடம்இந்தியா
பகுதிஒடிசா
முக்கிய சேர்பொருட்கள்பாசிப் பயறு, அரிசி மாவு, சர்க்கரை, நெய்

சந்திரகாந்தி (Chandrakanti) என்பது பாசிப்பயறு மற்றும் அரிசி மாவிலிருந்து தயாரிக்கப்படும் இனிப்பு ஆகும். இரண்டு மாவுகளையும் பிசைந்து எண்ணெயில் நன்கு வறுத்து இதை தயார் செய்கின்றனர். சந்திரகாந்தி கிழக்கு இந்தியாவின் கடலோர ஒடிசா பகுதியில் தோன்றிய ஓர் இனிப்பாகும்.[1]

தேவையான பொருட்கள்

[தொகு]

செய்முறை

[தொகு]

சந்திரகாந்தி இனிப்பினைத் தயார் செய்ய பாசிப்பருப்பு மற்றும் அரிசியை 1 மணி நேரம் தண்ணீரில் ஊற வைக்கவேண்டும். பின்னர் பாசிப்பருப்பு மற்றும் அரிசியை சுத்தமாக கழுவி சிறிது தண்ணீர் விட்டு அரைக்கவேண்டும். பாசிப்பருப்பின் மாவுக்கு சமமான அளவில் பாத்திரம் ஒன்றில் சர்க்கரையுடன் தண்ணீரை கொதிக்க வைக்கவும். தண்ணீர் கொதித்ததும், அரைத்தமாவினை சுவைக்கு ஏற்ப சிறிது உப்புடன் சேர்க்கவும். கலவையின கிளறவேண்டும். தீயைக் குறைத்து கெட்டியாகும் வரை கிளறவும். பதம் வந்தவுடன் (மாவு ஒட்டவில்லை என்றால்) அடுப்பிலிருந்து இறக்கவேண்டும். பின்னர் ஒரு அகலமான தட்டில் நெய் தடவி அதன் மீது வேகவைத்த கலவையை கொட்டவேண்டும். கால் மணி நேரம் கலவை குளிர்ச்சியடைய விடவும். பின்னர் நாம் விரும்பும் வடிவங்களில் துண்டு போட்டு வாணலியில் எண்ணெயைச் சூடாக்கி, வெட்டிய துண்டுகளைச் பொன்னிறமாகும் வரை குறைவான தீயில் வறுத்து எடுக்கவேண்டும்.[2]

மேற்கோள்கள்

[தொகு]
  1. https://www.betterbutter.in/recipe/124794/chandrakanti
  2. "காப்பகப்படுத்தப்பட்ட நகல்". Archived from the original on 2022-02-13. பார்க்கப்பட்ட நாள் 2022-02-13.
"https://ta.wikipedia.org/w/index.php?title=சந்திரகாந்தி&oldid=3641516" இலிருந்து மீள்விக்கப்பட்டது