சந்தியா ராசு
பைரராசு சந்தியா ராசு (Byrraju Sandhya Raju) (பிறப்பு சந்தியா ) இந்திய குச்சிப்புடி நடனக் கலைஞரும் மற்றும் நடிகையுமாவார்.[1] இவர் தேசிய திரைப்பட விருது பெற்றவர்.
ஆரம்ப கால வாழ்க்கை
[தொகு]சந்தியா, தனது ஆரம்பக் கல்வியை கிருஷ்ணமூர்த்தி அறக்கட்டளையின் சென்னை தி ஸ்கூல் கே.எஃப்.ஐ பள்ளியிலும், சென்னை பால வித்யா மந்திரில் உயர்நிலைக் கல்வியையும் முடித்தார். சென்னை இலயோலாக் கல்லூரியில் சிறிது காலம் படித்து பின்னர் உசுமானியா பல்கலைக்கழகத்தில் உளவியலில் இளங்கலைப் பட்டம் பெற்றார். இவர், வேம்பதி சின்ன சத்யம் அவர்களிடம் தனது பத்து வயதில் குச்சிப்புடி நடனப் பயிற்சியைத் தொடங்கினார். பின்னர் கிசோர் மொசலிகண்டி அவர்களிடமும் பயிற்சி பெற்றார்.[2]
தொழில்
[தொகு]இவர் 2013 ஆம் ஆண்டு வெளியான யாதோன் கி பாரத் என்ற இந்திக் குறும்படத்தின் மூலம் நடிப்பில் அறிமுகமானார். பின்னர், 2017இல் கேர்ஃபுல் என்ற படத்தின் மூலம் மலையாளத் திரைப்படத்துறையில் அறிமுகமானார்.[3] இது பன்னாட்டு நடன நாள் அன்று வெளியான நாட்டியம் (2016) [4] என்ற குறும்படம் வெளியான சிறிது காலத்திலேயே வந்தது.[5][6] ராம்கோ நிறுவனத் தலைவர் பி.ஆர்.வெங்கட்ராம ராசாவின் மூத்த மகனான இவர், தொழிலதிபர் ராமலிங்க ராசுவின் மகன் ராமராசுவை மணந்தார்.[7] இவர் தனது குருவின் குச்சிப்புடியை வளர்த்தெடுக்க 'நிசிரிங்கலா நடன அகாதமி'யை நிறுவினார்.[8][9][10] தற்போது இவர் ராம்கோ குழுமத்தின் ஒரு அங்கமான சந்தியா ஸ்பின்னிங் மில்ஸின் நிர்வாக இயக்குநராகவும் உள்ளார்.
நாட்டியம் என்ற படத்தின் மூலம் தெலுங்கு திரையுலகில் அறிமுகமானார்.[11][12] இந்தப் படம் பல்வேறு நடன வடிவங்களைச் சுற்றி நடக்கும் காதல் நாடகமாக எடுக்கபட்டது.[13]
மேற்கோள்கள்
[தொகு]- ↑ Dundoo, Sangeetha Devi (13 March 2017). "For a spot of spontaneity" (in en-IN). The Hindu. பன்னாட்டுத் தர தொடர் எண்:0971-751X. https://www.thehindu.com/entertainment/movies/sandhya-raju-forays-into-feature-films-to-make-her-debut-in-the-malayalam-venture-careful/article17456453.ece.
- ↑ "Kuchipudi Kalakar: Kishore Mosalikanti". பார்க்கப்பட்ட நாள் 5 February 2021.
- ↑ "Sandhya Raju – Careful is a perfect debut for me" (in Indian English). பார்க்கப்பட்ட நாள் 23 February 2021.
- ↑ "'Natyam' will inspire all women: Sandhya Raju" (in ஆங்கிலம்). 22 January 2016. பார்க்கப்பட்ட நாள் 23 February 2021.
- ↑ "International Dance Day: 'Natyam' showcases a woman's love for dance" (in ஆங்கிலம்). 29 April 2016. பார்க்கப்பட்ட நாள் 23 February 2021.
- ↑ "Sandhya Raju took Kuchipudi to a world stage with her performance at an Austrian Museum" (in ஆங்கிலம்). பார்க்கப்பட்ட நாள் 23 February 2021.
- ↑ "Ramalinga Raju's kin turns entrepreneur" (in ஆங்கிலம்). பார்க்கப்பட்ட நாள் 23 February 2021.
- ↑ "Kuchipudi exponent Sandhya Raju raises funds for dance gurus in a novel way" (in ஆங்கிலம்). பார்க்கப்பட்ட நாள் 23 February 2021.
- ↑ "For a good cause: Sandhya Raju Raises COVID19 Hardship Fund to Aid Kuchipudi Guru's facing financial adversities" (in ஆங்கிலம்). 11 June 2020. பார்க்கப்பட்ட நாள் 23 February 2021.
- ↑ "In step with pandemic times" (in ஆங்கிலம்). 27 December 2020. பார்க்கப்பட்ட நாள் 23 February 2021.
- ↑ "Kuchipudi dancer Sandhya Raju's first-look from dance film Natyam - Times of India" (in ஆங்கிலம்). பார்க்கப்பட்ட நாள் 23 February 2021.
- ↑ "Kuchipudi dancer Sandhya Raju's first-look from dance film Natyam - Times of India" (in ஆங்கிலம்). பார்க்கப்பட்ட நாள் 5 February 2021.
- ↑ "Jr NTR launches teaser of Sandhya Raju's 'Natyam'" (in ஆங்கிலம்). பார்க்கப்பட்ட நாள் 23 February 2021.