கொ. கோ. பாலகிருஷ்ணன்
Appearance
கொனகுப்பக்காட்டில் கோபிநாதன் பாலகிருஷ்ணன் | |
---|---|
நீதியரசர் கே. ஜி. பாலகிருஷ்ணன், 2008இல் பிரேசிலிற்கு அலுவல்முறையாகச் சென்றபோது | |
37வது இந்தியத் தலைமை நீதிபதி | |
பதவியில் 14 சனவரி 2007 – 12 மே 2010 | |
நியமிப்பு | ஆ. ப. ஜெ. அப்துல் கலாம் |
முன்னையவர் | வொய். கே. சபர்வால் |
பின்னவர் | சரோஷ் ஹோமி கபாடியா |
தனிப்பட்ட விவரங்கள் | |
பிறப்பு | 12 மே 1945 தலயோலப்பறம்பு, திருவனந்தபுரம், கேரளம் |
துணைவர் | நிர்மலா பாலகிருஷ்ணன் |
முன்னாள் கல்லூரி | அரசு சட்டக் கல்லூரி, எர்ணாகுளம் |
கொனக்குப்பக்காட்டில் கோபிநாதன் பாலகிருஷ்ணன் (Konakuppakatil Gopinathan Balakrishnan, பரவலாக கே. ஜி. பாலகிருஷ்ணன்) (மலையாளம்: കൊനകുപ്പക്കാട്ടില് ഗോപിനാഥന് ബാലകൃഷ്ണന്, பி. 12 மே 1945) இந்தியாவின் தேசிய மனித உரிமை ஆணையத்தின் தற்போதைய அவைத்தலைவர் ஆவார். இவர் முன்னதாக இந்திய உச்ச நீதிமன்றத்தின் 37ஆவது தலைமை நீதிபதியாக பொறுப்பாற்றியவர்.
இவர் கேரளத்திலிருந்து உச்ச நீதிமன்றத்தில் தலைமை நீதிபதியாக பணியாற்றிய முதல் நீதியரசர் என்ற பெருமையும் தலித் சமுதாயத்திலிருந்து இந்த உயரிய பதவிக்கு எட்டிய முதல் குடிமகன் என்ற பெருமையும் உடையவர். இந்திய உச்ச நீதிமன்றத்தில் மிக நீண்ட காலம் பதவி வகித்தவர்களில் ஒருவராகவும் மூன்றாண்டுகள் பணிபுரிந்த பாலகிருஷ்ணன் விளங்குகிறார்.