உள்ளடக்கத்துக்குச் செல்

கெர்மாடெக் தீவுகள்

ஆள்கூறுகள்: 29°16′37″S 177°55′24″W / 29.27694°S 177.92333°W / -29.27694; -177.92333
கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
Kermadec Islands
Location (in green rectangle) in the Pacific Ocean
புவியியல்
ஆள்கூறுகள்29°16′37″S 177°55′24″W / 29.27694°S 177.92333°W / -29.27694; -177.92333
மொத்தத் தீவுகள்around 16
பரப்பளவு33.6 km2 (13.0 sq mi)
உயர்ந்த ஏற்றம்516 m (1,693 ft)
நிர்வாகம்
மக்கள்
மக்கள்தொகைabout 6[1]

கெர்மாடெக் தீவுகள் (Kermadec Islands (/ˈkɜːrmədɛk/ KUR--dek; மாவோரி மொழி: Rangitāhua)[2]) என்ற தீவுக்கூட்டமானது, அயன அயல் மண்டலத்திலுள்ள தெற்கு அமைதிப் பெருங்கடலில் உள்ளது. இத்தீவுக்கூட்டம் நியூசிலாந்தின் பகுதியாகும். இத்தீவுகள் நியூசிலாந்தின் வடக்குத் தீவிலிருந்து வடகிழக்கில் 800–1,000 km (500–620 mi) தூரத்தில் இருக்கிறது. இதே தொலைவில் வடமேற்கே தொங்கா இருக்கிறது. இத்தீவுக்கூட்டத்தின் பரப்பளவு 33.6 km2 (13.0 sq mi) ஆகும்.[3] மொத்த பரப்பளவின் பெரும்பகுதி மனிதர் வாழ்வதில்லை. இருப்பினும், இராவுல் தீவு நிலையத்தில் மானுடர் வாழ்கின்றனர்.

இராவுல் தீவு நிலையம்

[தொகு]
வானில் இருந்து இராவுல் தீவு நிலையத் தோற்றம்

இந்நிலையத்தில் வானிலையியல் அலுவலகமும், வானொலி நிலையமும், நியூசிலாந்து வளங்காப்புத் துறை பணியாளர்கள், தன்னார்வலர்கள் ஆகியோர்களுக்கான விடுதியும் (1937 ஆம் ஆண்டு முதல்) அமைந்துள்ளது. இந்நிலையமே நியூசிலாந்தின் வடபகுதி எல்லை பாதுகாப்பு அலுவலகம் ஆகும்.

அணு சோதனை

[தொகு]

1955 ஆம் ஆண்டு, பிரித்தானிய அரசாங்கம் மக்கள் அடர்வு இல்லாத தூரமான இடங்கள், அணு சோதனைக்கு தேவைப்பட்டது. பிரித்தானியாவின் ஐதரசன் குண்டு கருவிகளை வளர்த்தெடுப்பதற்கான தேர்ந்தெடுக்கப்பட இடங்களில் இத்தீவுக்கூட்டமும் ஒன்றாக இருந்தது.

காலநிலை

[தொகு]

இத்தீவின் காலநிலையானது அயன அயல் மண்டலம் ஆகும். இங்குள்ள சராசரி மாத வெப்பநிலை பிப்பிரவரி மாதத்தில் 22.4 °C (72.3 °F) இருக்கிறது. ஆகத்து மாதத்தில் வெப்பநிலை 16.0 °C (60.8 °F) ஆக இருக்கும். வருடாந்திர சராசரி மழை அளவு 1,500 mm (60 அங்) ஆகும். மிகக் குறைவான மழையளவு அக்டோபர் முதல் சனவரி வரை நிகழ்கிறது.

உயிர் வளங்கள்

[தொகு]
  • இத்தீவில்113 கலன்றாவரங்கள் உள்ளன. அவற்றில் 23 அகணியத் தாவரங்கள் இருக்கின்றன. 52மலைப்பாசிகள் உள்ளன. 89 பூஞ்சைப்பாசிகளும், பூஞ்சைகளும் தனித்துவமான தாவரயினங்களாக திகழ்கின்றன. இத்தீவின் பெரும்பாலான தாவரங்கள், நியூசிலாந்தில் இருந்தே கொண்டு வரப்பட்டன. இது போல 152 அறிமுகப்படுத்தப்பட்ட இனங்களாக உள்ளன.
  • இத்தீவிற்கே உரிய பாலுட்டிகள் இல்லை என ஆவணப்படுத்தப் பட்டுள்ளது. பல கடற்பறவைகளின் இனப்பெருக்க இடமாக இத்தீவுகள் உள்ளன.

மேற்கோள்கள்

[தொகு]
  1. "New Zealand Volcano Erupts". CBS News. 16 March 2006. Archived from the original on 18 June 2020. பார்க்கப்பட்ட நாள் 18 June 2020.
  2. "Kermadec Islands". Te Ara – the Encyclopedia of New Zealand. பார்க்கப்பட்ட நாள் 21 மார்ச்சு 2024.
  3. "Data Table – Protected Areas – LINZ Data Service (recorded area 3359.9864 ha)". Land Information New Zealand. பார்க்கப்பட்ட நாள் 21 மார்ச்சு 2024.
"https://ta.wikipedia.org/w/index.php?title=கெர்மாடெக்_தீவுகள்&oldid=3914217" இலிருந்து மீள்விக்கப்பட்டது