குளுக்கோசு ஏற்புத்திறன் சோதனை
குளுக்கோசு ஏற்புத்திறன் சோதனை அல்லது குளுக்கோசைப் பொறுத்துக் கொள்ளும் சோதனை (OGTT: Glucose tolerance test) என்பது மனித உடலில் இருந்து குருதி எடுக்கப்பட்டு அதைச் சோதனைக்கு உட்படுத்தி அதில் குளுக்கோசு எந்த அளவு உள்ளது எனக் கண்டறியும் சோதனை.[1] சோதனையின் முடிவைப் பொறுத்து மனிதனுக்கு நீரிழிவு நோய், உடலின் இன்சுலின் செயல்பாட்டைத் தடுக்கும் திறன் (Insulin resistance) போன்றவறை உறுதிப்படுத்தலாம். பொதுவாக முதலில் இரத்த மாதிரி எடுக்கப்பட்டு அதன் பின் குளுக்கோசானது வாய் வழியாக உட்கொள்ளப்பட்டு அதன் பின் ஒவ்வொரு மணிக்கு ஒருமுறை வீதம் இரத்த மாதிரிகள் எடுக்கப்பட்டு அவற்றை சோதனைக்கு உட்படுத்தி இரத்தத்தில் கலந்துள்ள சர்க்கரையின் அளவு மாறுபாட்டை காணலாம்.[2] இந்தச் சோதனையை 1970-ல் உலகச் சுகாதார அமைப்பு நெறிப்படுத்தியது.
நடைமுறைகள்
[தொகு]பரிசோதனைக்கு உட்படுபவர் சோதனைக்கு முன்னான 8 முதல் 10 மணி நேரங்கள் தண்ணீர் தவிர பிற உணப்பொருட்கள் (குறிப்பாக கார்போஹைடிரேட் உணவு வகைகள்) உட்கொள்ளாமல் இருக்க வேண்டும். உடல் நலக்குறைவாய் இருக்கும் போது இச்சோதனையை செய்யக்கூடாது. அப்போது தவறான முடிவுகளைக் காட்டும் சாத்தியக்கூறுகள் அதிகம். உடல் எடை 42.6 கிலோகிராமுக்குக் குறைவாக இருப்பவர்களுக்கு முழு மனிதனுக்குக் (கொடுக்கப்படும் குளுக்கோஸின் அளவு கீழே கொடுக்கப்பட்டுள்ளது) கொடுக்கும் அளவுக்கு குளுக்கோஸ் கொடுப்பதில்லை. பொதுவாக இச்சோதனை காலை வேளையில் செய்யப்படுகிறது.
சோதனைமுறை
[தொகு]- முதலில் குளுக்கோஸ் குடிப்பதற்கு முன் இரத்தம் சோதனைக்கு எடுத்துக் கொள்ளப்படுகிறது.
- பின்னர் சோதனைக்கு உட்படுபவருக்கு குடிப்பதற்கு நிர்ணயிக்கப்பட்ட அளவு குளுக்கோஸ் கொடுக்கப்படுகிறது. அதை 5 நிமிடங்களுக்குள் அருந்தி முடிக்க வேண்டும்.
- சோதனையின் நோக்கத்தைப் பொறுத்து குறிப்பிட்ட இடைவெளிகளில் இரத்த மாதிரிகள் சோதனைக்காக அவரின் உடலிலிருந்த்து எடுக்கப்படுகின்றன.
- குளுக்கோஸ் அருந்தியதிலிருந்து 2 மணிநேரம் கழித்து எடுக்கப்படும் இரத்தமாதிரி மிக முக்கியமானதாகக் கருதப்படுகிறது.
கொடுக்கப்படும் குளுக்கோஸின் அளவு
[தொகு]- அமெரிக்காவில் உடலின் எடையைப் பொறுத்து வாய்வழி உட்கொள்ளக் கொடுக்கப்படும் குளுக்கோஸின் அளவு மாறுபடும். 1970 களில் 1 கிலோகிராம் எடைக்கு 1.75 கிராம்கள் எனும் வீதத்தில் கணக்கிடப்படும். அதிகபட்சம் 75 கிராம்கள் வரை கொடுக்கலாம். 1975 களில் 100 கிராம்கள் வரை கொடுக்கப்பட்டது.
- உலக சுகாதார அமைப்பு ஒரு மனிதனுக்கு 75 கிராம்கள் என வரையறை செய்துள்ளது. குழந்தைகளுக்கு அவர்களின் உடல் எடையைப் பொறுத்து மாறுபடும்.[3]
சோதனை முடிவு
[தொகு]- முதலில் குளுக்கோஸ் அருந்துவதற்கு முன் (Fasting plasma glucose) எடுக்கப்பட்ட இரத்தத்தில் குளுக்கோஸின் அளவு 6.1 mmol/L என்ற அளவில் இருக்க வேண்டும்.
- 6.1 முதல் 7 mmol/L வரை இருந்தால் அது உடலில் குளுக்கோஸ் தேவையின் எல்லையைவிட அதிகம் எனக் கொள்ளலாம். (Impaired fasting glycaemia)
- 7.0 mmol/L விட அதிகமாக இருந்தால் அது நீரிழிவு நோய் என கொள்ளப்படும்.
- குறிப்பு: mmol/L என்பது மில்லிமோல்கள்/லிட்டர் அல்லது மில்லிமோலார்கள்/லிட்டர்.
மேற்கோள்கள்
[தொகு]- ↑ மெஷ் Glucose+Tolerance+Test
- ↑ Institute for Quality and Efficiency in Health Care. "Glucose tolerance test: how does it work exactly?". Informed Health Online. Institute for Quality and Efficiency in Health Care. பார்க்கப்பட்ட நாள் 22 June 2013.
- ↑ World Health Organization and International Diabetes Federation (1999). Definition, diagnosis and classification of diabetes mellitus and its complications. Geneva, Switzerland: World Health Organization.