உள்ளடக்கத்துக்குச் செல்

காட் ஆஃப் வார்: அசென்ஷன்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.

காட் ஆஃப் வார்: அசென்ஷன் (God of War: Ascension) என்பது சாண்டா மோனிகா ஸ்டுடியோவால் உருவாக்கப்பட்டு சோனி கம்ப்யூட்டர் என்டர்டெயின்மென்ட் நிறுவனத்தால் வெளியிடப்பட்ட மூன்றாம் நபர் அதிரடி-சாகச நிகழ்பட விளையாட்டு ஆகும். பிளேஸ்டேஷன் 3 (பிஎஸ் 3) கன்சோலுக்காக இந்த விளையாட்டு முதலில் மார்ச் 12, 2013 அன்று வெளியிடப்பட்டது. அது காட் ஆஃப் வார் விளையாட்டுத் தொடரின் எழாவது பதிப்பு ஆகும். கிரேக்க புராணங்களில் உள்ள பழிதீர்க்கும் கதையினை அடிப்படையாகக் கொண்டது.ஒலிம்பியன் கடவுள்களுக்கு சேவை செய்யும் ஸ்பார்டன் வீரரான கதாநாயகன் க்ராடோஸை இந்த விளையாட்டினை விளையாடும் வீரர் கட்டுப்படுத்தும் வகையில் இது அமைக்கப்பட்டுள்ளது.கிராடோசினைக் எராஸ் குழப்பமுறச் செய்து அவரின் மனைவிமற்றும் குழந்தைகளைக் கொலை செய்கிறார்இந்த துயரத்திற்கு பதிலளிக்கும் விதமாக, கிராடோஸ் ஏரெஸை கைவிட்டு, கடவுளுக்கு அளித்த இரத்த உறுதிமொழியை மீறுகிறார். எனவே க்ராடோஸ் சிறையில் அடைக்கப்பட்டு சித்திரவதை செய்யப்பட்டார், அங்கு ஆர்கோஸ் என்பவர் உதவியுடன் இவர் சிறையில் இருந்து தப்பிச் செல்கிறார்.

விளையாட்டு

[தொகு]

காட் ஆஃப் அசென்சன் ஒரு மூன்றாம் நபர் சாகச கானொளி விளையாட்டு ஆகும். மெய்நிகர் ஒளிப்படக் கருவி அமைப்பு மூலமாக இதனைக் கானும்வகையில் விளையாட்டானது அமைக்கப்பட்டிருக்கும். இந்த விளையாட்டினை விளையாடுபவர்கள் கதையின் நாயகனான கிராடோஸ் என்பவரினைக் கட்டுப்படுத்தலாம் மேலும் புதிர் விளையாட்டு மற்றும் போர்களில் கிரேக்கம் புராண இறவாத வீரர்கள், உள்ளிட்ட பகைவர்களை , மெதூசா மற்றும் கோர்கன், சைக்ளோப்ஸின், ராய்த்ஸ , செண்ட்டார்கள், மற்றும் எதிரிகள்- ஹைட்ரா மற்றும் பண்டோராவின் கார்டியன் என்று அழைக்கப்படும் ஒரு மாபெரும் மினோட்டோர் போன்றவற்றில் கிராடோசின் செயல்களைக் கட்டுப்படுத்தலாம்.[1] விளையாடும் போது அந்த வீரர் சுவர்கள் மற்றும் ஏணிகளை ஏற வேண்டும், இடைவெளிகளில் குதிக்க வேண்டும், கயிறுகளில் ஊசலாடலாம், மேலும் விளையாட்டின் பிரிவுகளைத் தொடர விட்டங்களின் குறுக்கே சமப்படுத்த வேண்டும். சில புதிர்கள் பெட்டியை நகர்த்துவது போன்று எளிதானதாக இருக்கும். ஆனால் மற்றவை மிகவும் சிக்கலானவை, அதாவது விளையாட்டின் வெவ்வேறு பகுதிகளில் பல உருப்படிகளைக் கண்டுபிடிப்பது அடுத்த பகுதிக்குச் செல்வற்கான ஒரு கதவைத் திறக்க வேண்டும்.[1]

பாராட்டுக்கள்

[தொகு]

முந்தைய பதிப்புகளைப் போலல்லாமல், காட் ஆஃப் வார்: அசென்ஷன் எந்த விருதுகளையும் வென்றதில்லை, ஆனால் இது பல ஊடகங்களால் E3 2012 விருது வகைகளில் சிறந்த விளையாட்டிற்கான விருதுக்குப் பரிந்துரைக்கப்பட்டது. இந்த பரிந்துரைகளில் கேம் ராண்டிலின் சிறந்த அதிரடி / சாதனை மற்றும் பல நபர்கள் சேர்ந்து விளையாடும் விளையாட்டு விருது ,[2] சிறந்த பிஎஸ் 3 கேம் ஆகிய விருதுகளுக்குப் பரிந்துரை செய்யப்பட்டது. மேலும் ஜி 4 விருதுகளில் சிறந்த அதிரடி / சாதனை விளையாட்டுக்கு பரிந்துரை செய்யபட்டது. இந்த விளையாட்டு 2013 கோல்டன் ஜாய்ஸ்டிக் விருதுகளில் சிறந்த காட்சி வடிவமைப்புக்கு பரிந்துரைக்கப்பட்டதாகும் .[3] 2014 ரைட்டர்ஸ் கில்ட் ஆஃப் அமெரிக்கா நிகழ்பட விருதுகளில் சிறந்த எழுத்து வடிவத்திற்கான விருதுக்குப் பரிந்துரை ஆனது. மற்றும் 2014 ஆம் ஆண்டில் டைஸ் உச்சிமாநாட்டின் போது, ஒலி வடிவமைப்பிற்கான அகாடமி ஆஃப் இன்டராக்டிவ் ஆர்ட்ஸ் அண்ட் சயின்சஸ் விருதுக்கு பரிந்துரைக்கப்பட்டது .[4]

சான்றுகள்

[தொகு]
  1. 1.0 1.1 SCE Santa Monica Studio, ed. (2005)
  2. Keyes, Rob (June 13, 2012). "Game Rant's E3 2012 Awards: Nominations". Game Rant. Archived from the original on March 17, 2015. பார்க்கப்பட்ட நாள் December 12, 2013.
  3. Leack, Jonathan (August 29, 2013). "Golden Joystick Awards Announces Game of the Year 2013 Nominees". CraveOnline. AtomicMedia. Archived from the original on March 17, 2015. பார்க்கப்பட்ட நாள் December 12, 2013.
  4. Kaufman, Aaron (January 26, 2014). "God of War: Ascension Prestigious Nominations". SCE Santa Monica Studio. Sony Computer Entertainment America. Archived from the original on March 17, 2015. பார்க்கப்பட்ட நாள் July 8, 2014.
"https://ta.wikipedia.org/w/index.php?title=காட்_ஆஃப்_வார்:_அசென்ஷன்&oldid=2867472" இலிருந்து மீள்விக்கப்பட்டது