கல்லூரி சந்திரமௌலி
கல்லூரி சந்திரமௌலி | |
---|---|
பிறப்பு | 15 நவம்பர்1898 மோப்பாரு, குண்டூர் மாவட்டம், ஆந்திரப் பிரதேசம் |
இறப்பு | 21 சனவரி 1992 | (அகவை 93)
பணி | விடுதலைவீரர், பரோபகாரி |
கல்லூரி சந்திரமௌலி (ஆங்கிலம்: Kalluri Chandramouli; தெலுங்கு: கல்லூரி சந்திரமௌளி) (15 நவம்பர் 1898 – 21 ஜனவரி 1992) என்பவர் தென்னிந்தியாவின் ஆந்திரப் பிரதேச மாநிலத்தைச் சேர்ந்த இந்திய அரசியல்வாதி மற்றும் சுதந்திர ஆர்வலர் ஆவார்.
சுயசரிதை
[தொகு]சந்திரமௌலி 1898ஆம் ஆண்டு நவம்பர் 15 ஆம் தேதி ஆந்திர மாநிலம் குண்டூர் மாவட்டத்தில் உள்ள மோப்பரு கிராமத்தில் பிறந்தார். இவர் இசுக்கொட்லாந்தில் கல்வி பயின்றார் மற்றும் விவசாயத்தில் முதுகலைப் பட்டம் பெற்றார். இவர் இந்தியா திரும்பியதும், 1926-ல் சுதந்திர இயக்கத்தில் சேர்ந்தார். இந்தியத் தேசிய காங்கிரசின் உறுப்பினரான இவர் குண்டூர் மாவட்ட காங்கிரசு குழுவின் தலைவராக ஆனார். இவரது பதவிக் காலம் முழுவதும் ஆங்கிலேய அரசால் பலமுறை சிறையில் அடைக்கப்பட்டார். பின்னர் 1937 மற்றும் 1946-ல் சென்னை மாகாணத்தின் தெனாலி சட்டமன்ற உறுப்பினராகத் தேர்ந்தெடுக்கப்பட்டார். 1955ஆம் ஆண்டு ஆந்திரா மாகாணத்திற்கும் 1962ஆம் ஆண்டு ஆந்திரப் பிரதேசத்திற்கும் அதே பதவிக்குத் தேர்ந்தெடுக்கப்பட்டார்.