கலாமண்டலம் கிருட்டிணன் நாயர்
கலாமண்டலம் கிருட்டிணன் நாயர் | |
---|---|
பிறப்பு | 11 மார்ச்சு 1914 Cheruthazham Grama Panchayat |
இறப்பு | 15 ஆகத்து 1990 (அகவை 76) திருப்பூணித்துறை |
பணி | நடனக் கலைஞர் |
கலாமண்டலம் கிருட்டிணன் நாயர் (ஆங்கிலம்: Kalamandalam Krishnan Nair) (பிறப்பு: 1914 மார்ச் 11 - இறப்பு: ஆகஸ்ட் 15 1990) இவர் எல்லா காலத்திலும் மிகவும் புகழ்பெற்ற கதகளி கலைஞர்களில் ஒருவராக இருந்தார். மேலும் தென்னிந்தியாவில் கேரளாவிலிருந்து நான்கு நூற்றாண்டு பழமையான பரதநாட்டியத்தின்-நாடகத்தின் வரலாற்றில் மிகப் உயரிய இடத்தில் இருந்தார். இவர் சதைப்பற்றுள்ள, நெகிழ்வான மற்றும் சுத்தமாக வெட்டப்பட்ட முக அம்சங்களைக் கொண்டிருந்தார். அவை எந்தவொரு உணர்ச்சியையும் அற்புதமான சக்தியுடனும் சுலபத்துடனும் வெளிப்படுத்தும் சக்திவாய்ந்தவை. மேலும் இவரது வாழ்நாளில் கேரளா முழுவதும் நடைமுறையில் இருந்த கதகளியின் மாறுபட்ட பாணிகளை வெளிபடுத்தும் அளவுக்கு புத்திசாலியாக இருந்தார். [1]
இவர் பத்மஸ்ரீ மற்றும் சங்கீத நாடக அகாதமி விருது பெற்றுள்ளார். [2] கிருஷ்ணன் நாயர் ஒரு உண்மையான பல்துறை நபராவார். இவர் கதகளியில் எந்தவொரு பாத்திரத்தையும் வெளிப்படுத்தும் திறனைக் கொண்டிருந்தார். நளன், வீமன், அருச்சுனன, இருக்மாங்கதன் மற்றும் கர்ணன் போன்ற நல்லொழுக்கமான மற்றும் காதல் வேடங்களில் நடித்ததற்காக இவர் மிகவும் பரவலாக கொண்டாடப்பட்டார்.
பயிற்சி
[தொகு]கேரளாவின் வடக்கு மலபார் மாவட்டத்திலிலுள்ள கண்ணூர் மாவட்டத்தின் கண்ணூர் வட்டத்தைச் சேர்ந்த செருத்தாழம் என்ற ஊரை பூர்வீகமாகக் கொண்ட இவர், தனது இளம் பருவத்திலேயே குரு சந்து பணிக்கரின் கீழ் கதகளியில் பயிற்சியைத் தொடங்கினார். தனது 19வது வயதில் இவர் கேரள கலாமண்டலத்தின் இணை நிறுவனரும், கவிஞருமான வள்ளத்தோள் நாராயண மேனனால் கவனிக்கப்பட்டார். பின்னர், வடக்கு திருச்சூரில் உள்ள முலாங்குண்ணத்துக்காவு அருகே உள்ள தனது நிறுவனத்தில் கிருஷ்ணன் நாயரை மேனன் சேர்த்துக் கொண்டார். பத்திக்கம்தோடி ராவுண்ணி மேனன், தகழி குஞ்சு குறுப், காவலப்பறா நாராயணன் நாயர் மற்றும் மணி மாதவா சாக்கியர் போன்ற குருக்களின் கீழ் கிருஷ்ணன் நாயர் பலதரப்பட்ட பயிற்சிகளை மேற்கொண்டார்.
பத்மசிறீ விருது பெற்றவரும், புகழ்பெற்ற கூடியாட்ட நிபுணருமான நாட்டியச்சார்யா மணி மாதவ சாக்கியரிடமிருந்து கிருஷ்ணன் நாயர் ரச-அபினயம் குறித்து உயர் கல்வி பயின்றார். [3] மணி மாதவ சாக்கியர் கிருஷ்ணன் நாயருக்கு ஆழ்ந்த தாக்கத்தை ஏற்படுத்தினார். [4]
தனி பாணி
[தொகு]எந்தவொரு சவாலான பாத்திரத்தையும் செய்யும் அவரது திறமை மற்றும் ஒரு நெகிழ்வான மனநிலையானது, அவ்வப்போது சில புதிய கூறுகளுடன் சிறிய பாத்திரங்களைச் செய்யத் தூண்டியது. கிருஷ்ணன் நாயர் அநேகமாக ஒரு முன்னோடி கதகளி கலைஞராக இருந்தார்; இவர் உறுதியான ஒரு நிபுணராக இருந்தார்; கிருஷ்ணன் நாயர் கதாபாத்திரங்கள் மற்றும் சூழ்நிலைகளை யதார்த்தமாக சித்தரிப்பதில் மிகுந்த ஆர்வம் கொண்டிருந்தார். இது இவரை தெற்கு கேரளாவின் திருவிதாங்கூர் பகுதியில் மிகவும் பிரபலமாக்கியது. உண்மையில், இவரது அயல்நாட்டு பாணி அவரை மத்திய மற்றும் வடக்கு கேரளாவில் குறைந்த அங்கீகாரம் பெற்ற மேதையாக்கியது. இது இவரது ஆரம்ப நாட்களில் கலையை வளர்த்த இடங்களாகும். கிருஷ்ணன் நாயரின் சக்திவாய்ந்த பாணி அவருடைய பிற்கால வாழ்வில் அவருக்குப் பாராட்டைப் பெற்றுத்தந்தது.
சொந்த வாழ்க்கை
[தொகு]கிருஷ்ணன் நாயர், தனது வாழ்க்கையின் இரண்டாம் பாதியை நோக்கி, திருச்சூர் அருகே கொடுங்கல்லூரை தனது வீடாக மாற்றிக்கொண்டார். [5] இவர் கலாமண்டலம் கல்யாணிகுட்டி அம்மா என்பவரை மணந்தார். மலையாள நடிகர் கலாசாலா பாபு இவரது மகனாவார். கிருஷ்ணன் நாயர் ஆகஸ்ட் 15, 1990 இல் இந்திய சுதந்திர தினத்தன்று தனது 76 வயதில் இறந்தார்.
குறிப்புகள்
[தொகு]- ↑ "Unmatched range of expressions". The Hindu. பார்க்கப்பட்ட நாள் 13 August 2014.
- ↑ "SNA Awardees' List". Sangeet Natak Akademi. 2016. Archived from the original on 30 May 2015. பார்க்கப்பட்ட நாள் 5 February 2016.
- ↑ "காப்பகப்படுத்தப்பட்ட நகல்". Archived from the original on 2012-11-10. பார்க்கப்பட்ட நாள் 2019-12-26.
- ↑ Malayalam Literary Survey - Volume 13, Kerala Sahitya Akademi, 1991
- ↑ "The Hindu : In honour of the thespian couple". Archived from the original on 2003-06-30. பார்க்கப்பட்ட நாள் 2019-12-26.
{{cite web}}
: Unknown parameter|=
ignored (help)