உள்ளடக்கத்துக்குச் செல்

கற்றேனியர் சபை

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
கற்றேனியர் சபை
The Catenian Association
Named afterகற்றேனா (Catena, இலத்தீனில் சங்கிலி)
உருவாக்கம்1908
நிறுவப்பட்ட இடம்மான்செஸ்டர்
வகைகத்தோலிக்க உடன்பிறந்தோர் சமூகம்
தலைமையகம்கவென்ட்ரி, இங்கிலாந்து
உறுப்பினர்கள்
10,000
பேரதிபர்
டேவிட் ரௌலி
பெருஞ்செயலாளர்
பெர்னாட் நோவாக்ஸ்
மைய அமைப்பு
பெரும் பேரவை
சார்புகள்கத்தோலிக்க திருச்சபை
முழக்கம்நட்பு மற்றும் நம்பிக்கை மூலம் குடும்ப வாழ்வை வலுப்படுத்துதல்
வலைத்தளம்thecatenians.com

கற்றேனியர் சபை (Catenian Association) கத்தோலிக்க திருச்சபையின் ஒரு பொதுநிலை அமைப்பாகும். இவ்வமைப்பில் "உடன்பிறந்தோர்" (brothers) என அழைக்கப்படும் ஏறத்தாழ 10,000 பேர் வரையில்[1]) ஆங்கிலம்-பேசும் பல நாடுகளில் உறுப்பினராக உள்ளனர்.[2]

வரலாறு

[தொகு]

இவ்வமைப்பு 1908 ஆம் ஆண்டில் இங்கிலாந்து, மான்செஸ்டர் நகரில் சால்ஃபோர்டு உரோமன் கத்தோலிக்க ஆயர் லூயி சார்லசு காசர்டெலி என்பவரின் முயற்சியால் கத்தோலிக்கத் தொழில்-சார் மற்றும் வணிக நோக்குடைய ஆண்களை தமக்கிடையே சுய-உதவிகளுக்காகத் தொடர்புகளை ஏற்படுத்தும் முகமாகவும், சமூக, குடும்பப் பிணைப்புகளை உருவாக்கும் முகமாகவும் ஆரம்பிக்கப்பட்டது.

அமைப்பு

[தொகு]

கற்றேனியர் சபையின் தலைமையகம் இங்கிலாந்தின் கவென்ட்ரி என்ற நகரில் அமைந்துள்ளது. இதன் கிளைகள் (வட்டங்கள் என அழைக்கப்படுகின்றன) ஐக்கிய இராச்சியம், மால்ட்டா, அயர்லாந்து, சிம்பாப்வே, தென்னாப்பிரிக்கா, ஆத்திரேலியா, இந்தியா, ஆங்காங், மற்றும் வங்காளதேசம் ஆகிய நாடுகளில் அமைந்துள்ளன. ஐக்கிய இராச்சியம், மற்றும் ஆத்திரேலியாவில் இவ்வமைப்பு அதிக உறுப்பினர் எண்ணிக்கையுடன் மிகவும் பலமான அமைப்பாக உள்ளது. உலகில் மொத்தம் 300 உள்ளூர் வட்டங்கள் 21 மாகாணங்களாகப் பிரிக்கப்பட்டு இயங்குகின்றன.[3]

மேற்கோள்கள்

[தொகு]
  1. See this பரணிடப்பட்டது 2015-08-15 at the வந்தவழி இயந்திரம் information leaflet.
  2. "காப்பகப்படுத்தப்பட்ட நகல்". Archived from the original on 2013-06-14. பார்க்கப்பட்ட நாள் 2016-01-22.
  3. Statistics on the official national website பரணிடப்பட்டது 2015-08-10 at the வந்தவழி இயந்திரம் of the Catenians.

வெளி இணைப்புகள்

[தொகு]
"https://ta.wikipedia.org/w/index.php?title=கற்றேனியர்_சபை&oldid=3548633" இலிருந்து மீள்விக்கப்பட்டது