கராச்சி கோட்டம்
கராச்சி கோட்டம்
کراچی ڈویژن | |
---|---|
கோட்டம் | |
நாடு | பாகிஸ்தான் |
மாகாணம் | சிந்து மாகாணம் |
நிறுவப்பட்ட ஆண்டு | 2011 |
மாவட்டங்கள் | 6 |
அரசு | |
• வகை | பெருநகர மாநகராட்சி |
• மேயர் | ரவுப் அக்தர் பரூக்கி |
• ஆணையாளர் | சஜ்ஜஜ் உசைன் அப்பாசி |
நேர வலயம் | ஒசநே+5 (பாகிஸ்தான் சீர் நேரம் PST) |
அஞ்சல் சுட்டு எண் | 74XXX - 75XXX |
தொலைபேசி குறியிடு எண் | 021 |
கராச்சி கோட்டம் (Karachi Division) (உருது: کراچی ڈویژن ) பாகிஸ்தானின் நான்கு மாகாணங்களில் ஒன்றான சிந்து மாகாணத்தில் அமைந்த ஏழு கோட்டங்களில் ஒன்றாகும். இதன் நிர்வாகத் தலைமையிடம் கராச்சி நகரம் ஆகும்.
வரலாறு
[தொகு]முந்தைய கராச்சி கோட்டம் 2000-ஆம் ஆண்டில் கலைக்கப்பட்டு, அதன் ஐந்து மாவட்டங்களைக் கொண்டு கராச்சி நகர மாவட்டம் துவக்கப்பட்டது. கராச்சி நகர மாவட்டம் 18 ஊர்களாகவும், 178 கிராமக் ஒன்றியக் குழுக்களாகவும் பிரிக்கப்பட்டது. [1]
பின்னர் 11 சூலை 2011-இல் சிந்து மாகாண அரசு ஐந்து மாவட்டங்கள் கொண்ட கராச்சி கோட்டம் துவக்கியது. [2]
நவம்பர் 2013-இல் கராச்சி மாவட்டத்தில் சில பகுதிகளை கொண்டு கொராங்கி மாவட்டத்தை உருவாக்கி அதனை கராச்சி கோட்டத்தில் இணைக்கப்பட்டது. [3][4]
கோட்ட நிர்வாகம்
[தொகு]கராச்சி கோட்டத்தை நிர்வாக வசதிக்காக கராச்சி தெற்கு மாவட்டம், கராச்சி சதர் மாவட்டம், கராச்சி கிழக்கு மாவட்டம், கராச்சி மேற்கு மாவட்டம், கராச்சி மத்திய மாவட்டம், மலிர் மாவட்டம் மற்றும் கொராங்கி மாவட்டம் என ஆறு மாவட்டங்களாகப் பிரித்து நிர்வகிக்கப்படுகிறது.
மேற்கோள்கள்
[தொகு]- ↑ City District Government Karachi பரணிடப்பட்டது 2013-10-15 at the வந்தவழி இயந்திரம் Official Website
- ↑ Five districts of Karachi restored, Published in The News International on 11 July 2011, Retrieved on 5 August 2012
- ↑ dawn.com, Korangi notified as sixth district of Karachi
- ↑ The News, Korangi made sixth district of Karachi