கராச்சி கோட்டம்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
கராச்சி கோட்டம்
کراچی ڈویژن
கோட்டம்
Location of கராச்சி கோட்டம்
நாடுபாகிஸ்தான்
மாகாணம்சிந்து மாகாணம்
நிறுவப்பட்ட ஆண்டு2011
மாவட்டங்கள்6
அரசு
 • வகைபெருநகர மாநகராட்சி
 • மேயர்ரவுப் அக்தர் பரூக்கி
 • ஆணையாளர்சஜ்ஜஜ் உசைன் அப்பாசி
நேர வலயம்பாகிஸ்தான் சீர் நேரம் PST (ஒசநே+5)
அஞ்சல் சுட்டு எண்74XXX - 75XXX
தொலைபேசி குறியிடு எண்021

கராச்சி கோட்டம் (Karachi Division) (உருது: کراچی ڈویژن ) பாகிஸ்தானின் நான்கு மாகாணங்களில் ஒன்றான சிந்து மாகாணத்தில் அமைந்த ஏழு கோட்டங்களில் ஒன்றாகும். இதன் நிர்வாகத் தலைமையிடம் கராச்சி நகரம் ஆகும்.

வரலாறு[தொகு]

முந்தைய கராச்சி கோட்டம் 2000-ஆம் ஆண்டில் கலைக்கப்பட்டு, அதன் ஐந்து மாவட்டங்களைக் கொண்டு கராச்சி நகர மாவட்டம் துவக்கப்பட்டது. கராச்சி நகர மாவட்டம் 18 ஊர்களாகவும், 178 கிராமக் ஒன்றியக் குழுக்களாகவும் பிரிக்கப்பட்டது. [1]

பின்னர் 11 சூலை 2011-இல் சிந்து மாகாண அரசு ஐந்து மாவட்டங்கள் கொண்ட கராச்சி கோட்டம் துவக்கியது. [2]

நவம்பர் 2013-இல் கராச்சி மாவட்டத்தில் சில பகுதிகளை கொண்டு கொராங்கி மாவட்டத்தை உருவாக்கி அதனை கராச்சி கோட்டத்தில் இணைக்கப்பட்டது. [3][4]

கோட்ட நிர்வாகம்[தொகு]

கராச்சி கோட்டத்தை நிர்வாக வசதிக்காக கராச்சி தெற்கு மாவட்டம், கராச்சி சதர் மாவட்டம், கராச்சி கிழக்கு மாவட்டம், கராச்சி மேற்கு மாவட்டம், கராச்சி மத்திய மாவட்டம், மலிர் மாவட்டம் மற்றும் கொராங்கி மாவட்டம் என ஆறு மாவட்டங்களாகப் பிரித்து நிர்வகிக்கப்படுகிறது.

மேற்கோள்கள்[தொகு]

"https://ta.wikipedia.org/w/index.php?title=கராச்சி_கோட்டம்&oldid=3238455" இலிருந்து மீள்விக்கப்பட்டது