கங்கா சிங்
மகாராஜா கங்கா சிங் | |
---|---|
பிகானேரின் மகாராஜா | |
பிகானேரின் 21வது மகாராஜா | |
ஆட்சிக்காலம் | 1888–1943 |
முன்னையவர் | துங்கர் சிங் |
பின்னையவர் | சாதுல் சிங் |
பிறப்பு | 13 அக்டோபர் 1880 பிகானேர், பிகானேர் இராச்சியம், பிரித்தானிய இந்தியா |
இறப்பு | 2 பெப்ரவரி 1943 மும்பை, பம்பாய் மாகாணம், பிரித்தானிய இந்தியா | (அகவை 62)
வல்லப கன்வர் தன்வர் பட்டியான் | |
குழந்தைகளின் பெயர்கள் | இராம் சிங் சந்த் கன்வர் சாதுல் சிங் பிஜாய் சிங் வீர் சிங் சிவ கன்வர் |
தந்தை | இலால் சிங் அசகிப் மகாராஜா |
தாய் | சந்திராவதி |
மகாராஜா சர் கங்கா சிங் (Ganga Singh) (13 அக்டோபர் 1880 - 2 பிப்ரவரி 1943), 1888 முதல் 1943 வரை பிகானெர் (இந்தியாவின் இன்றைய ராஜஸ்தான் ) மாநிலத்தை ஆண்ட மகாராஜா ஆவார். ஏகாதிபத்ததிய போர் அமைச்சரவையின் உறுப்பினராக, இவர் வெர்சாய் அரண்மனையில் கண்ணாடி மண்டபத்தில் "அமைதி ஒப்பந்தம்" கையெழுத்தாகும் போது இருந்தார்.
இவர் ஒரு நவீன சீர்திருத்த தொலைநோக்கு பார்வையாளராக பரவலாக நினைவுகூரப்படுகிறார்.
சுயசரிதை
[தொகு]பிகானேர் மாநிலத்தின் ஆண்டுவந்த இராஜ்புத்திரக் குடும்பத்தைச் சேர்ந்த இலால் சிங் சாகிப் மற்றும் அவரது மனைவி சந்திரவதிஜி ஆகியோருக்கு 1880 ஆம் ஆண்டு அக்டோபர் 13 ஆம் தேதி விஜயதசமி நாளில் கங்கா சிங் பிறந்தார். [1]
இறப்பு
[தொகு]இவர் 56 ஆண்டுகால ஆட்சிக்குப் பிறகு தனது 62 வயதில் 2 பிப்ரவரி 1943 அன்று மும்பையில் இறந்தார். இவருக்குப் பின்னர் இவரது மகன் சாதுல் சிங் பிகானேரின்|மகாராஜா ஆனார்.
சாதனைகள்
[தொகு]- சிங் கங்கை கால்வாயை கட்டி புதிய பகுதிக்கு வந்து குடியேற மக்களை ஊக்கப்படுத்தினார். பஞ்சாபின் சுற்றுவட்டாரப் பகுதிகளில் இருந்து ஏராளமான மக்கள் அங்கு குடியேறினர். அவர்களில் பெரும்பாலும் நில உரிமையாளர்களான சீக்கிய குடும்பங்கள், 1920-களில் இந்த பகுதிக்கு குடிபெயர்ந்தனர்.
- 1899-1900 ஆம் ஆண்டு இப்பகுதியில் ஏற்பட்ட மிக மோசமான பஞ்சத்தை இவர் வெற்றிகரமாக சமாளித்தார். இந்தப் பஞ்சம், இப் பிரச்சனையில் இருந்து நிரந்தரமாக விடுபட ஒரு நீர்ப்பாசன அமைப்பை ஏற்படுத்த இளம் மகாராஜாவைத் தூண்டியது.
- இவர் சிறீ கங்காநகர் என்ற நகரத்தையும் அதன் சுற்றுப்புறப் பகுதியையும் ராஜஸ்தானின் மிகவும் வளமான தானியக் கிண்ணமாக உருவாக்கினார்
- இவர் 1902 மற்றும் 1926 க்கு இடையில் பிகானேரில் (இவரது தந்தை லால் சிங்கின் நினைவாக பெயரிடப்பட்டது) இலால்கர் அரண்மனையையும் கட்டினார்.
- இவர் இரயில்வே மற்றும் மின்சார வலையமைப்பை மாநிலத்திற்கு கொண்டு வந்தார்.
- சிறைச் சீர்திருத்தங்களை அறிமுகப்படுத்தினார். பிகானேர் கைதிகள் இந்தியாவின் தரைவிரிப்புகளை நெய்து தயாரித்து சர்வதேச சந்தைகளில் விற்பனை செய்தனர்.
- இவர் நகராட்சிகளுக்கு தேர்தல் போன்ற பகுதி உள் ஜனநாயகத்தை நிறுவினார். மேலும், உதவி மற்றும் ஆலோசனைக்காக ஒரு மந்திரி சபையை நியமித்தார்.
- சில நிலச் சீர்திருத்தங்களும் அறிமுகப்படுத்தப்பட்டன.
- இவர் தனது மாநிலத்தில் புதிய முயற்சிகளைத் தொடங்குவதற்கு அண்டை மாநிலத்தைச் சேர்ந்த தொழில்முனைவோர் மற்றும் விவசாயிகளைத் தூண்டினார்.
- இவர் 1931 ஆம் ஆண்டில் இராம்தேவ்ராவில் இராம்தேவ் பீரின் சமாதிக்கு சமாதி மேலே இருக்கும் கோவிலை கட்டினார்.
- பெண்கல்விக்காக பல பள்ளிகள் மற்றும் கல்லூரிகளை நிறுவினார்.
- தேஷ்நோக்கில் உள்ள கர்னி மாதா கோவிலின் பிரதான கதவுகளாகப் பயன்படுத்துவதற்காக அலங்காரமாக வடிவமைக்கப்பட்ட இரண்டு வெள்ளிக் கதவுகளை இவர் நன்கொடையாக வழங்கினார்.
சான்றுகள்
[தொகு]வெளி இணைப்புகள்
[தொகு]- Ganga Singh at realbikaner.com
- Ganga Singh at the British National Portrait Gallery