இராம்தேவ் பீர்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
Jump to navigation Jump to search
இராம்தேவ் பீர்
ரூனிச்சா மன்னர்
Ramdevra-03-20131009.jpg
இராம்தேவ்ராவிலுள்ள கோயிலில் குதிரையேறியவாறு இராம்தேவ் பீர்
துணைவர்நெடால்டு
மரபுதன்வார் பரம்பரை
தந்தைஅஜ்மல்
தாய்மினால்டு
அடக்கம்இராம்தேவ்ரா
சமயம்இந்து

இராம்தேவ் பீர் (Ramdev Pir) அல்லது ராம்தேவ்ஜி, பாபா ராம்தேவ்,[1] ராம்ஷா பீர்[2]) (1352 - 1385)(வி.நா. 1409 - 1442) இராச்சசுதான் மாநில இந்து நாட்டார் சாமி ஆவார். பதினான்காம் நூற்றாண்டில் மன்னராக ஆட்சி புரிந்த இவருக்கு அதிசய சக்திகள் இருந்ததாக மக்கள் நம்பினர்; தமது சிறப்பு ஆற்றலைக்கொண்டு ஏழைகளையும் பிற்பட்டவர்களையும் முன்னேற்ற தம் வாழ்நாளை அர்ப்பணித்தார். இன்றும் பல சமூகங்களுக்கு இவர் குலதெய்வமாக விளங்குகிறார்.[3][4] இவரை இந்துக்களும், முஸ்லிம்களும் சீக்கியர்களும் வணங்குகின்றனர்.[1]

இராம்தேவ் பீர் ஜெயந்தி[தொகு]

ராம்தேவ்ராவில் இரண்டு மாத விழாவின்போது பக்தர்கள் கூட்டம்

இராம்தேவ்ஜியின் பிறந்த நாள் அவருடைய பக்தர்களால் ஒவ்வொரு ஆண்டும் இராம்தேவ் பீர் செயந்தியாகக் கொண்டாடப்படுகிறது. இந்து நாட்காட்டியில் பாத்திரபத மாதத்தில் வளர்பிறையில் இரண்டாம் நாள் (திவிதியை) இவரது பிறந்த நாள் கொண்டாடப்படுகின்றது. இராச்சசுத்தானில் இது பொது விடுமுறை நாளாகும்; இந்நாளில் இராம்தேவ்ராவில் திருவிழாச்சந்தை கூடுகின்றது. இலட்சக் கணக்கான இந்துக்களும் முசுலிம்களும் கூடி இங்குள்ள சமாதியில் வழிபடுகின்றனர்.[5]

ஊடகங்களில்[தொகு]

இராம்தேவ்ஜியின் வாழ்க்கை வரலாற்றை ஒட்டி பாபா இராம்தேவ் என்ற இராச்சசுத்தானி மொழித் திரைப்படம் 1960களில் வெளியாயிற்று.

கோயிலுள்ள மற்ற இடங்கள்[தொகு]

பாபா இராம்தேவ்ஜியின் சமாதி, இராசத்தான்

இராம்தேவ் பாபாவிற்கு பல இடங்களில் கோயில்கள் எழுப்பப்பட்டுள்ளன. இவற்றில் சில :

  • கங்காசகர், பிகானேர், இராசத்தான்.
  • பிதுஜா, பலோத்ரா நகர் அருகே, பார்மர் மாவட்டம், இராசத்தான்.
  • நோகாமா (பாகிடோரா), பன்சுவாரா, இராசத்தான்
  • கட்டாக், ஒடிசா - கட்டாக் - புவனேசுவரம் சாலையில்
  • சோத்பூர், இராசத்தான் - மசூரியா மலையில் கோயில் அமைந்துள்ளது
  • திப்ரூகர், அசாம்
  • சென்னை, தமிழ்நாடு
  • இலதுகா, பெரோசுபூர், (பஞ்சாப்)
  • பாபா ராம்தேவ் கோயில், ராம்தேவ்நகர் கஞ்ச்பசோடா, போப்பால், மத்தியப் பிரதேசம்
  • பாபா ராம்தேவ் கோயில், தண்டோ அல்லாயர் (சிந்து) பாக்கித்தான்.

மேற்சான்றுகள்[தொகு]

வெளி இணைப்புகள்[தொகு]

"https://ta.wikipedia.org/w/index.php?title=இராம்தேவ்_பீர்&oldid=2927751" இருந்து மீள்விக்கப்பட்டது