உள்ளடக்கத்துக்குச் செல்

ககாயன் ஆறு (மிண்டனாவோ)

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.

ககயான் ஆறு, பொதுவாக ககயன் டி ஓரோ ஆறு என அழைக்கப்படும் ஆறு ஆகும். இது பிலிப்பீன்சில் உள்ள மிண்டனாவோ தீவின் மத்திய பகுதியில் தனது வடிநிலப் பகுதியைக் கொண்டுள்ள ஆறு ஆகும். இந்த ஆறானது புகிட்னொன் மாகாணத்தின் மத்தியப் பகுதியில் காணப்படும் கலாத்துங்கன் மலைத்தொடர் மற்றும் கித்தாங்கிளாட் மலைத் தொடர் ஆகியவற்றைத் தனது உற்பத்தியிடமாகக் கொண்டுள்ளது. இது தனது பயணத்தின் போது, தலகாக், பாவுங்கான் மற்றும் லிபோனா ஆகிய நகராட்சிகள் வழியாக பாய்ந்து, அனைத்து துணை நதிகளையும் இணைத்துக் கொண்டு செல்கிறது. இந்த ஆறு மிசாமிஸ் மாகாணத்தில் உள்ள மகாஜலார் குடாவில் ககயன் டி ஓரோ எனுமிடத்தில் கடலில் கலக்கிறது.

இந்த ஆறானது, புகிட்னொன் மாகாணம் மற்றும் இலிகான் ஆகியவற்றுக்கடையேயான அல்லது புகிட்னொன் மற்றும் ககயன் டி ஓரோவுக்கும் இடையேயான இயற்கையான எல்லையாக அமைகிறது.  பிலிப்பீன்சு பகுதியை அமெரிக்கர்கள் நிர்வாகம் செலுத்திய போது வழக்கொழிந்து போன மிண்டனாவோ மற்றும் சுலு ஆகியவற்றின் துறையால் பிறப்பிக்கப்பட்ட நிர்வாகரீதியான உத்தரவின் பேரில் இந்த ஆறானது இரண்டு தொடர்புடைய மாவட்டங்களின் எல்லையாகக் குறிப்பிடப்படுகிறது. பிலிப்பீன்சில் வெள்ளை நீர் படகுச்சறுக்கு விளையாட்டிற்கு ககாயன் ஆற்று மிகவும் பிரபலமான இடமாக உள்ளது, இது ககயன் டி ஓரோவின் முக்கிய சுற்றுலாத் தலமாக சுற்றுலாத்துறையால் ஊக்குவிக்கப்படுகிறது.

சொற்பிறப்பியல் அல்லது பெயர்க்காரணம்

[தொகு]

கடலோர முகத்துவாரங்கள், ஆற்றுங்கரைப்படுகைகள் மற்றும் அலைகளைக் கொண்ட நீரோடைகள் தொடும் துாரத்திலுள்ள, கடல் மட்டத்திலிருந்து குறைவான உயரமுடைய இடங்களில் மட்டுமே வளரக்கூடிய மால்வேசியே வகைக் குடும்பத்தின் ஹைபிஸ்கஸ் டிலியேசியஸ் என்ற லாம்பகோ மரங்கள் அதிகம் காணப்பட்ட காரணத்தினால் காலாம்பகௌசசகான் என்பது இந்த ஆற்றின் அசல் பெயராக இருந்தது.[1]எசுப்பானியர்களின் ககயன் டி ஓரோவிற்கான வருகையின் போது இந்த ஆற்றின் பெயரானது ககாயன் ஆறு என மாறுதலடைந்துள்ளது.[2][3] இந்த ஆற்றின் பெயரின் மூலமானது மலாய-பொலினீசிய வார்த்தையான ”அக்”(Ag) என்பதற்கான பொருள் ”நீர்” என்பதாகும். ககாய்(Kagay) என்பது ஆற்றையும், ககாயன் (Kagayan) என்பது ஆறு பாயும் பகுதியையும் குறிக்கும்.[4]

புவியியல்

[தொகு]

ஆற்றின் போக்கு

[தொகு]

இந்த ஆறு புகிட்டொன் மாகாணத்தின் மத்திய பகுதியில் உள்ள கலாத்துங்கன் மலைத்தொடரில் உற்பத்தியாகிறது. இது ககாயன் டி ஓரோவை நோக்கி வடக்கு திசையில் 90 கிலோமீட்டர் தொலைவு பாய்ந்து[5] மகாஜலார் குடாவில் கடலில் கலக்கிறது.

வடிநிலப்பகுதி

[தொகு]

இந்த ஆற்றின் வடிநிலப்பகுதியானது தோராயமாக 1,521 சதுர கிலோமீட்டர்கள் ஆகும்.[5] வடிநிலப்பகுதியின் எண்பது விழுக்காடானது (80%) புகிட்னொன் மாகாணத்திலும் மீதமுள்ளது இலிகானிலும் ககயன் டி ஓரோவிலும் அமைகிறது.

கிளை நதிகள்

[தொகு]

ககாயன் டி ஓரோ ஆற்றின் முக்கிய கிளை நதிகள் பின்வருமாறு:

  • காலாவைக் ஆறு
  • டாகைட் ஆறு
  • புபுனாவோன் ஆறு
  • டுமாலாவோங் ஆறு

சுற்றுலாத்தலம்

[தொகு]

வெள்ளை நீர் சறுக்குப் படகு விளையாட்டு மற்றும் காயாகிங்

[தொகு]
ககாயன் ஆற்றில் நிகழ்த்தப்படும் வெள்ளை நீர் படகுச்சறுக்கு மற்றும் ஆறேறுதல்

வெள்ளைநீர் சறுக்குப்படகு விளையாட்டு, பனிக்கடற் படகு, ஆறேற்றம்[6] ஆகியவை சுற்றுலாவை ஈர்க்கும் செயல்பாடுகளாக முன்னிறுத்தப்படுகின்றன. ககயன் டி ஓரோவின் நகர நிர்வாகம், மற்றும் பிலிப்பீன்சின் சுற்றுலாத்துறை இவற்றை சுற்றுலாச் செயல்பாடாக சுற்றுலாத்துறை இச்செயல்பாடுகளை சுற்றுலாவை அதிகரிப்பதற்கான விளம்பரச் செயல்பாடுகளாக மாற்றியுள்ளன.[7] வெள்ளைநீர் படகுச்சறுக்கு அல்லது பனிக்கடற்படகு விளையாட்டில் தாவிக் கீழே விழும் முனையமாக நகரிலிருந்து 30-40 நிமிட பயண நேரத்தில் அடையக்கூடிய ”பராங்கேய் மம்புயாயா” என்ற இடம் அமைந்துள்ளது.

சமீபத்தில் ககாயன் ஆற்றில் வெள்ளைநீர் சறுக்குப்படகு விளையாட்டானது பிலிப்பீன்சின் முன்னாள் அதிபர் குளோரியா மகபகல்-அர்ரொயோ மற்றும் நாட்டின் மிகப்பிரபலமாானோர், சாகசமிக்க, சவால் நிறைந்த விளையாட்டை முயன்று பார்த்த பிறகு, மேலும் புகழடையத் தொடங்கியுள்ளது.

மீன்பிடித் தொழில்

[தொகு]

இந்த ஆறானது ஒரு முக்கிய பருவகால நன்னீர் குறுமீன்பிடித் தொழில் களமாக உள்ளது. 2016 ஆம் ஆண்டில் இங்கு ஆண்டொன்றுக்கு மீன்பிடித் தொழில் மூலம் 500,000 அமெரிக்க டாலர்கள் அளவுக்கு ஈட்டித் தந்துள்ளது. ஒரு மீனவர், வாரமொன்றுக்கு, சராசரியாக 5 முதல் 15 கிலோகிராம் வரை மீன்களைப் பிடிக்கும் வகையின் அமைந்துள்ளது. இந்த ஆற்றின் தாழ்வான பகுதிகளில் முதிர்ச்சி அடையாத மீன்கள் பிடிக்கப்படுவது மீன்பிடித் தொழில் சரியாக நிர்வகிக்கப்படாமைக்கான சாட்சியாக விளங்குகிறது. இங்குள்ள உள்ளூர்வாசிகள் 1% முதல் 10% வரை பகுதி நேரமாகவாவது இத்தொழிலில் ஈடுபட்டு வருகின்றனர். இவற்றில் பெரும்பாலோர் ஆண்கள் ஆவர். முழுநேர மீன்பிடித் தொழிலாளர்கள் 1,000 முதல் 2,000 அமெரிக்க டாலர்களை ஆண்டொன்றுக்கு வருவாயாக ஈட்டுகின்றனர். இந்த வருமானமானது, வறுமைக்கோட்டுக்கு கீழே உள்ளோரின் வருமானமாகும்.

மேற்கோள்கள்

[தொகு]
  1. Streaming through Kalambagohan's history
  2. Cagayan de Oro: History
  3. "Welcome to Cagayan de Oro City: History & legend". Archived from the original on 2008-05-18. பார்க்கப்பட்ட நாள் 2017-11-12.
  4. "History of Cagayan de Oro". Archived from the original on 2019-11-10. பார்க்கப்பட்ட நாள் 2017-11-12.
  5. 5.0 5.1 "Principal River Basins of the Philippines", Published by the National Water Resources Board, October 1976 (p. 12)
  6. "Whitewater Kayaking with KayakDomain.com". Archived from the original on 2016-09-26. பார்க்கப்பட்ட நாள் 2017-11-14.
  7. Cagayan de Oro Tourism Website
"https://ta.wikipedia.org/w/index.php?title=ககாயன்_ஆறு_(மிண்டனாவோ)&oldid=3662446" இலிருந்து மீள்விக்கப்பட்டது