குளோரியா மகபகல்-அர்ரொயோ
குளோரியா மகபல்-அர்ரொயோ | |
---|---|
14வது பிலிப்பீனியக் குடியரசுத்தலைவர் | |
பதவியில் சனவரி 20, 2001 – சூன் 30, 2010 | |
துணை அதிபர் | தியோபிஸ்டொ குயிங்கோனா நோளி டி காஸ்த்ரோ |
முன்னையவர் | ஜோசப் எஸ்திராடா |
பின்னவர் | பெனிக்னோ அக்கீனோ III |
12வது பிலிப்பீனியத் துணைக் குடியரசுத் தலைவர் | |
பதவியில் சூன் 30, 1998 – சனவரி 20, 2001 | |
குடியரசுத் தலைவர் | ஜோசப் எஸ்திராடா |
முன்னையவர் | ஜோசப் எஸ்திராடா |
பின்னவர் | தியோபிஸ்டொ குயிங்கோனா |
தேசியப் பாதுகாப்பு அமைச்சர் பொறுப்பு | |
பதவியில் நவம்பர் 30, 2006 – பெப்ரவரி 1, 2007 | |
முன்னையவர் | அவெலினோ குருசு |
பின்னவர் | எர்மோஜீன் எப்தானெ |
பதவியில் செப்டம்பர் 1, 2003 – அக்டோபர் 2, 2003 | |
முன்னையவர் | அஞ்செலோ ரெயெசு |
பின்னவர் | எட்வர்டொ எர்மிடா |
சமூகநலம் மற்றும் மேம்பாடு அமைச்சர் | |
பதவியில் சூன் 30, 1998 – அக்டோபர் 12, 2000 | |
குடியரசுத் தலைவர் | ஜோசப் எஸ்திராடா |
முன்னையவர் | கொரசோன் அல்மா டி லியோன் |
பின்னவர் | டுல்செ சகுயிசாக் |
பம்பங்கா தொகுதியிலிருந்து நாடாளுமன்ற உறுப்பினர் | |
பதவியில் உள்ளார் | |
பதவியில் சூன் 30, 2010 | |
முன்னையவர் | மிக்கி அர்ரொயோ |
பிலிப்பீன்சு மேலவை (செனட்) உறுப்பினர் | |
பதவியில் சூன் 30, 1992 – சூன் 30, 1998 | |
தனிப்பட்ட விவரங்கள் | |
பிறப்பு | மரியா குளோரியா மகரெக் மகபகல் ஏப்ரல் 5, 1947[1] சான் யுவான், மணிலாப் பெருநகரம், பிலிப்பீன்சு |
அரசியல் கட்சி | எல்டிபி (1998க்கு முன்பு) காம்பி (1997–2009) லகாசு–சிஎம்டி (1991) (1998–2009) லகாசு-சிஎம்டி II (2009–நடப்பு) |
துணைவர் | ஒசே மிகுவல் அர்ரொயோ |
பிள்ளைகள் | மிக்கி அர்ரொயோ எவாஞ்சிலினா லூர்து டியொசுடாடோ |
முன்னாள் கல்லூரி | ஜியார்ஜ்டவுண் பல்கலைக்கழகம் அசம்ப்சன் கல்லூரி அடெனியோ டி மணிலா பல்கலைக்கழகம் பிலிப்பீன்சு பல்கலைக்கழகம், திலிமான் |
கையெழுத்து | |
இணையத்தளம் | அலுவல் வலைத்தளம் |
குளோரியா மகபகல்-அர்ரொயோ (Gloria Macapagal-Arroyo, பிறப்பு:ஏப்ரல் 5, 1947) பிலிப்பினோ அரசியல்வாதியும் 2001 முதல் 2010 வரை பிலிப்பீன்சின் 14வது குடியரசுத் தலைவராக பொறுப்பேற்றவரும் ஆவார். 1998 முதல் 2001 வரை பிலிப்பீன்சின் துணைக் குடியரசுத் தலைவராகவும் இருந்துள்ளார். 2010 முதல் பம்பங்காவின் இரண்டாவது தேர்தல் மாவட்டத்திலிருந்து நாடாளுமன்ற உறுப்பினராக இருந்து வருகின்றார். கொரசோன் அக்கினோவிற்குப் பிறகு நாட்டின் இரண்டாவது பெண் குடியரசுத் தலைவராக பொறுப்பாற்றியப் பெருமை இவருக்குண்டு. முன்னாள் குடியரசுத் தலைவரான டியோசுடடோ மகபகல்லின் புதல்வி ஆவார். முறையாகத் தேர்ந்தெடுக்கப்பட்ட பிலிப்பீன்சின் முதல் பெண் உதவிக் குடியரசுத் தலைவரும் இவரேயாவார்.[2]
அர்ரொயோ அடெனியோ டி மணிலா பல்கலைக்கழகத்தில் பொருளியல் பேராசிரியையாக இருந்தார்; அப்போது பெனிக்னோ அக்கீனோ III அவரது மாணாக்கர்களில் ஒருவராக இருந்தார். 1987இல் குடியரசுத் தலைவர் கொரசோன் அக்கினோ அழைப்பினால் அரசு நிர்வாகத்தில் சேவை துவங்கிய அர்ரொயோ வணிகம் மற்றும் தொழிற்துறை அமைச்சகத்தில் துணை அமைச்சராகவும் இணை அமைச்சராகவும் பணியாற்றினார். 1992 முதல் 1998 வரை பிலிப்பீனிய மேலவை (செனட்) உறுப்பினராக சேவையாற்றிய பின்னர் குடியரசுத் தலைவர் ஜோசப் எஸ்திராடாவின் கீழ் துணைக் குடியரசுத் தலைவர் பதவிக்குப் போட்டியிட்டு தேர்ந்தெடுக்கப்பட்டார். எஸ்திராடா மீது ஊழல் குற்றச்சாட்டுக்கள் எழுந்தபோது சமூக நலத்துறை மற்றும் மேம்பாட்டு அமைச்சராக இருந்த அர்ரொயோ தமது பதவி விட்டு விலகினார். குடியரசுத் தலைவருக்கு எதிரான அணியில் இணைந்து ஊழலுக்கு எதிராக போராடினார். 2001 எஸ்டா புரட்சியை அடுத்து எஸ்திராடா பதவி விலக நேரிட்டது; சனவரி 20, 2001 இல் தலைமை நீதிபதி அர்ரொயோவிற்கு குடியரசுத் தலைவராக பதவிப்பிரமாணம் செய்வித்தார். மே, 2004 இல் நடந்த சர்ச்சைமிக்க குடியரசுத் தலைவர் தேர்தலில் முழு ஆறு ஆண்டுகளுக்கு குடியரசுத் தலைவராகத் தேர்ந்தெடுக்கப்பட்டார்; சூன் 30, 2004 இல் பதவி ஏற்றுக்கொண்டார். குடியரசுத் தலைவராகத் தேர்ந்தெடுக்கப்பட்ட பின்னர் நாடாளுமன்ற மக்களவைக்கு தேர்ந்தெடுக்கப்பட்டார். பிலிப்பீன்சில் உயர்பதவியில் உள்ள ஒருவர் இவ்வாறு கீழுள்ள அலுவல்நிலைக்கு தேர்ந்தெடுக்கப்படுவது இது இரண்டாவது முறையாகும்; முன்னதாக ஒசே பி. லாரல் என்ற குடியரசுத் தலைவர் இவ்வாறு செய்துள்ளார்.
நவம்பர் 18, 2011 அன்று தேர்தல் முறைகேடுகளுக்காக அர்ரொயோ கைது செய்யப்பட்டார். குவிசோன் நகரத்திலுள்ள மாவீரர்கள் நினைவு மருத்துவ மையத்தில் அவர் காவலில் வைக்கப்பட்டார்.[3][4] சூலை 2012 இல் பிணையில் விடுதலையானார். அக்டோபர் 2012 இல் அரசு அதிஷ்ட இலாபச் சீட்டு நிதியில் $8.8 மில்லியன் முறைகேடு செய்ததாக மீண்டும் கைதானார்.[5]
மேற்சான்றுகள்
[தொகு]- ↑ "Gloria Macapagal-Arroyo". Current Biography International Yearbook 2004. The H. W. Wilson Company. Archived from the original on April 18, 2007. பார்க்கப்பட்ட நாள் June 4, 2007.
- ↑ Skard, Torild (2014) "Gloria Macapagal-Arroyo" in Women of Power - Half a century of female presidents and prime ministers worldwide, Bristol: Policy Press, பன்னாட்டுத் தரப்புத்தக எண் 978-1-44731-578-0
- ↑ "Arroyo arrives at VMMC". SunStar. December 9, 2011. Archived from the original on ஜனவரி 11, 2012. பார்க்கப்பட்ட நாள் January 19, 2012.
{{cite web}}
: Check date values in:|archive-date=
(help) - ↑ Kathrina Alvarez (January 18, 2012). "Corona revealed bias vs President: Aquino ally". SunStar. Archived from the original on நவம்பர் 14, 2012. பார்க்கப்பட்ட நாள் January 19, 2012.
- ↑ Philippines Ex-President Is Arrested in Hospital on New Charges, Floyd Whaley, October 4, 2012