ககயன் டி ஓரோ

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
ககயன் டி ஓரோ
மிகை நகர்மயமாக்கப்பட்ட நகரம்
ககயன் டி ஓரோ பெருநகரம்
அடைபெயர்(கள்):
  • தங்க நட்பின் நகரம்
  • பிலிப்பீன்சு நாட்டின் சாகச நகரம்
  • வடக்கு மின்டனாவோவின் இதயம்
  • சத்திய நிலத்தின் நுழைவுவாயில்
  • தங்க நகரம்
ககயன் டி ஓரோ முன்னிலைப்படுத்தப்பட்ட மிசாமிஸ் ஓரியண்டலின் வரைபடம்
ககயன் டி ஓரோ முன்னிலைப்படுத்தப்பட்ட மிசாமிஸ் ஓரியண்டலின் வரைபடம்
நகர்ப்புறம்சூன் 15, 1950
மிகை நகர்மயமாக்கப்பட்ட நகரம்நவம்பர் 22, 1983
Barangays80
அரசு[1]
 • மேயர்ஆஸ்கார் மோரெனோ (சுதந்திரக் கட்சி (Liberal Party (Philippines))
 • துணை மேயர்ராய்னியர் ஜோவாக்யுன் உய் (சுதந்திரக் கட்சி (Liberal Party (Philippines))
மக்கள்தொகை
 • பெருநகர்1,376,343[2][3]
இனங்கள்ககயனான்கள்; ககய்-அனான்கள்
இணையதளம்cagayandeoro.gov.ph

ககயன் டி ஓரோ (Cagayan de Oro) ஒரு முதல் தரமான மிகையாக நகர்மயமாக்கப்பட்ட நகரமாகும். இந்நகரம் பிலிப்பீன்சு நாட்டின் மிசாமிஸ் ஓரியண்டல் மாகாணத்தின் தலைநகரமாகவும் திகழ்கிறது.   இது ஒரு தன்னாட்சி அதிகாரம் கொண்ட, மிசாமிஸ் ஓரியண்டல் மாகாணத்திலிருந்து தனித்துவம் பெற்ற சுயேச்சையான நகரமுமாகும். இது வடக்கு மின்டனவு பிராந்தியத்தின் மையமாகவும் வணிக மையமாகவும் திகழ்கிறது. மேலும், இந்நகரமானது, எல் சால்வடோர் நகரம், ஓபல், அலுபிஜிட், லாகுதின்கன், மேற்குப் பகுதியின் கிடாகம், மற்றும் கிழக்குப் பகுதியில் உள்ள டாகோலான், வில்லன்யுவா, ஜசான், க்லேவேரியாவின் நகரங்கள் ஆகியவற்றையும் உள்ளடக்கிய வளர்ந்த பெருநகரக் ககோயன் டி ஓரோவின் பகுதியாகவும் திகழ்கிறது.

ககயன் டி ஓரோ நகரமானது மிண்டனாவோ தீவின் வடக்கு மத்திய கடற்கரையில் மகஜலார் குடாவைப் பார்க்கும் முகமாக அமைந்துள்ளது. மேலும், ஓபல் நகரை மேற்கிலும், டாகோலான் நகரத்தை கிழக்கிலும், புகிட்னொன் மற்றும் லனாவோ டெல் நோர்டே  மாகாணங்களைத் தெற்கிலும் எல்லைகளாகக் கொண்டுள்ளது.  2015 ஆம் ஆண்டின் மக்கள் தொகைக் கணக்கெடுப்பின்படி 675,950 மக்கள் எண்ணிக்கையுடன்  பிலிப்பீன்சு நாட்டின் பத்தாவது அதிக மக்கள் தொகை கொண்ட நகரமாகவும் இது திகழ்கிறது. காககான் டி ஓரோ அதன் வெள்ளை நீர் படகுச் சறுக்கு விளையாட்டு அல்லது கயாகிங் சாகசங்களுக்கும் புகழ் பெற்றுள்ளது, இது ககாயன் டி ஓரோ ஆற்றில் நடைபெறும் இந்த சாகச விளையாட்டுக்கள் இந்நகரின் சுற்றுலா வளத்தை அதிகரிப்பதற்கான வாய்ப்பாக உள்ளது.[5][6][7]

சொற்பிறப்பு[தொகு]

ககாயன் டி ஓரோ என்ற பெயர் (இலக்கியத்தில் தங்க ஆறு)[8] ஏற்கனவே "ககாயன்" என்றழைக்கப்பட்ட கிமோலோகனைச் சுற்றிய பகுதியைப் பார்வையிட 1622 ஆம் ஆண்டில் வந்த இசுபெயினின் அகஸ்டினியனை நினைவுகூரும் துறவிகளின் வருகையையொட்டி பின் செல்லும் போது அறியப்படுகிறது. 16 ஆம் நூற்றாண்டில் ஆரம்பகால இசுபானிய எழுத்து மூலமான ஆவணங்களும் இந்த இடத்தை ஏற்கெனவே "ககயன்" எனக் குறிப்பிட்டுள்ளன.

ஜனவரி 25, 1571 இல் குறிப்பிட்ட டான் ஜுவான் கிரியெகோவிற்குக் ககாயன் டி ஓரோவை உள்ளடக்கிய வடக்கு மின்டனவு பிராந்தியமானது என்கோமியென்டா என வழங்கப்பட்டது. அப்போது பிலிப்பீன்சு முன்னாள் துணைத் தலைவர் இம்மானுவேல் பெலாசு ககயன் என்பதுடன் உடன் ”டி ஓரோ” என்பதை பின்னிணைப்பாக சேர்த்தார்.

வரலாறு[தொகு]

தொடக்க கால வரலாறு[தொகு]

இப்பகுதியில் முதன்முதலில் நடப்புக் காலம் 377 ஆம் ஆண்டையொட்டிய காலகட்டத்தில் (பிந்தைய புதிய கற்காலம்) குடியேற்றம் நிகழ்ந்துள்ளது. இமோலோகன் என அழைக்கப்பட்ட ஒரு குடியிருப்புப் பகுதியில் தீவு வாழ் பூர்வீகக் குடிமக்கள் வாழந்து வந்தனர்.[9] இங்கு வசித்து வந்த பூர்வீகக் குடிமக்கள் பல கடவுள் கோட்பாட்டைப் பின்பற்றுபவர்களாக, தொடக்கத்தில் ஆஸ்ட்ரோநேசியர்களாக இருந்தவர்களாகவும், பட்ஜாவோஸ்களைப் போன்ற கடற்பயண வாழ்வில் ஈடுபடும் திறன் வாய்ந்தவர்களாகவும் காணப்பட்டனர். இக்குடிமக்களின் பழக்கவழக்கங்கள் வளமான புடுவான் பேரரசின் மக்களின் பழக்கவழக்கங்களோடும் இந்திய கலாச்சாரத்துடனும் ஒத்துப்போகிறது. அவர்களின் மரபு சார்ந்த ஆடை, அணிகலன்கள் பாலி, இந்தோனேசியாவில் வாழ்பவர்களின் ஆடை, அணிகலன்களோடு ஒத்துப்போகிறது. இந்தப் பகுதியில் சுட்டாங்கற்கள் கிடைக்கப்பெற்றுள்ளன. இவை சாங் டு மிங் வம்ச காலத்திலிருந்து இந்தப்பகுதியில் சீனர்கள் தொடர்பிலிருந்திருக்கலாம் என்று கருத இடம் தருகிறது.

எசுப்பானிய குடியேற்ற காலம்[தொகு]

1622 ஆம் ஆண்டில் இரண்டு எசுப்பானிய அகஸ்டைனைப் பின்பற்றும் சமயபரப்புக் குழுக்கள் இமோலோகன் பூர்வீகக் குடிமக்களுடன் தொடர்பில் இருந்தனர். 1626 ஆம் ஆண்டில் ஃப்ரே அகஸ்டைன் டி சான் பெட்ரோ என்பவர் இமோலோகன் பூர்வீகக்குடிகளின் தலைமையை ஏற்கச்செய்யப்பட்டார். இவர் டாட்டு (இறையாண்மை வாய்ந்த அரசத்தலைமை) சலங்சங் என அழைக்கப்பட்டார். ககயன் ஆற்றின் கீழ்ப்புறத்தில் உள்ள தற்போதைய கேஸ்டன் பூங்கா என அழைக்கப்படும் பகுதிக்கு தனது குடியேற்றத்தை மாற்றினார். 1783 ஆம் ஆண்டுவாக்கில் ககயன் டி ஓரோவில் எசுப்பானிய ஆதிக்கம் உணரப்பட்டது.

மேற்கோள்கள்[தொகு]

  1. "Official City/Municipal 2013 Election Results". Intramuros, Manila, Philippines: Commission on Elections (COMELEC). 12 May 2014. பார்க்கப்பட்ட நாள் 26 June 2014.
  2. Cities of the Philippines
  3. http://www.cdodev.com/2017/01/10/neda-sees-cagayan-de-oro-as-countrys-4th-economic-center/
  4. "Province: MISAMIS ORIENTAL". PSGC Interactive. Makati City, Philippines: National Statistical Coordination Board. Archived from the original on 15 October 2007. பார்க்கப்பட்ட நாள் 26 June 2014.
  5. "Cagayan de Oro's White Water Rafting". Philippine Postal Corporation. 18 June 2012. Archived from the original on 29 July 2012. பார்க்கப்பட்ட நாள் 13 September 2012. {{cite web}}: Italic or bold markup not allowed in: |publisher= (help)
  6. "Cagayan De Oro Travel Guide". Archived from the original on 2011-10-02. பார்க்கப்பட்ட நாள் 2017-11-09.
  7. "GMA goes whitewater rafting in Cagayan de Oro - and looks forward to mountain climbing : Philippines : Gov.Ph : News". Archived from the original on 2007-09-27. பார்க்கப்பட்ட நாள் 2017-11-09.
  8. Dr. Lawrence A. Reid and Elson T. Elizaga (Aug. 31, 2002). "Cagayan means "river"". http://elson.elizaga.net. Archived from the original on 2019-11-25. பார்க்கப்பட்ட நாள் 9 நவம்பர் 2017. {{cite web}}: Check date values in: |date= (help); External link in |publisher= (help)
  9. Montalvan, Antonio J. II (16 October 2009). "History of Cagayan de Oro". Heritage Conservation Advocates. p. 2. Archived from the original on 13 மார்ச் 2012. பார்க்கப்பட்ட நாள் 13 September 2012. {{cite web}}: Check date values in: |archive-date= (help); Italic or bold markup not allowed in: |publisher= (help)
"https://ta.wikipedia.org/w/index.php?title=ககயன்_டி_ஓரோ&oldid=3662445" இலிருந்து மீள்விக்கப்பட்டது