உள்ளடக்கத்துக்குச் செல்

ஓசுனி முபாரக்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
ஓசுனி முபாரக்
Hosni Mubarak
حسني مبارك
2009 இல் முபாரக்
4-வது எகிப்திய அரசுத்தலைவர்
பதவியில்
14 அக்டோபர் 1981 – 11 பெப்ரவரி 2011
பிரதமர்
See list
துணை அதிபர்ஒமார் சுலைமான்
முன்னையவர்சூபி அபு தாலிப் (பதில்)
பின்னவர்முகமது உசைன் தந்தாவி (இடைக்கால)
எகிப்தியத் தலைமை அமைச்சர்
பதவியில்
7 அக்டோபர் 1981 – 2 சனவரி 1982
குடியரசுத் தலைவர்சூபி அபு தாலிப் (பதில்)
இவரே
முன்னையவர்அன்வர் சாதாத்
பின்னவர்அகமது முகைதீன்
15-வது எகிப்தியத் துணை அரசுத்தலைவர்
பதவியில்
16 ஏப்ரல் 1975 – 14 அக்டோபர் 1981
குடியரசுத் தலைவர்அன்வர் சாதாத்
முன்னையவர்உசைன் எல்-சபெய்
மகுமுது பௌசி
பின்னவர்ஒமார் சுலைமான்
கூட்டுசேரா இயக்கத்தின் பொதுச் செயலர்
பதவியில்
16 சூலை 2009 – 11 பெப்ரவரி 2011
முன்னையவர்ராவுல் காஸ்ட்ரோ
பின்னவர்முகம்மது தந்தாவி (பதில்)
வான்படைத் தளபதி
பதவியில்
23 ஏப்ரல் 1972 – 16 ஏப்ரல் 1975
குடியரசுத் தலைவர்அன்வர் சாதாத்
முன்னையவர்அலி பக்தாவி
பின்னவர்மகுமுது சாக்கர்
தனிப்பட்ட விவரங்கள்
பிறப்பு
முகம்மது ஓசுனி எல் சாயிது முபாரக்

(1928-05-04)4 மே 1928
காபிர்-எல் மெசெலா, எகிப்து
இறப்பு25 பெப்ரவரி 2020(2020-02-25) (அகவை 91)
கெய்ரோ, எகிப்து
அரசியல் கட்சிதேசிய சனநாயகக் கட்சி (1978–2011)
துணைவர்
சூசன் தாபெத் (தி. 1959)
பிள்ளைகள்
  • அலா
  • கமால்
முன்னாள் கல்லூரிஎகிப்திய இராணுவக் கல்விக்கழகம்
எகிப்திய வான்படைக் கல்விக்கழகம்
சோவியத் இராணுவக் கல்விநிலையம்
கையெழுத்து
Military service
பற்றிணைப்பு Egypt
கிளை/சேவை எகிப்து வான்படை
சேவை ஆண்டுகள்1950–1975
தரம் – வன்படை உயர் தலைவர்[1]
கட்டளைஎகிப்திய வான்படை

ஓசுனி முபாரக் (Hosni Mubarak; 4 மே 1928 – 25 பெப்ரவரி 2020) எகிப்திய இராணுவ, அரசியல் தலைவர் ஆவார். இவர் 1981 முதல் 2011 வரை எகிப்தின் அரசுத்தலைவராக இருந்தவர்.

அரசியலுக்கு வருவதற்கு முன், முபாரக் எகிப்திய வான்படையில் 1972 முதல் 1975 வரை தளபதியாகப் பணியாற்றினார்.[1] அரசுத்தலைவர் அன்வர் சாதாத் 1981 இல் படுகொலை செய்யப்பட்ட பின்னர் முபாரக் அரசுத்தலைவரானார். முபாரக் கிட்டத்தட்ட முப்பதாண்டு காலம் அரசுத்தலைவராக இருந்தார். 43 ஆண்டுகள் பதவியில் இருந்த முகம்மது அலி பாசாவின் பின்னர் அதிககாலம் எகிப்தின் அரசுத்தலைவர் பதவியில் இருந்தவர் முபாரக் ஆவார்.[2] 2011 எகிப்தியப் புரட்சியின் போது இடம்பெற்ற 18-நாள் ஆர்ப்பாட்டங்களை அடுத்து முபாரக் பதவியில் இருந்து விலகினார்.[3] 2011 பெப்ரவரி 11 இல் எகிப்தின் ஆட்சி இராணுவத் தலைமைகளிடம் ஒப்படைக்கப்பட்டது.[4][5]

2011 ஏப்ரல் 13 இல் முபாரக்கும் அவரது இரண்டு மகன்களும் ஊழல் மற்றும் அதிகார முறைகேடு ஆகிய குற்ரச்சாட்டுகளுக்காக 15 நாட்கள் தடுத்து வைக்கப்பட்டனர்.[6] மக்கள் புரட்சியின் போது அமைதியான போராட்டக்காரர்கள் கொல்லப்படுவதைத் தடுக்கத் தவறியதற்காக முபாரக்கிற்கு விசாரணைக்கு உத்தரவிடப்பட்டது.[7] இதற்கான விசாரணைகள் 2011 ஆகத்து 3 ஆம் நாள் ஆரம்பமாயின.[8] 2012 சூன் 2 இல், எகிப்திய நீதிமன்றம் முபாரக்கிற்கு ஆயுள் தண்டனை வழங்கியது. சிறைக்காலத்தில், இவர் தொடர்ச்சியான சுகவீன நெருக்கடிகளை சந்தித்தார். 2013 சனவரி 13 இல், எகிப்திய உயர் நீதிமன்றம் முபாரக் மீதான குற்றச்சாட்டுகளுக்கு மீள் விசாரணைக்கு உத்தரவிட்டது.[9] இவரது வழக்கு மீண்டும் விசாரணைக்கு வந்தபோது, முபாரக், அவரது மகன்கள் மீதான ஊழல் குற்றச்சாட்டுகள் நிரூபிக்கப்பட்டு 2015 மே 9 சிறைத்தண்டனை வழங்கப்பட்டது.[10] 2015 அக்டோபர் 12 இல் முபாரக் இராணுவ மருத்துவமனையில் தடுத்து வைக்கப்பட்டு, மகன்கள் விடுதலை செய்யப்பட்டனர்.[11] 2017 மார்ச் 2 இல் இவர் குற்றமற்றவர் என அறிவிக்கப்பட்டு, 2017 மார்ச் 24 இல் விடுதலை செய்யப்பட்டார்.[12][13]

2020 பெப்ரவரி 25 இல் முபாரக் தனது 91-வது அகவையில் கெய்ரோவில் காலமானார்.[14][15] இவரது உடல் இராணுவ மரியாதையுடன் அடக்கம் செய்யப்பட்டது.[16]

மேற்கோள்கள்

[தொகு]
  1. இங்கு மேலே தாவவும்: 1.0 1.1 "Air Marshal Mohammed Hosni Mubarak". Egyptian Armed Forces Web Site. Egyptian Armed Forces. Archived from the original on 23 March 2010.
  2. Slackman, Michael (8 March 2010). "Hosni Mubarak". The New York Times. http://topics.nytimes.com/top/reference/timestopics/people/m/hosni_mubarak/index.html. 
  3. Kirkpatrick, David D. (28 January 2011). "Egypt Calls in Army as Protesters Rage". The New York Times. https://www.nytimes.com/2011/01/29/world/middleeast/29unrest.html. 
  4. Kirkpatrick, David D.; Shadid, Anthony; Cowell, Alan (11 February 2011). "Mubarak Steps Down, Ceding Power to Military". The New York Times. https://www.nytimes.com/2011/02/12/world/middleeast/12egypt.html. 
  5. "Egypt crisis: President Hosni Mubarak resigns as leader". BBC. 11 February 2010. https://www.bbc.co.uk/news/world-middle-east-12433045. 
  6. Kirkpatrick, David D.; Stack, Liam (13 March 2011). "Prosecutors Order Mubarak and Sons Held". The New York Times. https://www.nytimes.com/2011/04/14/world/middleeast/14egypt.html. 
  7. "Mubarak to be tried for murder of protesters". Reuters. 24 May 2011 இம் மூலத்தில் இருந்து 31 மே 2011 அன்று. பரணிடப்பட்டது.. https://web.archive.org/web/20110531105100/https://www.reuters.com/article/2011/05/24/us-egypt-mubarak-idUSTRE74N3LG20110524. 
  8. "Trial of Egypt's Hosni Mubarak starts". BBC. 3 August 2011. https://www.bbc.co.uk/news/world-middle-east-14384691. 
  9. Egypt's Mubarak to get retrial பரணிடப்பட்டது 20 சனவரி 2013 at the வந்தவழி இயந்திரம். 3 News. Retrieved 16 January 2014.
  10. "Egypt's Hosni Mubarak jailed in corruption retrial". BBC News. 9 May 2015. https://www.bbc.com/news/world-middle-east-32672630. 
  11. "Jailed sons of Egypt's deposed leader Hosni Mubarak freed". Associated Press. 13 October 2015. https://www.bostonglobe.com/news/world/2015/10/12/jailed-sons-deposed-egypt-autocrat-mubarak-freed/VuNVDh0ucjGA5hNbzpnDLP/story.html. 
  12. "Egypt's Hosni Mubarak acquitted over 2011 protester deaths". 3 March 2017. https://www.bbc.co.uk/news/world-middle-east-39140887. 
  13. "Egypt's Hosni Mubarak freed after six years in detention". BBC News. 24 March 2017. https://www.bbc.com/news/world-middle-east-39378045. 
  14. "Egypt's former president Hosni Mubarak dies at 91". Al Jazeera. பார்க்கப்பட்ட நாள் 25 February 2020.
  15. "Former Egyptian president Hosni Mubarak dies". BBC News. 25 February 2020. https://www.bbc.com/news/world-middle-east-51630142. 
  16. Ruth Michaelson (26 February 2020). "Hosni Mubarak buried with full military honours". The Guardian. பார்க்கப்பட்ட நாள் 26 February 2020.

வெளி இணைப்புகள்

[தொகு]
"https://ta.wikipedia.org/w/index.php?title=ஓசுனி_முபாரக்&oldid=3237409" இலிருந்து மீள்விக்கப்பட்டது