ஏவூர்திப் பொறி

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
வைகிங் ஏவூர்திப் பொறி

ஏவூர்திப் பொறி (Rocket Engine) என்பது தன்னிடம் தேக்கி வைக்கப்பட்டுள்ள ஏவூர்திப்பொறி எரிபொருட்களைப் பயன்படுத்தி அதிவேக உந்துகைத் தாரைகளை உண்டுபண்ணும் ஒருவகை தாரைப் பொறி[1][2] ஆகும். இவை நியூட்டனின் மூன்றாம் விதியின்படி செயல்பட்டு உந்துவிசையை ஏற்படுத்தும் எதிர்வினைப் பொறிகளாகும். பெரும்பாலான ஏவூர்திப் பொறிகள் உள் எரி பொறிகள் ஆகும், ஆனால், சில எரியா வகைப் பொறிகளும் உண்டு. இவ்வகைப் பொறிகளால் உந்தப்படும், செயல்படும் வாகனங்கள்/ஊர்திகள் ஏவூர்திகள் எனப்படும். இவ்வகைப் பொறிகளின் இயக்கத்துக்குத் தேவையான அனைத்துப் பொருட்களும் இவற்றுக்குள்ளேயே இருப்பதால், அதாவது வெளியிலிருந்து எவ்வகை எரிபொருளோ காற்றோ தேவைப்படாததால், இவற்றை விண்வெளியின் வெற்றிடத்திலும் பயன்படுத்த இயலும்; ஆகையால், இவை விண்கலங்கள் மற்றும் எறிகணைகளில் பயன்படுத்தப்படுகின்றன.

மற்றவகை தாரைப் பொறிகளுடன் ஒப்பிடுகையில் ஏவூர்திப் பொறிகள் மிக அதிக உந்துவிசையை ஏற்படுத்துகின்றன; ஆனால், மற்றவற்றைவிட மிகக் குறைந்த பயன்திறன் கொண்டவையாக இருக்கின்றன (இவை மிகக் குறைவான கணத்தாக்கு எண் (Specific Impulse) கொண்டிருக்கின்றன). தூம்புவாயில் வெளித்தள்ளப்படும் வேதிவிளைபொருட்களின் மூலக்கூறு எடை குறைவாக இருக்கும்போது ஏவூர்திப் பொறிகளின் உந்துவிசை மிக அதிகமாக இருக்கும்; ஆக, ஐதரசன் வாயுவை வெளித்தள்ளுவதே மிகச் சிறந்த நடைமுறையாக இருக்கும், ஆனால், சற்றே மூலக்கூறு எடை அதிகமான பல வேதிப் பொருட்களின் கலவையாகவே வெளியேற்றப்படும் தாரை இருக்கிறது.

ஏவூர்திகளின் திசைவேகம் அதிகமாகும்போது ஏவூர்திப் பொறிகளின் பயன் திறனும் அதிகரிக்கிறது. ஏவூர்திப் பொறிகள் இயங்க வளிமண்டலம் தேவையில்லாத காரணத்தால் கடல் மட்டத்திலிருந்து மிக உயரத்திலும் விண்வெளியிலும் இவை பயன்படுத்தப்படுகின்றன.

சொல்லாட்சி[தொகு]

கீழ்வரும் பெயர்களில் ஏவூர்தி என்பது ஏவூர்திப் பொறிகளைக் குறிக்கிறது.

  • வேதி ஏவூர்திகள் (Chemical Rockets) என்பவை உந்துவிக்கும் எரிபொருட்களின் வெப்ப உமிழ் வேதிவினைகளால் செயல்படுகின்றன.
  • வெப்ப ஏவூர்திகள் (Thermal Rockets) என்பவை சாதாரணமாக செயலற்ற நிலையில் இருக்கும் உந்துவிக்கும் எரிபொருட்கள் மின் அல்லது அணுக்கரு வினைகளால் சூடுபடுத்தப்பட்டு செயல்படுபவையாகும்.
  • திட எரிபொருள் ஏவூர்திகள் (Solid-fuel Rockets அல்லது Solid Propellant Rockets) என்பவை பயன்படுத்தும் உந்துவிக்கும் எரிபொருட்கள் திட நிலையில் இருக்கும்.
  • திரவ எரிபொருள் ஏவூர்திகள் (Liquid Propellant Rockets) என்பவை பயன்படுத்தும் திரவ நிலையில் ஒன்று அல்லது அதற்கு மேற்பட்ட தேக்கிகளில் வைக்கப்பட்டிருக்கும் உந்துவிக்கும் எரிபொருட்களைப் பயன்படுத்தும்.
  • கலப்பின ஏவூர்திகள் (Hybrid Rockets) திட உந்துவிக்கும் எரிபொருட்களை கனற்சி அறையில் கொண்டிருக்கும்; அதனுடன் திரவ ஆக்சிசனேற்றி அல்லது மற்றுமொரு திரவ உந்துவிக்கும் எரிபொருள் கலந்து எரியவைக்கப்படும்வண்ணம் செயல்படும்.
  • ஒற்றை உந்துவிக்கும் எரிபொருள் ஏவூர்தி (Mono-propellant Rocket) என்பது வினையூக்கியால் எரிதல் தூண்டப்படும் எரிபொருளைக் கொண்டிருக்கும். பொதுவாகப் பயன்படுத்தப்படும் ஒற்றை உந்துவிக்கும் எரிபொருள் ஐதரசீன் மற்றும் ஐதரசன் பேரொட்சைடு ஆகும்.

உந்துவிசை[தொகு]

ஓர் ஏவூர்திப் பொறியால் உருவாக்கப்படும் மொத்த உந்துவிசையை கீழ்க்காணும் சமன்பாட்டின் மூலம் கணக்கிடலாம்:[3]

where:  
=  வெளியேறும் வாயுவின் நிறை வீதம்
=  பயன்படு வெளியேற்றத் திசைவேகம்
=  தூம்புவாய் வெளியேற்று தளத்தில் உண்மையான தாரைத் திசைவேகம்
=  தூம்புவாய் வெளியேற்றுத் தளத்தில் பாய்வுப் பரப்பு (அல்லது பிரிக்கப்பட்டப் பாய்வு எனில், தாரையானது தூம்புவாயிலிருந்து வெளியேறும் தளம்)
=  தூம்புவாய் வெளியேற்றுத் தளத்தில் நிலை அழுத்தம்
=  புறநிலை (அல்லது வளிமண்டல) அழுத்தம்

மேலும் பார்க்க[தொகு]

உசாத்துணைகள்[தொகு]

  1. George P. Sutton; Oscar Biblarz (2001). Rocket Propulsion Elements (7th ed.). Wiley Interscience. பன்னாட்டுத் தரப்புத்தக எண் 0-471-32642-9. {{cite book}}: Unknown parameter |last-author-amp= ignored (help) See Chapter 1.
  2. நெல்லை சு. முத்து (2005). ஏவூர்தியியல் (Rocketry) (1st ed.). AreVee Padhippagam. {{cite book}}: Unknown parameter |last-author-amp= ignored (help) See Chapter 3.
  3. George P. Sutton; Oscar Biblarz (2001). Rocket Propulsion Elements (7th ed.). Wiley Interscience. பன்னாட்டுத் தரப்புத்தக எண் 0-471-32642-9. {{cite book}}: Unknown parameter |last-author-amp= ignored (help) See Equation 2-14.
"https://ta.wikipedia.org/w/index.php?title=ஏவூர்திப்_பொறி&oldid=3679596" இலிருந்து மீள்விக்கப்பட்டது