ஏஞ்சலிக் கெர்பர்
2014 மாத்ரிடு போட்டியில் கெர்பர், மத்ரித், எசுப்பானியா | |
முழுப் பெயர் | ஏஞ்செலிக் கெர்பர் |
---|---|
நாடு | செருமனி |
வாழ்விடம் | புட்சிக்காவோ, போலந்து |
உயரம் | 1.73 m (5 அடி 8 அங்) (5 அடி 8 அங்) |
தொழில் ஆரம்பம் | 2003 |
விளையாட்டுகள் | இடது-கை (இரு-கையால் பிற்பக்கம்) |
பரிசுப் பணம் | $12,146,087 |
இணையதளம் | www.angelique-kerber.de |
ஒற்றையர் போட்டிகள் | |
சாதனைகள் | 469–251 (65.14%) |
பட்டங்கள் | 8 WTA, 11 ITF |
அதிகூடிய தரவரிசை | No. 2 (1 பெப்ரவரி 2016) |
தற்போதைய தரவரிசை | No. 2 (1 பெப்ரவரி 2016) |
பெருவெற்றித் தொடர் ஒற்றையர் முடிவுகள் | |
ஆத்திரேலிய ஓப்பன் | வெ (2016) |
பிரெஞ்சு ஓப்பன் | கா.இ (2012) |
விம்பிள்டன் | அ.இ (2012) |
அமெரிக்க ஓப்பன் | அ.இ (2011) வெ (2016) |
ஏனைய தொடர்கள் | |
Tour Finals | RR (2012, 2013, 2015) |
ஒலிம்பிக் போட்டிகள் | கா.இ (2012) |
இரட்டையர் போட்டிகள் | |
சாதனைகள் | 54–57 |
பட்டங்கள் | 0 WTA, 3 ITF |
அதியுயர் தரவரிசை | No. 103 (26 ஆகத்து 2013) |
தற்போதைய தரவரிசை | No. 208 (18 சனவரி 2016) |
பெருவெற்றித் தொடர் இரட்டையர் முடிவுகள் | |
ஆத்திரேலிய ஓப்பன் | முதல்சுற்று (2008, 2011, 2012) |
பிரெஞ்சு ஓப்பன் | 2ம்சுற்று (2012) |
விம்பிள்டன் | 3ம்சுற்று (2011) |
அமெரிக்க ஓப்பன் | 3ம்சுற்று (2012) |
அணிப் போட்டிகள் | |
கூட்டமைப்புக் கோப்பை | இறுதி (2014), சாதனை 9–8 |
இற்றைப்படுத்தப்பட்டது: 30 சனவரி 2016. |
ஏஞ்செலிக் கெர்பர் (Angelique Kerber, பிறப்பு:சனவரி 18, 1988) செருமானிய டென்னிசு விளையாட்டாளர் ஆவார். 2003ஆம் ஆண்டு தொழில்முறையாக விளையாடத் தொடங்கிய கெர்பர் 2011ஆம் ஆண்டில் அமெரிக்க ஓப்பனில் முதன்முறையாக அரையிறுதிக்கு எட்டினார். அப்போது அவர் உலகளவிலான தரவரிசையில் 92ஆம் இடத்தில் இருந்தார். கெர்பர் அவரது வன்தாக்க எதிரடி விளையாட்டிற்காகவும் இடதுகை ஆட்டத்திற்காகவும் வகையான அடிகளுக்காகவும் அறியப்படுகிறார். தனது வாணாள் மிக உயரிய தரவரிசை எண்ணாக ஐந்தை அக்டோபர் 22, 2012இல் எய்தினார். 2012இல் இரட்டையர் ஆட்டத்தில் உலகத் தரவரிசையில் 103ஆம் இடத்தில் உள்ளார். தற்போது தரவரிசை எண் 6இல் உள்ளார்; மிக உயரிய தரவெண் பெற்றுள்ள செருமானியராக விளங்குகிறார். தனது முதல் பெருவெற்றித்தொடர் பட்டத்தை 2016ஆம் ஆண்டு ஆஸ்திரேலிய டென்னிஸ் திறந்த சுற்று போட்டியிலும் யூ. எசு. ஓப்பன் போட்டியிலும் வென்றுள்ளார்.
மகளிர் டென்னிசு சங்க சுற்றுக்களில், எட்டு போட்டிகளில் வாகை சூடியுள்ள கெர்பர், ஒவ்வொரு தரைவகையிலும் ஒரு பட்டத்தை வென்றுள்ளார்; தவிர முதன்மை போட்டிகளில் ஐந்து பட்டங்களை வென்றுள்ளார். பன்னாட்டு டென்னிசு கூட்டமைப்பு சுற்றுக்களில் இதுவரை 11 ஒற்றையர், 3 இரட்டையர் போட்டிகளில் பட்டதை வென்றுள்ளார்.
தனி வாழ்க்கை
[தொகு]ஏஞ்செலிக் கெர்பர் மேற்கு செருமனியிலுள்ள பிரெமன் என்றவிடத்தில் போலந்து தந்தை இசுலாவோமிர் கெர்பருக்கும் செருமானியப் போலியத் தாய் பியட்டாவிற்கும் சனவரி 18, 1988இல் மகவாகப் பிறந்தார். இவருக்கு ஜெஸ்ஸிக்கா என்ற சகோதரி உள்ளார். தனது மூன்றாம் அகவையிலேயே டென்னிசு பயிற்சியைத் துவக்கிய கெர்பர் இளையோர் சுற்றுக்களில் விளையாடத் தொடங்கினார். செருமனியிலும் ஐரோப்பாவின் பிற இடங்களிலும் வெற்றிபெறத் தொடங்கினார்; இருப்பினும் 2003 வரை எந்தவொரு இளையவர் பட்டத்தையும் வெல்லவில்லை. தனது 15ஆம் அகவையில் தொழில்முறையாக விளையாடத் தொடங்கினார். கெர்பர் இடாய்ச்சு, போலீஷ் மற்றும் ஆங்கில மொழிகளைப் பேச வல்லவர்.[1][2]
பணிவாழ்வு புள்ளிகள்
[தொகு]பெருவெற்றித்தொடர் போட்டி இறுதிகள்
[தொகு]ஒற்றையர்: 1 (1–0)
[தொகு]முடிவு | ஆண்டு | போட்டி | தரை | எதிராளி | புள்ளிகள் |
---|---|---|---|---|---|
வாகையாளர் | 2016 | ஆஸ்திரேலிய டென்னிஸ் திறந்த சுற்று | வன்தரை | செரீனா வில்லியம்ஸ் | 6–4, 3–6, 6–4 |
வாகையாளர் | 2016 | யூ. எசு. ஓப்பன் | வன்தரை | புலிச்கோவா | 6–3, 4–6, 6–4 |
பெருவெற்றித்தொடர் காலக்கோடு
[தொகு]ஒற்றையர்
[தொகு]போட்டி | 2006 | 2007 | 2008 | 2009 | 2010 | 2011 | 2012 | 2013 | 2014 | 2015 | 2016 | SR | வெ–தோ | ||
---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|
பெருவெற்றித்தொடர் போட்டிகள் | |||||||||||||||
ஆஸ்திரேலிய டென்னிஸ் திறந்த சுற்று | இல்லை | தகுதிச்சுற்று | 2ம் சுற்று | முதல்சுற்று | 3ம்சுற்று | முதல்சுற்று | 3ம்சுற்று | 4ம்சுற்று | 4ம்சுற்று | முதல்சுற்று | வெற்றி | 1 / 9 | 18–8 | ||
பிரெஞ்சு ஓப்பன் | இல்லை | முதல்சுற்று | முதல்சுற்று | தகுதிச்சுற்று | 2ம்சுற்று | முதல்சுற்று | காலிறுதி | 4ம்சுற்று | 4ம்சுற்று | 3ம்சுற்று | 0 / 8 | 13–8 | |||
விம்பிள்டன் | இல்லை | முதல்சுற்று | முதல்சுற்று | தகுதிச்சுற்று | 3ம்சுற்று | முதல்சுற்று | அரையிறுதி | 2ம்சுற்று | காலிறுதி | 3ம்சுற்று | 0 / 8 | 14–8 | |||
யூ.எசு. ஓப்பன் | இல்லை | முதல்சுற்று | தகுதிச்சுற்று | 2ம்சுற்று | முதல்சுற்று | அரையிறுதி | 4ம்சுற்று | 4ம்சுற்று | 3ம்சுற்று | 3ம்சுற்று | வெற்றி | 0 / 8 | 16–8 | ||
வெற்றி–தோல்வி | 0–0 | 0–3 | 1–3 | 1–2 | 5–4 | 5–4 | 14–4 | 10–4 | 12–4 | 6–4 | 20-2 | 2 / 36 | 74–34 |
இரட்டையர்
[தொகு]போட்டி | 2007 | 2008 | 2010 | 2011 | 2012 | 2013 | 2014 | SR | வெ–தோ | ||||
---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|
பெருவெற்றித் தொடர் போட்டி | |||||||||||||
ஆஸ்திரேலிய டென்னிஸ் திறந்த சுற்று | இல்லை | முதல்சுற்று | இல்லை | முதல்சுற்று | முதல்சுற்று | இல்லை | இல்லை | 0 / 3 | 0–3 | ||||
பிரெஞ்சு ஓப்பன் | இல்லை | இல்லை | முதல்சுற்று | முதல்சுற்று | 2ம்சுற்று | முதல்சுற்று | இல்லை | 0 / 4 | 1–4 | ||||
விம்பிள்டன் | இல்லை | இல்லை | முதல்சுற்று | 3ம்சுற்று | முதல்சுற்று | இல்லை | இல்லை | 0 / 3 | 2–3 | ||||
யூ.எசு. ஓப்பன் | முதல்சுற்று | இல்லை | முதல்சுற்று | இல்லை | 3ம்சுற்று | இல்லை | இல்லை | 0 / 3 | 2–3 | ||||
வெற்றி–தோல்வி | 0–1 | 0–1 | 0–3 | 2–3 | 3–4 | 0–1 | 0-0 | 0 / 13 | 5–13 |
மேற்சான்றுகள்
[தொகு]- ↑ "WTA". பார்க்கப்பட்ட நாள் 26 May 2012.
- ↑ "About". Archived from the original on 3 நவம்பர் 2014. பார்க்கப்பட்ட நாள் 3 November 2014.