உள்ளடக்கத்துக்குச் செல்

எஸ். மீனாட்சிசுந்தர முதலியார்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.

ஈரோடு மீனாட்சிசுந்தர முதலியார் அல்லது எஸ். மீனாட்சிசுந்தர முதலியார் (S. Meenakshi Sundara Mudaliar, 25 டிசம்பர், 1898 - 14 மார்ச், 1973)[1] என்பவர் ஓர் இந்தியக் கல்வியாளரும், அரசியல்வாதியும், மக்கள் சேவகரும் ஆவார். இவர் ஈரோடு நகராட்சித் தலைவராக இருந்தவர். ஈரோடு வட்டாரத்தில் பெண்களின் கல்விக்காக பாடுபட்டவர். ஈரோடு நகர மக்கள் இவரை "ஐயா" என்று அன்போடு அழைத்தனர்.[2][3]

ஈரோடு மீனாட்சிசுந்தர முதலியார்

வாழ்க்கைக் குறிப்பு

[தொகு]

மீனாட்சிசுந்தர முதலியார் 1898 ஆம் ஆண்டு அப்போதைய கோயம்புத்தூர் மாவட்டத்தின் ஒரு பகுதியாக இருந்த தற்போதைய ஈரோடு மாவட்டத்தில் ஓர் செல்வந்தர் குடும்பத்தில் பிறந்தார். சிறு வயதில் இருந்து கல்வியில் ஆர்வம் கொண்ட இவர் இலக்கியத்தில் இளங்கலை வரை படித்தார்.

1952 முதல் 1955 வரை ஈரோடு நகராட்சித் தலைவராகப் பணியாற்றி பல திட்டங்களைச் செயல்படுத்தினார்.[2]

பெண்கள் கல்வி வளர்ச்சிக்காக, தனது சொந்த செலவில் கலைமகள் கல்வி நிலையம் என்ற மகளிர் பள்ளியைத் துவக்கி நடத்தினார்.[4] ஈரோட்டில் செங்குந்தர் கல்விக்கழகம் என்ற அமைப்பை வி. வி. சி. ஆர். முருகேச முதலியார் உதவியுடன் துவக்கினார். இன்று செங்குந்தர் கல்விக்கழகத்தால் பத்திற்கும் மேற்பட்ட பள்ளிகள் நடத்தப்பட்டு வருகின்றன.[1] 1972 ஆம் ஆண்டில் சங்கங்கள் சட்டத்தின் கீழ் பதிவுசெய்யப்பட்ட "கலைமகல் கல்வி நிலயம்" நிர்வாகக் குழு 7 உறுப்பினர்களைக் கொண்ட ஒரு பொது அறக்கட்டளையை உருவாக்கி, இவர் உருவாக்கிய கலைமகள் கல்வி நிலையத்தை ஈரோடு பொது மக்களுக்கு அற்ப்பணித்தார்.

வரலாற்றில் ஆர்வம் கொண்ட இவர், ஈரோட்டில் கலைமகள் பள்ளி வளாகத்தில் "கலைமகள் பள்ளி அருங்காட்சியகம்" என்ற பெயரிலான அருங்காட்சியகத்தைத் தொடங்கி வைத்தார்.[3]

தமிழக ஆசிரியர்கள் இவரின் கல்வி பணிக்காக 1947 ஆம் ஆண்டில் தமிழக ஆசிரியர் சம்மேளத் தலைவராக தேர்வாக்கி ஆசிரியர்களின் உரிமைகளுக்காக சேவை செய்தனர்.

அப்போதைய கல்வி அமைச்சராக இருந்த அவிநாசிலிங்கம் செட்டியார் அவர்களை அணுகி ஆசிரியர் ஊதிய உயர்வு இவர் வழி வகுத்தார்.

மாநில அரசு 1955 ஆம் ஆண்டில் டாக்டர் அழகப்ப செட்டியார் தலைமையில் ஆரம்பள்ளி ஆசிரியர் சீர்திருத்த குழு அமைத்து, அதில் இவரை ஒரு உறுப்பினர் ஆக்கியது.

இவர் ஆரம்ப பள்ளி ஆசிரியர் நலனுக்காகவும், ஆரம்ப பள்ளி முன்னேற்றத்திற்காகவும் 64 பரிந்துரையில் தமிழக அரசு அனுப்பினார்.

மாநில அரசு இவரை தனியார் பள்ளிகள் பணியாற்றும் ஆசிரியர்கள் குறைகளை ஆய்வு செய்யும் குழுவில் உறுப்பினராக்கியது.

1928 ஆம் ஆண்டில் ஈரோடு ஆசிரியர் ஐக்கிய சங்கம் நிறுவினர். இச்சங்கத்தின் ஆதரவில் பல கருத்தரங்குகள், ஆய்வு அரங்குகள் நடைபெற இடவசதி மற்றும் பணி வசதி அளித்து ஆசிரியர்களை ஊக்குவித்தார். சங்கத்திற்கு நிலையான கட்டிடம் வேண்டும் என்று நினைத்து ஈரோடு திருநகர் காலனியில் தனது சொந்த பணம் அளித்து மூன்று மாதங்கள் கட்டிடம் பூர்த்தி செய்து கொடுத்துள்ளார்.

மேலும் இந்நகரில் ஆசிரியர் குடியிருப்பு ஏற்படுத்தி கொடுத்ததில் இவரின் முயற்சி முக்கியமானவை.

1955 ஆம் ஆண்டில் ஈரோடு அருள் நெறித்திருப்பணி மன்றத்தின் மூலம் ஆசிரியர் பயிற்சி பள்ளி, அனாதை இல்லம் நிறுவினார். மேலும் ஈரோடு நகரத்தில் உள்ள ஆசிரியர் பயிற்சி பள்ளி, தொடக்கநிலை, நடுநிலை, உயர்நிலை பள்ளி அனைத்தையும் உள்ளடக்கி ஆசிரிய ஐக்கிய சங்கம் தோற்றுவித்துள்ளார்.[5]

அங்கீகாரங்கள்

[தொகு]
  • இவரின் நினைவாக 2019 ஆம் ஆண்டு ஈரோட்டின் பிரதான சாலைக்கு மீனாட்சிசுந்தரனார் சாலை என்று பெயர் வைக்கபட்டது.[6]
  • ஈரோடு செங்குந்தர் கல்விக்கழகம் இவரின் நினைவாக, மீனாட்சிசுந்தரனார் செங்குந்தர் மேல்நிலைப்பள்ளி என்ற பள்ளியை நடத்தி வருகிறது.[7] பள்ளி வளாகத்தில் இவருக்கு வைக்கப்பட்ட சிலை, குன்றக்குடி பொன்னம்பல அடிக்களாரால் திறந்து வைக்கப்பட்டது.

மேற்கோள்கள்

[தொகு]
  1. 1.0 1.1 "செங்குந்தர் கல்விக்கழக நிறுவனர்களின் சிலை திறப்பு விழா" (in தமிழ்). தினமணி. 2012. https://www.dinamani.com/all-editions/edition-coimbatore/2012/mar/04/%E0%AE%9A%E0%AF%86%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%B0%E0%AF%8D-%E0%AE%95%E0%AE%B2%E0%AF%8D%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B4%E0%AE%95-%E0%AE%A8%E0%AE%BF%E0%AE%B1%E0%AF%81%E0%AE%B5%E0%AE%A9%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B3%E0%AE%BF%E0%AE%A9%E0%AF%8D-%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%88-%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B1%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81-%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%B4%E0%AE%BE-466034.html. 
  2. 2.0 2.1 "About Kalaimagal" (in ஆங்கிலம்). Erode Kalaimakal Kalvi nilayam school.
  3. 3.0 3.1 "கலைமகள் பள்ளி அருங்காட்சியகம்". தமிழர் வரலாற்றுக்கு ஓர் அரண். 2012.
  4. https://books.google.co.in/books?id=0_YnDgAAQBAJ&pg=PP3&lpg=PP3&dq=%E0%AE%95%E0%AE%B2%E0%AF%88%E0%AE%AE%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D+%E0%AE%95%E0%AE%B2%E0%AF%8D%E0%AE%B5%E0%AE%BF+%E0%AE%A8%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%88%E0%AE%AF%E0%AE%AE%E0%AF%8D&source=bl&ots=dMSMTPuUBc&sig=ACfU3U2cY101IVel5MRpVtDBzf3auBehnw&hl=en&sa=X&ved=2ahUKEwjWyZr0rsrpAhWrwjgGHSWiAjU4ChDoATAHegQIBxAB#v=onepage&q=%E0%AE%AE%E0%AF%80%E0%AE%A9%E0%AE%BE%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9A%E0%AE%BF%20%E0%AE%9A%E0%AF%81%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%B0%20%E0%AE%AE%E0%AF%81%E0%AE%A4%E0%AE%B2%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%BE%E0%AE%B0%E0%AF%8D%20%E0%AE%A8%E0%AE%BF%E0%AE%B1%E0%AF%81%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%AF%20%E0%AE%95%E0%AE%B2%E0%AF%88%E0%AE%AE%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D%20%E0%AE%95%E0%AE%B2%E0%AF%8D%E0%AE%B5%E0%AE%BF%20%E0%AE%A8%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%88%E0%AE%AF%E0%AE%AE%E0%AF%8D&f=false[தொடர்பிழந்த இணைப்பு]
  5. ஈரோடு சீ. மீனாட்சிசுந்தர முதலியார் பாராட்டு விழா மலர், பக்கம் 27-30
  6. "மீனாட்சி சுந்தரனார் சாலை பெயர் பலகை திறப்பு" (in தமிழ்). தினகரன். 2019 இம் மூலத்தில் இருந்து 2019-11-26 அன்று. பரணிடப்பட்டது.. https://web.archive.org/web/20191126172220/http://www.dinakaran.com/District_Detail.asp?Nid=969352. 
  7. "சுத்தானந்தன் பிறந்த நாள் விழா" (in தமிழ்). தினமலர். 2012. https://m.dinamalar.com/detail.php?id=555600.