இலங்கையில் தமிழர் நில அபகரிப்பு
இலங்கையில் போர்த்துக்கீசர், ஒல்லாந்தர், பிரித்தானியர் போன்றோரின் ஆக்கிரமிப்பு நிலங்களை கவர்ந்து (அபகரித்து) தமது இனக் குழுமங்களை இலங்கையில் குடியேற்றும் திட்டமானதாக இருக்கவில்லை. அவர்களது நோக்கம் வேறானது. ஆனால் அதற்கு முற்பட்ட காலங்களில் தமிழர் நிலங்களை கவர்ந்து கொள்ளும் (அபகரிப்புச் செய்யும்) பலத் திட்டங்கள் சிங்கள இனத்தால் வெவ்வேறு காலகட்டங்களில் நிகழ்ந்தே உள்ளன.
தமிழர் வாழ்ந்து, ஆட்சி செய்த பல நிலங்கள் இன்று சிங்களப் பகுதிகளாக (பிரதேசங்களாக) தோற்றம் பெற்றுள்ளன. எடுத்துக்காட்டு கதிர்காமம், தம்பலகாமம் போன்றன ஒரு காலகட்டங்களில் தமிழரால் ஆட்சி செய்தப் பகுதிகளாகும். எல்லாளன் துட்டைக்கைமுனு போர் நடந்த அநுராதபுரமும் ஒரு காலத்தில் தமிழ் அரசன் எல்லாளனின் ஆட்சிப் பகுதியாகவே (பிரதேசமாகவே) இருந்தது.
நிலத்தை வலிந்து கவரும் திட்டங்கள்
[தொகு]பிரித்தானியரின் வெளியேற்றத்தின் பின்னும் இந்த சிங்கள இனத்தின் நிலக் கவர்வுத் திட்டம் பல்வேறு சூழ்ச்சிகளாலும், தந்திரவழிகளாலும், திட்டமிட்டக் குடியேற்றங்களாலும் தமிழர் நிலம் சிங்களர் நிலமாக்கப்பட்டது."[1]
இதனால் தமிழ் இன மக்கள் தொகை குறைந்தும் சிங்களவர் மக்கள் தொகையும் பெருகும் நிலை ஏற்படுத்தப்பட்டது. படிப்படியாக பலப் பூர்வீகத் தமிழரின் நிலங்கள் சிங்களவர் நிலங்களாக மாறத்தொடங்கியது. பல ஊர்களின் தமிழ் பெயர்கள் சிங்களப் பெயர்களாகின.
இத்திட்டங்கள் 1980 களில் படித்த மாணவர்களை கிளர்ந்தெழ வைத்தது. அது ஆயுத போராட்ட வடிவங்களாக மாறியது. அது வளர்ந்து வெவ்வேறு சிறிலங்கா அரசிற்கும் விடுதலைப் புலிகளிற்குமான பெரும் போராகியது. இந்தப் போராட்டத்தைப் பற்றி உலகில் பலத்தரப்பட்டோரிடமும் பலத்தரப்பட்ட கருத்துக்கள் நிலவுகின்றன. ஆனால் இது இலங்கை அரசின் சிங்கள இனப் பரம்பலை ஏற்படுத்துவதற்கான தமிழர் நில அபகரிப்பு (வலிந்து கவர்தல்) போராகும்.
பெரும்பான்மையான இலங்கைத் தமிழர்கள் தமது பூர்வீக தாயகத்தை மீட்க வெவ்வேறு வழிகளிலும் முயன்றும் பங்களித்தும் வருகின்றனர். புலம்பெயர்ந்த நாடுகளில் வெவ்வேறு அழுத்தங்களுக்கும் மத்தியிலும் தமது தாயக மீட்புக்கான ஆதரவு தெரிவித்து வருகின்றனர்.
தமிழகத் தமிழர்களின் ஆதரவு
[தொகு]இலங்கையில் தமிழ் இன அழிப்பை எதிர்த்தும், தமிழரின் பாரம்பரிய நில அபகரிப்புக்கும் எதிராக தமிழகத்தில் இருந்து ஆதரவு குரல்களை பலர் எழுப்பி வருகின்றனர். இன்றைய இலங்கை சிங்கள அரசின் போர் நடவடிக்கை எதிராகவும் தமிழகத்திலும் பல்வேறு போராட்டங்கள் தொடர்கின்றன.