பேச்சு:இலங்கையில் தமிழர் நில அபகரிப்பு

மற்ற மொழிகளில் ஆதரிக்கப்படாத பக்க உள்ளடக்கம்.
கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.

மாற்ற வேண்டியவை:

  1. கட்டுரையின் பாதிப் பகுதி பொதுக் கருத்தாக உள்ளது. இவற்றை நில அபகரிப்பு என்ற தலைப்பில் சேர்க்கலாம்.
  2. ஈழத் தமிழர் கட்டுரை என்ற தலைப்பு பொருத்தமாக இருக்கும். தமிழர் நில அபகரிப்பு என்றால் தமிழ்நாட்டுப் பகுதிகளையும் சேர்க்க வேண்டிய நிலை ஏற்படும்.
  3. கட்டுரை தமிழர்க்கு ஆதரவளித்துப் பேசுவது போன்று இருப்பதாக எனக்குத் தோன்றுகிறது.

திருத்துங்கள் நன்றி -தமிழ்க்குரிசில் (பேச்சு) 16:03, 22 செப்டெம்பர் 2012 (UTC)[பதிலளி]

நன்றி தமிழ்க்குரிசில், கட்டுரை திருத்தப்பட வேண்டும், அத்துடன் தலைப்பும் மாற்றப்பட வேண்டும். இலங்கையில் தமிழர் நில அபகரிப்பு எனலாம்.--Kanags \உரையாடுக 21:42, 22 செப்டெம்பர் 2012 (UTC

வணக்கம். இலங்கை தமிழர் என்றால் இலங்கையின் பல இடங்களை குறிக்கும், ஆனால் இலங்கையில் அனைத்து இடங்களிலும் அப்படி நடைபெறவில்லை. அதனால் தமிழீழத்தில் அல்லது ஈழத்தில் என்று குரிப்பிடுவதுவே சிறந்தது.--சிவம் 02:29, 23 செப்டெம்பர் 2012 (UTC)

சிவம், தமிழீழப் பகுதிகளை விட இலங்கையின் வேறும் பல பகுதிகளில் தமிழர்களின் நில அபகரிப்புகள் இடம்பெற்றன. இனக்கலவரங்களின் போது தனிப்பட்ட தமிழர்களின் நிலங்கள் பறி போயுள்ளன. அதைப் பற்றியும் எழுதலாம். எனவே இதனைப் பொதுவான கட்டுரையாகத் தொடர்வதே நல்லது.--Kanags \உரையாடுக 04:07, 23 செப்டெம்பர் 2012 (UTC)[பதிலளி]