உள்ளடக்கத்துக்குச் செல்

இராமி ரெட்டி

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
இராமி ரெட்டி
பிறப்புகங்கசனி ராமி ரெட்டி
(1959-01-01)1 சனவரி 1959
ஆந்திரப் பிரதேசம், சித்தூர் மாவட்டம், வாயல்பாடு
இறப்பு14 ஏப்ரல் 2011(2011-04-14) (அகவை 52)
இந்தியா, தெலங்காணா, ஐதராபாத்து
பணிநடிகர், இயக்குநர், தயாரிப்பாளர்
செயற்பாட்டுக்
காலம்
1989–2011
உயரம்1.83 m (6 அடி 0 அங்)
பிள்ளைகள்3

கங்கசனி ராமி ரெட்டி (1 சனவரி 1959 - 14 ஏப்ரல் 2011) என்பவர் தெலுங்கு திரையுலகைச் சேர்ந்த இந்திய திரைப்பட நடிகர் ஆவார். இவர் இயக்குனராகவும் தயாரிப்பாளராகவும் முயன்றவர். இவர் எதிர்மறை பாத்திரங்கள் மற்றும் நகைச்சுவை பாத்திரங்களுக்கு பெயர் பெற்றவர். இவர் நன்கு அறியப்பட்ட எதிர்மறை நாயகன் ஆவார். இவர் வழக்கமாக தெலங்காணா பேச்சுவழக்கை பொறுத்தமற்று பேசும் பாணியைக் கொண்டிருந்தார். அங்குசம் படத்தில் தனது "ஸ்பாட் பெடத்தா" என்ற வசனத்தால் புகழ் பெற்றார் .[1][2]

ஆரம்ப கால வாழ்க்கை

[தொகு]

கங்கசனி ராமி ரெட்டி சித்தூர் மாவட்டத்தின் வால்மிகிபுரத்தில் (முன்னர் வயல்பாத் என்று அழைக்கப்பட்டது) பிறந்தார்.[3] உஸ்மானியா பல்கலைக்கழகத்தில் தனது பி.சி.ஜே (இதழியல்) படிப்பை மேற்கொண்டார்.[4]

தொழில்

[தொகு]

திரைபடங்களில் நடிக்க வருவதற்கு முன்பு, ரெட்டி எம். எஃப் டெய்லியில் பத்திரிகையாளராக பணியாற்றினார்.[3] இவர் வெற்றித் திரைப்படமான அங்குசம் படத்தில் நடித்த 'ஸ்பாட் நாகா' என்ற பாத்திரத்தால் புகழ் பெற்றார் மேலும் இவர் ஓசி ராமுலம்மா, அம்மோரு, கயாம், அனகனகா ஓகா ரோஜு, பெடாரிகம் போன்ற படங்களில் நடித்ததற்காகவும் அறியப்படுகிறார். மேலும் இவர் தெலுங்கு, தமிழ், கன்னடம், இந்தி, மலையாளம், போஜ்புரி மொழிகளில் எதிர்மறை பாத்திர நடிகராக 250 க்கும் மேற்பட்ட படங்களில் நடித்துள்ளார்.

இறப்பு

[தொகு]

ராமி ரெட்டி கல்லீரல் மற்றும் சிறுநீரக நோய்களால் பாதிக்கப்பட்டிருந்தார். இவர் 14, ஏப்ரல், 2011 அன்று செகந்திராபாத்தில் உள்ள ஒரு தனியார் மருத்துவமனையில் இறந்தார்.[3]

திரைப்படவியல்

[தொகு]
ஆண்டு படம் பாத்திரம் மொழி குறிப்புகள்
1990 அங்குசம் ஸ்பாட் நாகா தெலுங்கு
1990 அபிமன்யு கன்னடம்
1990 ஜகதேக வீருடு அதிலோக சுந்தரி அபுலு தெலுங்கு
1990 பிரதிபந்த் கேங்க்ஸ்டர் "ஸ்பாட்" நானா இந்தி
1991 அபிமன்யு அப்பாஸ் மலையாளம்
1991 பரம சிவுடு தெலுங்கு
1991 நாடு அதை நாடு தமிழ்
1991 க்ஷணக் க்ஷணம் ஆய்வாளர் யாதவ் தெலுங்கு
1992 420 ரங்கா தெலுங்கு
1992 பலராம கிருஷ்ணடு நுகராஜு தெலுங்கு
1992 மகான் மலையாளம்
1992 பெடாரிகம் பார்வதனேனி பரசு ராமையாவின் மகன் தெலுங்கு
1993 காயம் சர்கார் தெலுங்கு
1993 வக்த் ஹமாரா ஹை கர்னல் சிக்காரா இந்தி
1994 அல்லரி பிரேமிகுடு பைரவைய்யா தெலுங்கு
1994 எலான் மனா செட்டி இந்தி
1994 தில்வாலே கூன் இந்தி
1994 குடர் சுவாமி பாட்டீல் இந்தி
1995 அம்மனோரு கோரக் தெலுங்கு தமிழில் அம்மன் என்று மொழிமாற்றம் செய்யபட்டது
1995 அங்ராக்ஷாக் வேலு இந்தி
1995 அந்தோலன் பாபு நாயக் இந்தி
1995 ஹக்கீகத் அண்ணா இந்தி
1995 வீர் இந்தி
1996 அங்காரா ஹோண்டா தாதா இந்தி
1996 ரங்க்பாஸ் நந்து இந்தி
1997 அனகனகா ஓக ரோஜு சாக்லேட் தெலுங்கு
1997 தடயம் சிறை கண்காணிப்பாளர் பாண்டித்துரை தமிழ்
1997 இட்லர் ருத்ரராஜு தெலுங்கு
1997 ஜூவன் யுத் மதன் இந்தி
1997 காலியா பவானி சிங் இந்தி
1997 லோஹா தக்லா இந்தி
1997 ஓசி ராமுலம்மா நிலக்கிழார் ஜகன்னாயக் பட்வாரி தெலுங்கு
1998 துள்ளித் திரிந்த காலம் தேவியின் தந்தை தமிழ்
1998 சந்தால் துர்ஜன் ராய் சஹாப் சிங் இந்தி
1998 ஹத்யாரா ஷிஷுபால் சிங்கானியா இந்தி
1998 குண்டா காலா செட்டி இந்தி
1999 நெஞ்சினிலே சுப்பாரி தமிழ்
1999 கங்கா கி கசம் காவல் ஆய்வாளர் இந்தி
1999 தாதா யஷ்வந்த் இந்தி
1999 ஷெரா இந்தி
1999 ஜான்வர் ரகு செட்டி இந்தி
1999 சௌதாளா இந்தி
2000 குர்பானியன் இந்தி
2000 பூத் ராஜ் பாட்லூ இந்தி
2000 அடவி சுக்கா குருநாதம் தெலுங்கு
2000 தாகு ராம்காலி இந்தி
2000 குரோத் காவ்ரே இந்தி
2000 கணபதி தெலுங்கு
2001 கலியோன் கா பாட்ஷா இந்தி
2001 மிருகராஜு தெலுங்கு
2002 2 மச் தெலுங்கு
2003 ராகவேந்திரா தெலுங்கு
2003 சம்பு தெலுங்கு
2003 வில்லன் தெலுங்கு
2003 தடா பித்தால் ராவ் இந்தி
2003 சத்யகத்: கிரைம் நெவர் பைஸ் அப்பாஸ் அலி இந்தி
2004 அஞ்சி குருராஜ் தெலுங்கு
2004 சேசாத்ரி நாயுடு தெலுங்கு
2005 காக்கி
2005 பெல்லாம் பிச்சோடு தெலுங்கு
2005 ஸ்லோகம் தெலுங்கு
2005 அதனோக்கடே படாபாய் தெலுங்கு
2005 நாயக்குடு தெலுங்கு
2005 பாமகலப்பம் தெலுங்கு
2006 முத்து
2006 சாமான்யுடு ராமு யாதவ் தெலுங்கு
2007 போலீஸ் ஸ்டோரி 2 கன்னடம்
2007 பந்தையக் கோழி நாச்சப்பா கவுண்டர் மலையாளம்
2008 அதே நவ்வு தெலுங்கு
2009 ஜகத்குரு ஸ்ரீ ஷிரிடி சாய் பாபா தெலுங்கு
2010 தம்முனோடு தெலுங்கு
2010 சந்தடி தெலுங்கு
2010 அனகனகா ஒக ஆரண்யம் தெலுங்கு

குறிப்புகள்

[தொகு]
  1. "Villain Ram Reddy dies of cancer". www.greatandhra.com. பார்க்கப்பட்ட நாள் 2011-04-14.
  2. "Rami Reddy is no more." www.bharatstudent.com. Archived from the original on 2011-04-16. பார்க்கப்பட்ட நாள் 2011-04-14.
  3. 3.0 3.1 3.2 "Actor Rami Reddy passes away". The Hindu (Chennai, India). 14 April 2011. http://www.thehindu.com/arts/cinema/article1696518.ece. 
  4. https://www.imdb.com/name/nm0708218/

வெளி இணைப்புகள்

[தொகு]
"https://ta.wikipedia.org/w/index.php?title=இராமி_ரெட்டி&oldid=3544180" இலிருந்து மீள்விக்கப்பட்டது