இமயமலை பிணந்தின்னிக் கழுகு

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.

இமயமலை பிணந்தின்னிக் கழுகு
உயிரியல் வகைப்பாடு e
திணை:
விலங்கு
தொகுதி:
வரிசை:
குடும்பம்:
பேரினம்:
இனம்:
G. himalayensis
இருசொற் பெயரீடு
Gyps himalayensis
Hume, 1869

இமயமலை பிணந்தின்னிக் கழுகு அல்லது இமயமலை ராஜாளி (Himalayan vulture அல்லது Himalayan griffon vulture (Gyps himalayensis) என்பது அசிபித்ரிடே குடும்பத்தைச் சேர்ந்த ஒரு தொல்லுலகக் கழுகு ஆகும். இது ஐரோப்பிய பிணந்திண்ணிக் கழுகுடன் நெருக்கமாக தொடர்புடையது, மேலும் இது ஒரு காலத்தில் அதன் ஒரு துணை இனமாக கருதப்பட்டது. இந்த இனமானது பொதுவாக இமயமலையில் மற்றும் அருகிலுள்ள திபெத்திய பீடபூமியில் காணப்படுகின்றன என்றாலும் இவை தெலங்காணாவுக்கும் தமிழ்நாட்டின் ஆனைக்கட்டி மலைப்பகுதிக்கும்[2] வலசை வந்ததை பறவையியலாளர்கள் கண்டறிந்தனர். இது தொல்லுலகின் அசிபித்ரிடே குடும்பத்தின் இரண்டு பெரிய குழுகுகளில் ஒன்றாகும்.

விளக்கம்[தொகு]

அளவீடுகள்
[3][4]
நீளம் 1,030–1,150 mm (41–45 அங்)
அலகு 71–77 mm (2.8–3.0 அங்)
இறக்கை 755–805 mm (30–32 அங்)
வால் 355–405 mm (14–16 அங்)
கணுக்கால் 110–126 mm (4.3–5.0 அங்)

இது ஒரு பெரிய கழுகு ஆகும்.[4] மேலும் இது இமயமலையில் காணப்படும் பெரிய மற்றும் கனத்த பறவை ஆகும். இவற்றின் உடலும் பின்னங்கால்களும் வாலுடன் காண சிக்கம் போன்று முடிகள் அடர்ந்தும், இவற்றின் தலை பெரிய பருந்தைப் போலவும் இருக்கும்.

மேற்கோள்கள்[தொகு]

  1. "Gyps himalayensis". பன்னாட்டு இயற்கைப் பாதுகாப்புச் சங்கத்தின் செம்பட்டியல் பதிப்பு 2013.2. பன்னாட்டு இயற்கைப் பாதுகாப்புச் சங்கம். 2012. பார்க்கப்பட்ட நாள் 26 November 2013. {{cite web}}: Invalid |ref=harv (help)
  2. https://ebird.org/checklist/S82155066
  3. Rasmussen, P. C.; Anderton, J. C. (2005). Birds of South Asia, The Ripley Guide. 2. Washington DC and Barcelona: Smithsonian Institution and Lynx Edicions. பக். 90–91. 
  4. 4.0 4.1 Eagles, Hawks and Falcons of the World by Leslie Brown & Dean Amadon. The Wellfleet Press (1986), பன்னாட்டுத் தரப்புத்தக எண் 978-1555214722.