இன் டைம்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
இன் டைம்
இயக்கம்ஆண்ட்ரூ நிக்கோல்
தயாரிப்பு
கதைஆண்ட்ரூ நிக்கோல்
இசைகிரேக் ஆம்ஸ்ட்ராங்
நடிப்பு{Plainlist
ஒளிப்பதிவுரோஜர் டீக்கின்ஸ் (ஒளிப்பதிவாளர்)
படத்தொகுப்புசாக் ஸ்டான்பெர்க்
கலையகம்
விநியோகம்20ஆம் சென்சுரி பாக்ஸ்
வெளியீடுஅக்டோபர் 20, 2011 (2011-10-20)(Westwood, Los Angeles)
அக்டோபர் 28, 2011 (United States)
ஓட்டம்109 minutes[2]
நாடுஐக்கிய நாடுகள்
மொழிஆங்கிலம்
ஆக்கச்செலவு$40 மில்லியன்[3]
மொத்த வருவாய்$174 மில்லியன்[4]

இன் டைம் என்பது 2011 இல் வெளிவந்த அமெரிக்க அறிவியல் சார்ந்த புனைவுத் திரைப்படம் ஆகும். ஆண்ட்ரூ நிக்கோல். அமண்டா செஃப்ரிட் மற்றும் ஜஸ்டின் டிம்பர்லேக் ஆகியோர் இத்திரைப்படத்தை தயாரித்தனர்.

இத்திரைப்படத்தில் பணத்திற்கு பதிலாக நேரத்தினை பயன்படுத்தினால் எப்படி இருக்கும் என கற்பனை செய்திருந்தார்கள். அந்த உலகத்தில் வாழுகின்ற அனைத்து மனிதர்களின் கைகளில் அவர்களின் வாழ்நாள் கடிகாரம் டிஜிட்டல் முறையில் ஓடும். வேலை செய்து வாழ்நாளினை சம்பளமாக பெற்றுக் கொள்கிறார்கள். கடிகாரத்தின் நேரத்தை பகிர்ந்து கொள்ளவும் இயலும்.

நடிகர்கள்[தொகு]

கதை உலகம்[தொகு]

2169 ஆம் ஆண்டு, மக்கள் அனைவரின் முன்கைகளிலும் நேரம் டிஜிட்டல் முறையில் குறிக்கப்பட்டுள்ளது. ஒரு கைகடிகாரத்தில் உள்ளது போல அந்த நேரம் குறைந்து கொண்டே வருகிறது. ஒருவரின் நேரம் பூஜ்ஜியத்தினைத் தொட்டால் அவர் இறந்து விடுகிறார். மக்கள் பணத்திற்கு பதிலாக தங்களின் நேரத்தினை பயன்படுத்துகிறார்கள். டைம் கேப்சூல்கள் என்ற கருவி மூலம் நேரத்தினை கையாளுகிறார்கள். அதில் மக்களகன் நேரத்தினை எடுத்து சேமித்துக் கொள்ளவும், சேமித்த நேரத்தினை பெற்றுக்கொள்ளவும் இயலுகிறது. அக்கருவிகள் வங்கிகளில் பாதுகாப்பாக வைக்கப்படுகிறது. மக்கள் தங்களுக்குள் நேரத்தினை நேரடியாக கைகளை இணைப்பதன் மூலம் மாற்றிக் கொள்கிறார்கள்.

பேருந்து, மகிழுந்து போன்ற வாகனங்களில் பயணிக்க நேரத்தினை செலவு செய்ய வேண்டியுள்ளது. வேண்டிய உணவுகள், மதுபானங்கள், உடைகள் வாங்கவும் என பணத்திற்கு பதிலாக நேரத்தினை செலவு செய்கிறார்கள். வேலைக்கு சென்று உழைத்து ஊதியமாக நேரத்தினைப் பெருகிறார்கள். இந்த உலகில் நேரத்தினைக் கொண்டு இடங்களைப் பிரித்திருக்கிறார்கள். அதிகபட்ச வாழ்நாளைக் கொண்டவர்கள் பகுதி மிகவும் ஆடம்பரமாகவும், அதற்கு எதிர்மாறாக ஏழைகள் பகுதியும் உள்ளது. இங்கு 24 மணிநேரம் வாழ்நாள் கொண்டவர்கள் கூட உள்ளார்கள். அவர்கள் தினம் உழைத்து ஊதியம் பெற்று வாழ்கிறார்கள். காவலர்களைப் போல இந்த நேரத்தினை வைத்து காவல்காக்கும் 'டைம் கீப்பர்ஸ்' என்போர் உள்ளார்கள்.

கதை[தொகு]

வில் சாலஸ் (நாயகன்) என்பவர் தொழிலாளியாக டேடன் ஆலையில் பணி செய்கிறார். ஒரு மது விடுதியில் ஹென்றி ஹாமில்டன் என்பரின் நேரத்தினை கொள்ளயடிக்க ஒரு கும்பல் வருகிறது. அதன் தலைவனான ஃபோர்டிஸிடமிருந்து வில் ஹென்றியை காப்பாற்றி தன்னோட இரவு தங்க வைக்கிறார். ஹென்றியிடம் 116 வருடங்கள் வாழ்நாள் உள்ளது. விடியற்காலையில் தன்னை காப்பிற்றிய வில்லிற்கு அந்த நேரத்தினை ஏற்றிவிட்டு மிக சொற்பமான நேரத்தோடு அருகிலுள்ள பாலத்திற்கு சென்று ஏறி நிற்கிறார். வில் எழுந்து தன்னுடைய கைகளில் அதிக நேரம் இருப்பதை உணர்ந்து ஹென்றியை தேடுகிறார். ஆனால் அதற்குள் ஹென்றி இறந்து விடுகிறார்.

வில் போரல் எனும் தன் நண்பனை சந்தித்து அவனுக்கு 10 வருடங்களைத் தருகிறார். போரல் அந்த பணத்தை வைத்து குடிபழக்கத்திற்கு அடிமை ஆகிறான். வில் தன்னுடைய அம்மாவைக் காண பேருந்து நிலையத்தில் காத்திருகக்கிறார். வில்லின் அம்மாவிற்கு மிகக் குறைவான நேரமே உள்ளது. அதனால் பேருந்தில் ஏறிச் செல்ல முற்படுகிறார். ஆனால் பேருந்தின் கட்டணம் உயர்ந்துவிட்டதால் வில்லை காண ஓடி வருகிறார். வில்லும் அம்மா வரவிருந்த பேருந்து அவர் இல்லாமல் வந்திருப்பதை கண்டு நிலமையை புரிந்து அம்மாவை நோக்கி ஓடுகிறார். ஒரு கட்டத்தில் வில்லின் அம்மா வில்லை சந்திக்கும் தருணத்தில் நேரமின்றி இறந்து போகிறார்.

வில் தன்னுடைய எல்லையை விட்டு பணக்காரர்கள் வசிக்கும் பகுதிக்கு பயணப்படுகிறார். அங்கிருக்கும் கேசினோ எனும் சூதாட்ட இடத்தில் பிலிப் வெயிஸ் மற்றும் அவரது மகள் சில்வியா ஆகியோரை சந்திக்கிறார். சில்வியாவுக்கும், வில்லிற்கும் காதல் மலர்கிறது. வில் கேசினோவில் சம்பாதித்த நேரத்தை டைம்கீப்பர்ஸ் எடுத்துக்கொண்டு கணிசமான அளவு நேரத்தை மட்டும் வில்லிற்கு தருகிறார்கள். வில்லை அங்கிருந்து அவனுடைய இடத்திற்கு செல்ல வழியுருத்துகிறார்கள். வில் சில்வியாவை கைதியாக வைத்து தப்பிக்கிறார். சில்வியாவின் நேரத்தை தனக்கு பகிர்ந்து தர கோருகிறார். ஆனால் சில்வியா மறுத்துவிடுகிறாள். டைம் கீப்பர்ஸ் துரத்தும் போது சில்வியா, வில் வந்த வாகனம் விபத்துக்குள்ளாகிறது. சிலர் சில்வியாவின் நேரத்தையும் திருடிக் கொள்கிறார்கள். இப்போது சில்வியாவும், வில்லும் மிகக்குறைந்த நேரத்தோடு இருக்கிறார்கள்.

பணக்கார பெண்ணான சில்வியா ஏழைகளின் உணர்வுகளை புரிந்து கொள்ள தொடங்குகிறாள். வில்லோடு இணைந்து சில்வியா ஒரு வங்கியை கொள்ளையடிக்கிறார்கள். நேரத்தை கடனாகப்பெற காத்திருப் போர்களையும் டைம் கேப்சியூல்களை எடுத்துக் கொள்ள சொல்கிறார்கள். இதனால் அன்றாடப் பணி பாதிக்கிறது. எனினும் இது பெரிய மாற்றத்தை நிகழ்த்தவில்லை என காண்கிறார்கள். தேவைப்படுகின்ற பலருக்கு உதவி செய்ய சில்வியாவின் தந்தையிடம் உள்ள 10,00,000 ஆண்டு மதிப்புள்ள கேப்சியூலை மிரட்டி எடுத்துக்கொள்கிறார்கள். அதை மக்களிடம் பகிர்ந்து கொண்டதும், ஏழை என்பவர்களே இல்லை என்ற நிலை உருவாகிறது.

பாக்ஸ் ஆபிஸ்[தொகு]

இன் டைம் திரைப்படம் வெளியான வாரத்தில் 12 மில்லியன் பணத்தை வசூல் செய்தது. இந்தப்படம் இறுதியாக அமெரிக்காவில் $37.5 டாலரும், உலக அளவில் $173.9 டாலரும் வசூல் செய்தது.[4]

ஆதாரங்கள்[தொகு]

  1. 1.0 1.1 "In Time (2011)". AFI Catalog of Feature Films. பார்க்கப்பட்ட நாள் April 16, 2018.
  2. "IN TIME (12A)". British Board of Film Classification. October 11, 2011. பார்க்கப்பட்ட நாள் September 4, 2012.
  3. Kaufman, Amy (October 27, 2011). "Movie Projector: 'Puss in Boots' to stomp on competition". Los Angeles Times. http://latimesblogs.latimes.com/entertainmentnewsbuzz/2011/10/box-office-puss-in-boots-in-time-rum-diary.html. பார்த்த நாள்: October 27, 2011. 
  4. 4.0 4.1 "In Time". பாக்சு ஆபிசு மோசோ. பார்க்கப்பட்ட நாள் December 27, 2011.

வெளி இணைப்புகள்[தொகு]

"https://ta.wikipedia.org/w/index.php?title=இன்_டைம்&oldid=3817696" இலிருந்து மீள்விக்கப்பட்டது