உள்ளடக்கத்துக்குச் செல்

ஆண்டனி ராஜூ

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
ஆண்டனி ராஜூ
ആന്റണി രാജു
சாலை போக்குவரத்து, மோட்டார் வாகனங்கள், நீர் போக்குவரத்து அமைச்சர், கேரள அரசு
பதவியில் உள்ளார்
பதவியில்
20 மே 2021 (2021-05-20)
முன்னையவர்எ. கே. சசீந்திரன்
தொகுதிதிருவனந்தபுரம்
கேரள சட்டமன்ற உறுப்பினர்
பதவியில் உள்ளார்
பதவியில்
மே 2, 2021 (2021-05-02)
முன்னையவர்வி. எஸ். சிவக்குமார்
தொகுதிதிருவனந்தபுரம் சட்டமன்றத் தொகுதி
கேரள சட்டமன்ற உறுப்பினர்
பதவியில்
மே 20, 1996 (1996-05-20) – மே 10, 2001 (2001-05-10)
முன்னையவர்எம். எம். ஆசன்
பின்னவர்எம். வி. இராகவன்
தொகுதிதிருவனந்தபுரம் மேற்கு
தனிப்பட்ட விவரங்கள்
பிறப்பு18 நவம்பர் 1954 (1954-11-18) (அகவை 69)
திருவனந்தபுரம்]
அரசியல் கட்சிஜனாதிபத்ய கேரள காங்கிரசு[1]
வாழிடம்(s)நந்தன்கோடு, திருவனந்தபுரம், கேரளம்
இணையத்தளம்www.antonyraju.in

ஆண்டனி ராஜூ (Antony Raju) ( மலையாளம்: ആന്റണി രാജു ) ஓர் இந்திய அரசியல்வாதியும், கேரள அரசில் சாலை போக்குவரத்துத் துறை, மோட்டார் வாகனங்கள், நீர் போக்குவரத்து ஆகியதுறைகளின் அமைச்சராகவும் இருந்தார்.[2] [3] இவர் ஜனாதிபத்ய கேரள காங்கிரசுகட்சியின் தலைவராவார்.இவர் 2021இல் கேரளாவின் திருவனந்தபுரம் தொகுதியிலிருந்து கேரள சட்டமன்றத்திற்கு தேர்ந்தெடுக்கப்பட்டார். முன்னதாக இவர் திருவனந்தபுரம் மேற்கு தொகுதியின் சட்டமன்ற உறுப்பினராக 1996 முதல் 2001 வரை இருந்தார்.

ஆரம்பகால வாழ்க்கையும், கல்வியும்

[தொகு]

ராஜூ 18 நவம்பர் 1954 அன்று , திருவனந்தபுரத்தின் பூந்துறையில் பிறந்தார். பூந்துறை புனித தோமையா பள்ளியில் ஆரம்பக் கல்வியைப் பெற்ற இவர், எர்ணாகுளம், கலமசேரி, ராஜகிரி பள்ளியில் பள்ளிப் படிப்பை முடித்தார்.[4] திருவனந்தபுரம் தும்பா புனித சேவியர் கல்லூரியில் தனது முதுகலை பட்டப்படிப்பை முடித்தார்.

அரசியல் வாழ்க்கை

[தொகு]

1996இல், ஆண்டனி ராஜூ கேரள காங்கிரசு (ஜோசப்) கட்சியின் சார்பில் இடதுசாரி ஜனநாயக முன்னனி வேட்பாளராக போட்டியிட்டார். இவரது முதல் அரசியல் வெற்றி திருவனந்தபுரம் மேற்குத் தொகுதியிலிருந்து வந்த்தது. இருப்பினும், 2016 தேர்தலில் இவர் ஜனாதிபத்ய கேரள காங்கிரசு வேட்பாளராக போட்டியிட்டு வி. எஸ். சிவக்குமாரிடம் தோற்றார். ஆனால் 2021 தேர்தலில், இவர் சிவகுமாரை 8000 வாக்குகள் வித்தியாசத்தில் தோற்கடித்தார்.

மேற்கோள்கள்

[தொகு]
  1. "Kerala Congress (M) rebels form new party, may join LDF". The Indian Express. 10 March 2016. பார்க்கப்பட்ட நாள் 23 April 2016.
  2. "காப்பகப்படுத்தப்பட்ட நகல்". Archived from the original on 2021-05-21. பார்க்கப்பட்ட நாள் 2021-08-09.
  3. "Notifications - Government of Kerala, India". kerala.gov.in. Archived from the original on 2021-05-17. பார்க்கப்பட்ட நாள் 2021-05-21.
  4. http://www.uniindia.com/ldf-candidate-antony-raju-begins-election-campaign/election/news/431156.html

வெளி இணைப்புகள்

[தொகு]
"https://ta.wikipedia.org/w/index.php?title=ஆண்டனி_ராஜூ&oldid=3542513" இலிருந்து மீள்விக்கப்பட்டது