உள்ளடக்கத்துக்குச் செல்

அல்கா அஜித்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
அல்கா அஜித்
பிறப்புகேரளம், இந்தியா
இசை வடிவங்கள்பின்னணிப் பாடகர்
தொழில்(கள்)பாடகர்
இசைக்கருவி(கள்)குரலிசைப்பாடகர்

அல்கா அஜித் (Alka Ajith) ( மலையாளம்: അൽക്കാ അജിത്‌ ) ஒரு இந்திய பின்னணி பாடகர் ஆவார். விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பப்பட்ட தமிழ் மொழி இசை போட்டி உண்மை நிலைநிகழ்ச்சியான ஏர்டெல் சூப்பர் சிங்கர் ஜூனியரின் பருவம் 2 ஐ வென்றதில் மிகவும் பிரபலமானவர். அவருக்கு 2017 ஆம் ஆண்டில் ஜெய்சி அறக்கட்டளையின் சிறந்த பெண் பாடகர் விருது வழங்கப்பட்டது.[1]

குடும்பம்

[தொகு]

எம்.பி. அஜித் குமார் மற்றும் கே.சஜிதா ஆகியோருக்கு அல்கா பிறந்தார்.[2] அவரது தந்தைவழி தாத்தா ஒரு குறிப்பிடத்தக்க பாடகர். அவரது தந்தை அஜித் குமார் ஒரு தொழில்முறை இசைக்கலைஞர் மற்றும் இசை அமைப்பாளர் ஆவார். அவர் அல்காவின் இசைக்குழுவான "சங்கீத் சாகர்" என்ற குழுவை நடத்துகிறார். அல்கா முதலில் தனது தந்தையிடமிருந்து இசையைக் கற்றுக்கொண்டார்.

இசை வாழ்க்கை

[தொகு]

ஆரம்ப கால வாழ்க்கை

[தொகு]

2000 ஆம் ஆண்டில் இரண்டரை வயதாக இருந்தபோது அல்கா பொது நிகழ்ச்சி ஒன்றில் தனது முதல் வெளிப்பாட்டைக் கொடுத்தார்,[2][3] அங்கு அவர் "சோல்ஜர்.... சோல்ஜர்" என்ற இந்தி மொழி பாடலைப் பாடினார். 2001 ஆம் ஆண்டில், அவர் சர்வதேச யுனெஸ்கோ கிளப் ஆஃப் ரெபல்லே (ஏபி) விருதையும் தங்கப் பதக்கத்தையும் வென்றார், மற்றும் 2002 ஆம் ஆண்டில், ரோட்டரி சர்வதேச சாதனை விருது மற்றும் தங்கப் பதக்கத்தை வென்றார்.

அவர் நான்கு வயதாக இருந்தபோது, தனது முதல் குரலிசைத் தொகுப்பான "ஐ லவ் மை இந்தியா" ஐ வெளியிட்டார்.[2] 2003 ஆம் ஆண்டில், அல்கா லிம்கா புக் ஆஃப் வேர்ல்ட் ரெக்கார்ட்ஸில் நுழைந்தார், மற்றும் புதுதில்லியில் பாரதீய கவுரவ் புராஸ்கர் பட்டத்தை வென்றார். 2003 ஆம் ஆண்டில், அவர் சவுபர்னிகா தீரம் மினி ஸ்கிரீன் விருதையும், தலசேரி த்ரிஷ்ய காலாவின் ஏடி உம்மர் விருதையும் வென்றார்.

ஏழு வயதை எட்டுவதற்கு முன்பு, அல்கா 5,000 இற்கும் மேற்பட்ட பாடல்களைப் பாடியுள்ளார்,[2] இவரால் 11 மொழிகளில் பாட முடியும். மேலும், இந்தியா முழுவதும் 500 க்கும் மேற்பட்ட இசை நிகழ்ச்சிகளை வழங்கியுள்ளார்.

ஏர்டெல் சூப்பர் சிங்கர் ஜூனியர்

[தொகு]

2010 இல், அல்கா ஏர்டெல் சூப்பர் சிங்கர் ஜூனியர், பருவம் 2-இல் இவர் வெற்றி பெறுவதற்கு முன்னதாக [4] விஜய் தொலைக்காட்சியால் 2009 முதல் நடத்தப்பட்டு வந்த உண்மை நிலை தமிழ் இசைப் போட்டியில் பங்கேற்று வந்தார். பிறகு 2010 ஆம் ஆண்டில் வெற்றியாளராக முடிசூட்டப்பட்டார்.

பின்னர் அவர் ஏர்டெல் சூப்பர் சிங்கர் 3, மற்றும் ஏர்டெல் சூப்பர் சிங்கர் ஜூனியர் 4 ஆகியவற்றில் விருந்தினர் கலைஞராக தோன்றினார்.

பின்னணி பாடல்

[தொகு]

அல்கா மம்மூட்டி நடித்த மலையான மொழித் திரைப்படமான ”தி டிரெயின்” படத்தில் ”சிறகெங்கு” எனத் தொடங்கும் பாடலைப் பாடியதன் மூலம் தனது முதல் திரைப்படப் பின்னணிப் பாடல் வாய்ப்பைப் பெற்றார். இது ஏர்டெல் சூப்பர் சிங்கர் ஜூனியர் (பருவம் 2) இன் மிகப்பெரும் இறுதிப்போட்டியில் பாடகர் ஸ்ரீனிவாஸால் அடையாளம் காணப்பட்ட பிறகு நடந்த நிகழ்வாகும்.

2008 ஆம் ஆண்டில், அவரது முதல் இசை ஆல்பமான சக்கரமுத்து வெளியிடப்பட்டது, அதில் அவர் 10 வயதில் பாடிய பாடல்கள் அடங்கும்.

மேற்கோள்கள்

[தொகு]
"https://ta.wikipedia.org/w/index.php?title=அல்கா_அஜித்&oldid=4145772" இலிருந்து மீள்விக்கப்பட்டது