அலங்கார மரச் சிலந்தி
அலங்கார மரச் சிலந்தி | |
---|---|
Juvenile male | |
உயிரியல் வகைப்பாடு |
அலங்கார மரச் சிலந்தி (ornamental tree spider) என்றும் அழைக்கப்படும் போசிலோதெரியா மெட்டாலிகா (Poecilotheria metallica), என்பது ஒரு சிலந்தி வகையாகும். இது டரான்டுலா குழுவைச்சேர்ந்த பழைய உலக இனமாகும். இது போய்சிலோதெரியா இனத்தின் ஒரே நீல இனமாகும். இந்த இன சிலந்திகளின் இயற்கையான வாழ்விடமாக இந்தியாவின், ஆந்திரப் பிரதேசத்தின், இலையுதிர் காடுகள் உள்ளன. இது பன்னாட்டு இயற்கைப் பாதுகாப்புச் சங்கத்தால் மிக அருகிய இனம் என வகைப்படுத்தப்பட்டுள்ளது.
இந்த சிலந்நியானது பெரும்பாலும் பாறை இடுக்குகளிலும், பாறை அடியிலும் வாழக்கூடியது. இது முதலில் ஆந்திர மாநிலம், நந்தியாலு, கிட்டலூருக்கு இடைப்பட்ட காடுகளில் பூட்டி என்ற இடத்தில் 1899ஆம் ஆண்டு ரெஜி னால்டு தலைமையிலான குழுவினர் கண்டறிந்தனர். இந்தியாவில் இந்த சிலந்திவகையானது இந்த இடத்தில் மட்டும் உள்ளதாக கருதப்பட்டுவந்த நிலையில். தமிழ்நாட்டின், விழுப்புரம் மாவட்டம், செஞ்சி அருகே பாக்கம் காப்புக்காடு பகுதியில் இந்த அரியவகை சிலந்தியை உள்நாட்டு பல்லுயிர் பாதுகாப்பு அமைப்பு கண்டறிந்துள்ளது.[2]
மேற்கோள்கள்
[தொகு]- ↑ Molur, S.; Daniel, B.A.; Siliwal, M. (2008). "Poecilotheria metallica". செம்பட்டியல் 2008: e.T63563A12681959. doi:10.2305/IUCN.UK.2008.RLTS.T63563A12681959.en. http://www.iucnredlist.org/details/63563/0. பார்த்த நாள்: 3 January 2018.
- ↑ "செஞ்சி அருகே பாக்கம் காப்புக்காடு பகுதியில் கண்டறியப்பட்ட அபூர்வ வகை சிலந்தி". செய்தி. இந்து தமிழ். 28 ஆகத்து 2019. பார்க்கப்பட்ட நாள் 17 செப்டம்பர் 2019.
{{cite web}}
: Check date values in:|accessdate=
(help)