அர்சா பரத்கோடி

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
அர்சா பரத்கோடி
நாடுஇந்தியா
பிறப்புபெப்ரவரி 7, 2000 (2000-02-07) (அகவை 24)
குண்டூர், இந்தியா
பட்டம்கிராண்டுமாசுட்டர் (2019)[1]
பிடே தரவுகோள்2489 (திசம்பர் 2021)
உச்சத் தரவுகோள்2608 (மார்ச்சு 2023)

அர்சா பரத்கோடி (Harsha Bharathakoti) இந்திய நாட்டைச் சேர்ந்த ஒரு சதுரங்க விளையாட்டு வீரராவார். 2000 ஆம் ஆண்டு பிப்ரவரி மாதம் ஏழாம் தேதியன்று இவர் பிறந்தார். பிடே அமைப்பு இவருக்கு 2019 ஆம் ஆண்டில் கிராண்ட்மாசுட்டர் பட்டம் வழங்கியது.

சதுரங்க வாழ்க்கை[தொகு]

2022 ஆம் ஆண்டு நவம்பர் மாதத்தில் அர்சா ஆசிய கண்டங்களிடையிலான சதுரங்க வெற்றியாளர் போட்டியில் இரண்டாம் இடத்தைப் பிடித்தார், ஷம்சிடின் வோகிடோவுக்கு எதிராக டிரா செய்ததன் விளைவாக ஆர் பிரக்ஞானந்தாவிடம் தோற்றார். சம்சித்தின் வோகிதோவுடன் சமநிலை போட்டியை முடித்த இவர் பிரக்ஞானந்தாவுடன் ஆட்டத்தை இழந்தார்.[2][3]

மார்ச் 2023 இல், அர்சா கேப்பெல்-லா-கிராண்டே திறந்தநிலைப் போட்டியில் இரண்டாம் இடத்தைப் பிடித்தார்.[4] பின்னர் இவர் ஆர்மகெடான் சுற்றில் திப்தாயன் கோசை தோற்கடித்து அதிரடி விரைவு சதுரங்கப் போட்டியை வென்றார்.[5]

2023 ஆம் ஆண்டு அசர்பைசான் நாட்டின் பக்கூ நகரத்தில் நடைபெற்ற சதுரங்க உலகக் கோப்பை போட்டியிலும் இவர் விளையாடினார். முதல் சுற்றில் சியார்ச்சிய சதுரங்க வீரர் லெவன் பான்சுலாயாவிடம் தோற்றார்.[6]

மேற்கோள்கள்[தொகு]

  1. "FIDE Title Application (GM)" (PDF).
  2. "2022 Asian Continental Championship: Praggnanadhaa and Nandhidhaa clinch titles". November 3, 2022.
  3. "Telangana's Harsha emerges runner-up at Asian Continental Chess championship". November 3, 2022.
  4. Ahmed, Shahid (March 2, 2023). "Sethuraman wins Cappelle-la-Grande Open on his 30th birthday".
  5. Ahmed, Shahid (March 15, 2023). "Harsha Bharathakoti wins Chessemy Blitz Open 2023, Diptayan second and Sayantan third".
  6. "FIDE World Cup 2023: Preliminary lists of eligible players announced".
"https://ta.wikipedia.org/w/index.php?title=அர்சா_பரத்கோடி&oldid=3793260" இலிருந்து மீள்விக்கப்பட்டது