அரைப்பைடீ
அரைப்பைடீ | |
---|---|
அரைப்பிசு துருத்தா (Arripis trutta) | |
உயிரியல் வகைப்பாடு | |
திணை: | |
தொகுதி: | |
வகுப்பு: | |
வரிசை: | |
துணைவரிசை: | |
குடும்பம்: | அரைப்பைடீ
|
பேரினம்: | அரிப்பிசு
|
பேரினங்கள் | |
கட்டுரையில் பார்க்கவும். |
அரைப்பைடீ (Arripidae), பேர்சிஃபார்மசு ஒழுங்கைச் சேர்ந்த ஒரு மீன் குடும்பம் ஆகும். ஆசுத்திரேலிய சால்மன் அல்லது ஆசுத்திரலேசிய சால்மன் ஆகிய பொதுப் பெயர்களிலும் இது அழைக்கப்படுகின்றது. சால்மன் என்ற பெயரில் அழைக்கப்பட்டாலும், இவை வட அரைக்கோளத்தில் காணப்படும் சால்மனைடீ என்னும் குடும்பத்தைச் சேர்ந்த "சால்மன்"களுக்கு உறவுடையவை அல்ல. நடுத்தர அளவு கொண்ட இம் மீன்கள் கடல் மீன்கள் ஆகும். இக் குடும்பத்தில் நான்கு இனங்கள் மட்டுமேயுண்டு. இவை அரிப்பிசு என்னும் ஒரே பேரினத்தின் கீழ் வைக்கப்பட்டுள்ளன. இவை தாசுமேனியா உட்பட்ட தெற்கு ஆசுத்திரேலியா, நியூசிலாந்து ஆகிய நாடுகளின் கடல் பகுதிகளில் காணப்படுகின்றன.
இனங்கள்
[தொகு]அரிப்பிசு சியோசியானசு (Arripis georgianus)
அரிப்பிசு துருத்தா (Arripis trutta)
அரிப்பிசு துருத்தாசியா (Arripis truttacea)
அரிப்பிசு சைலாபியன் (Arripis xylabion)
இவற்றையும் பார்க்கவும்
[தொகு]உசாத்துணை
[தொகு]- ஃபிஷ்பேஸ்.ஆர்க் (ஆங்கில மொழியில்)