அரசு சட்டக் கல்லூரி, கோழிக்கோடு
அரசு சட்டக் கல்லூரி, கோழிக்கோடு ( സർക്കാർ നിയമ കലാലയം, കോഴിക്കോട്; Government Law College, Kozhikode) இந்தியாவில் கோழிக்கோட்டின் எல்லைப்புறத்தில் அமைந்துள்ளது. இது கேரள அரசிற்கு சொந்தமானதும், கோழிக்கோடு பல்கலைக்கழகத்துடன் இணைக்கப்பட்டதும் ஆகும். கேரளத்தின் வடக்கு மலபாரின் தேவைக்காக இக்கல்லூரி அமையப் பெற்றுள்ளது. மாநில அளவிலான நுழைவுத்தேர்வின் வாயிலாக மாணவர்கள் சேர்க்கை நடத்தப்படுகிறது.[1] இந்தக் கல்லூரி சட்டங்களில் இளையர் (LL.B) மற்றும் சட்டங்களில் நிறைஞர் (LL.M) பாடத் திட்டக் கல்வியை வழங்குகிறது.
தொடக்கம்
[தொகு]இரண்டு நூற்றாண்டு பழைமையான நீதிமன்ற வளாகத்தைக் கொண்டது கோழிக்கோடு மாநகரம். 1970-ல் கேரள அரசு மாநிலத்தின் மூன்றாவது சட்டக் கல்லூரியை இந்த மாநகரில் தொடங்கியது. இதுவே கேரள மாநிலத்தின் வடக்கு பகுதியில் நிறுவப்பட்ட முதல் சட்டக் கல்லூரி ஆகும். இந்தக் கல்லூரி மாநகரின் மையப்பகுதியில் அமைந்துள்ள அரசு பயிற்சிக் கல்லூரி கட்டிடத்தில் தொடங்கப்பட்டது. பேராசிரியர் எம். கிருஷ்ணன் நாயர் முதல் முதல்வரும், பேராசிரியர் இராமகிருஷ்ணன் முதல் விரிவுரையாளரும் ஆவர். முதல் பாடத்திட்டமாக சட்டங்களின் இளையர் (LL.B) தொடங்கப்பட்டு 1973 ஆம் ஆண்டு முதல் பட்டதாரிகள் வெளியே வந்தனர். 1976-ல் வரிச் சட்டத்தை சிறப்புப் பாடமாகக் கொண்ட சட்டங்களின் நிறைஞர் (LL.M) பாடத்திட்டம் தொடங்கப்பட்டது.
தற்போது
[தொகு]1982-ல் கல்லூரி அதன் சொந்த வளாகத்திற்கு மாற்றப்பட்டது. புதிய வளாகத்தில் ஒரு அகாதமிக் கட்டிடம், ஆராய்ச்சி கட்டிடம் மற்றும் இருபாலருக்குமான தனித்தனி விடுதிகளும் உள்ளன. 1984-ல் ஐந்தாண்டு சட்டங்களில் இளையர் (5 ஆண்டு LL.B) படிப்பு தொடங்கப்பட்டது. தற்போது கல்லூரியில் ஐந்தாண்டு மற்றும் மூன்றாண்டு இளையர் படிப்பும் இரண்டாண்டு முதியர் படிப்பும் உள்ளன.
மேற்கோள்கள்
[தொகு]- ↑ Q & A பரணிடப்பட்டது 2012-11-07 at the வந்தவழி இயந்திரம், EDUCATION PLUS-தி இந்து (ஆங்கிலம்), நாள்: ஜூலை 24, 2007.