அமிர்தா சௌத்ரி
அமிர்தா சௌத்ரி | |
---|---|
2011இல் அமிர்தா சௌத்ரி | |
பிறப்பு | அமிர்தா அரோரா 26 சூன் 1972 ஜலந்தர், பஞ்சாப், இந்தியா |
இறப்பு | 22 அக்டோபர் 2012 லூதியானா | (அகவை 40)
மற்ற பெயர்கள் | ஷீனா |
கல்வி | பஞ்சாப் வேளாண்மை பல்கலைக்கழகம், லூதியானா |
அமிர்தா சௌத்ரி (Amrita Chaudhry) (26 சூன் 1972 - 22 அக்டோபர் 2012) இந்தியன் எக்சுபிரசு செய்தித்தாளின் முதன்மை நிருபராக பணியாற்ரிய ஒரு இந்திய அச்சு ஊடக பத்திரிகையாளர் ஆவார். செய்தித்தாளுடன் தனது பத்தாண்டு கால வாழ்க்கையில், அமிர்தா பஞ்சாப்பில் பல்வேறு பிரச்சனைகள் குறித்து தனது அறிக்கைக்கு பரந்த அங்கீகாரம் பெற்றார். ஆவணப்படத் தயாரிப்பாளர் தல்ஜித் ஆமி தயாரித்த பெண்கள் குறித்த ஆவணப்படத் தொடரின் ஒரு பகுதியாக இவர் இருந்தார்.[1]
சொந்த வாழ்க்கை
[தொகு]அமிர்தா, ஜலந்தரில் பிறந்தார், அங்கு இவரது தந்தை ஹர்பன்ஸ் சிங் அரோரா மாநில மின்சார வாரியத்தில் பொறியாளராக பணிபுரிந்தார். இமாச்சலப் பிரதேசத்தில் உள்ள தூய இருதய உயர்நிலைப் பள்ளியில் (சித்பூர்) தனது ஆரம்பப் பள்ளிப் படிப்பை முடித்தார். தனது மெட்ரிகுலேசனை ஜலந்தரின் புனித சூசையப்பர் பள்ளியில் முடித்தார். இவர், திருமணத்திற்கு பிறகு லூதியானாவில் குடியேறினார். ஆனால் சில வருடங்கள் கழித்து கணவரை பிரிந்தார். தான் இறக்கும் வரை தனது மகன் சித்தார்த் மற்றும் ஜேபீயுடன் தனியாக வாழ்ந்தாள்.
அமிர்தா, லூதியானாவின் பஞ்சாப் வேளாண் பல்கலைக்கழகத்தின் மனையியல் கல்லூரியில் பட்டம் பெற்றார். இவர் அதே பல்கலைக்கழகத்தின் அடிப்படை அறிவியல் மற்றும் மனிதநேயக் கல்லூரியில் பத்திரிகை, மொழிகள் மற்றும் கலாச்சாரத்தில் முதுகலைப் பெற்றார். 1997ஆம் ஆண்டில் இந்தியன் எக்ஸ்பிரசின்ன் லூதியானா நகர துணைப் பத்திரிகையின் பங்களிப்பாளராக தனது பத்திரிகைத் தொழிலைத் தொடங்கினார். பின்னர் முதன்மை நிருபராக உயர்ந்தார்.
செய்தியாளர்
[தொகு]இவர், பஞ்சாப் மாநிலத்தின் பல்வேறு நகரங்களிலும் ஊர்களிலும் பலவிதமான செய்திகளைப் சேகரித்ததற்காக பாராட்டுகளைப் பெற்றார். குறிப்பாக விவசாயம் தொடர்பான பிரச்சனைகளின் தீவிரமான செய்தி சேகரிப்பாளாராக இருந்தார். [2]
சமூக ஆர்வலர்
[தொகு]இவர், சிறப்பு குழந்தைகளுக்கான கல்வி, கலை மற்றும் கலாச்சார துறை, சுற்றுச்சூழல் விழிப்புணர்வு போன்றவற்றை ஊக்குவிக்கும் நடவடிக்கைகளில் ஈடுபட்டுள்ள குடிமை சமூகக் குழுக்களில் தீவிரமாக ஈடுபட்டார். இவர் குழந்தைகளுக்கான பட்டறைகளை நடத்தும் "மீடியா ஆர்ட்டிஸ்" என்ற குழுவை ஊடகக் கலைஞர்களான ஜதிந்தர் ப்ரீத் உடன் இணைந்து நிறுவினார். நாடக மற்றும் இசை நிகழ்ச்சிகளை அரங்கேற்றினார். மேலும் முக்கிய நபர்களின் சொற்பொழிவுகளை ஏற்பாடு செய்தார்.
இறப்பும் மரியாதையும்
[தொகு]அமிர்தா 22 அக்டோபர் 2012 அன்று ஒரு விபத்தில் சிக்கி இறந்தார்.[3] இவர் இறந்த பின்னர் புகழ்பெற்ற பஞ்சாபி கவிஞர்கள் சுர்ஜித் பாதர், வரன்ஜித் சவி ஆகியோர் இவர் மீது கவிதைகள் எழுதினர்.[4] பிரபல கலைஞர் சித்தார்த் அமிர்தாவின் உருவப்படத்தை வரைந்தார். இவர் இறந்த பிறகு கீர்த்தனை பாடுவதில் புகழ் பெற்ற பாய் பாதல் சிங் ஒரு பாடலுடன் அஞ்சலி செலுத்தினார். சூபி பாடகர் மதன் கோபால் சிங் இவரது நினைவாக சதா சலாமத் என்ற இசை நிகழ்ச்சியை நடத்தினார்.[5] பிரபல நாடக ஆசிரியர் பல்ராம் என்பவர், இவருக்கும் இவரது கூட்டாளி ஜேபி என்கிற ஜதீப்பர் ப்ரீத் இடையே பரிமாற்றப்பட்ட மின்னஞ்சல்களை அடிப்படையாகக் கொண்ட ஒரு நாடகத்தை எழுதினார்.[6]
இவரது மறைவுக்குப் பிறகு இவருக்குப் பிடித்தமான நடவடிக்கைகளைத் தொடர ஸ்பிரிட் ஆஃப் அமிர்தா அறக்கட்டளை உருவாக்கப்பட்டது. அறக்கட்டளை சண்டிகர், லூதியானா, லெராகாகா, பாட்டியாலா போன்ற நகரங்களில் இவருக்கும் ஜதிந்தர் ப்ரீத் இடையேயான மின்னஞ்சல் உரையாடல்களின் அடிப்படையில் இது ஒரு நாடக நிகழ்ச்சிகளை அரங்கேற்றியது.[7] 3 மே 2013 அன்று இவரை நினைவுகூரும் வகையில் லூதியானாவில் அரசுப் பள்ளி மாணவர்களுக்கான ஓவியப் போட்டி ஏற்பாடு செய்யப்பட்டது.[8] அறக்கட்டளை, லூதியானாவில் குளிர்காலத்தில் தேவைப்படுபவர்களுக்கு சூடான ஆடைகளை சேகரிக்கும் பிரச்சாரத்தை நடத்தி வருகிறது.[9]
மேற்கோள்கள்
[தொகு]- ↑ "Amrita Chaudhary". YouTube.
- ↑ "Amrita Chaudhary". YouTube."Amrita Chaudhary". YouTube.
- ↑ "Indian Express staffer Amrita Chaudhary expires in road accident". City Air News. 2013-10-22 இம் மூலத்தில் இருந்து 2014-08-03 அன்று. பரணிடப்பட்டது.. https://web.archive.org/web/20140803204326/http://cityairnews.com/content/shocking-news-indian-express-staffer-amrita-chaudhary-expires-road-accident.
- ↑ "Man, Woman and Child". Wordpress.
- ↑ "Sada Salamat". Soundcloud.
- ↑ "It's Not An Affair". Calameo.
- ↑ "Play to be staged today". ஹிந்துஸ்தான் டைம்ஸ். 2013-05-04. http://paper.hindustantimes.com/epaper/viewer.aspx.
- ↑ "Children's Mela held in memory of Amrita". 2013-05-03. http://archive.indianexpress.com/news/childrens-mela-held-in-memory-of-amrita/1110681/.
- ↑ "'Spread the warmth' campaign begins". 2015-01-03. http://indianexpress.com/article/cities/ludhiana/spread-the-warmth-campaign-begins/.
வெளி இணைப்புகள்
[தொகு]- "AMRITA". iamamrita.blogspot.in. பார்க்கப்பட்ட நாள் 2016-11-09.
- "Man, Woman and Child | When someone goes away, she takes a little of us with her and remains with us a little". rememberingamrita.wordpress.com. பார்க்கப்பட்ட நாள் 2016-11-09.
- "BBC NEWS | World | The limits of a Green Revolution?". news.bbc.co.uk. பார்க்கப்பட்ட நாள் 2016-11-09.
- "Transcript of "File on 4" – 'Sikh Groups'" (PDF). British Broadcasting Corporation. 2008-02-26. Archived from the original (PDF) on 2016-03-05. பார்க்கப்பட்ட நாள் 2016-11-09.
- Farndon, J. (2009). India Booms: The Breathtaking Development and Influence of Modern India. Ebury Publishing. p. 134. பன்னாட்டுத் தரப்புத்தக எண் 9780753520741. பார்க்கப்பட்ட நாள் 2016-11-09.