அஞ்சுமான் (நடிகை)
அஞ்சுமான் ஷாஹீன் (பஞ்சாபி, உருது: انجمن شاہین ) (ஆங்கிலம்: Anjuman) இவர் ஒரு பாக்கித்தான் திரைப்பட நடிகை ஆவார். 1980 கள் மற்றும் 1990 களின் முற்பகுதியில் பாக்கித்தானின் மிக வெற்றிகரமான பஞ்சாபி திரைப்பட கதாநாயகிகளில் ஒருவராக இருந்தார். அவரது உண்மையான பெயர் அஞ்சுமான் ஷாஹீன் என்பதாகும். அவர் பகவல்பூரில் பிறந்தார்.[1] அஞ்சுமானின் பெற்றோர் அஹமத்பூர் கிழக்குப் பகுதியைச் சேர்ந்தவர்கள், அஞ்சுமான் முல்தானில் வளர்க்கப்பட்டு. பின்னர் லாகூருக்கு குடிபெயர்ந்தனர். அவரது தங்கை கோரியும் ஒரு நடிகையாவார்.
தொழில்
[தொகு]அவரது திரை வாழ்க்கை கிட்டத்தட்ட 20 ஆண்டுகள் நீடித்தது, மேலும் அவர் 300 க்கும் மேற்பட்ட படங்களில் தோன்றினார். அவர் முதலில் சூரத் (1973) என்ற உருது திரைப்படத்தில் வசீம் அப்பாஸ், அஃப்ஷான், தாஜ் நியாசி ஆகியோருடன் இணைந்து நடித்தார், மேலும் அவர் 2000 ஆம் ஆண்டில் பீங்கன் படத்தில் கடைசியாக தோன்றினார். சூரத் திரைப்படம் வெற்றி பெறவில்லை; அவரது முதல் பெரிய வெற்றி வாடி கி ஜான்ஜீர் (1979) என்பதாகும்.[1] ஷெர் கான் மற்றும் சான் வர்யம் (1981) ஆகிய படங்களில் அவர் முக்கிய வேடங்களில் நடித்தார் மற்றும் சலா சாஹிப் (1981) என்ற படத்தில் துணை வேடத்தில் நடித்தார். இவை மூன்றுமே ஒரே நாளில் வெளியிடப்பட்டு வைர விழா கண்ட வெற்றிப் படங்களாகும். இது ஒரு தனித்துவமான பதிவாகும். அவர் தன்னுடன் கதாநாயகனாக நடித்த சுல்தான் ரஹி, அவரது பின்னணி குரலன (பாடகர்) பின்னணி ராணி மேடம் நூர்ஜெஹான் மற்றும் இசைக்கலைஞர் வஜாஹத் அட்ரே ஆகியோருடன் பகிர்ந்து கொண்டார். தொழிலாள வர்க்கத்திற்கு அஞ்சுமான் மிகவும் பிடித்தமானவர் என்பதால் அவர்கள் இவரது படங்களை அடிக்கடி கண்டு ரசித்தனர். அவர்களுடைய ரசனைக்கு ஏற்ப இவரால் நடனமாட முடியும், மேலும் அவருக்கு ஒரு பாரம்பரிய பஞ்சாபி முத்யாரின் உருவம் இருந்தது, இது பாகிஸ்தானின் பஞ்சாபிலுள்ள வயது வந்த ஆண்களுக்கு மிகவும் ஏற்றது.
அவர் தனது சகாப்தத்தில் ஒவ்வொரு கதாநாயகனுடனும் தோன்றினார், ஆனால் சுல்தான் ரஹியுடன் பஞ்சாபி சினிமாவில் பத்தாண்டுகளுக்கும் மேலாக ஆட்சி செய்தார். அலி எஜாஸ், ஜாவேத் ஷேக், குலாம் மொஹியுதீன், இஷார் காசி மற்றும் நதீம் ஆகியோருடன் அவர் நடித்துள்ளார். அவரது ஆரம்பகால படங்கள் உருது மொழியில் இருந்தன, ஆனால் அவரது வாழ்க்கையின் பெரும்பகுதி பஞ்சாபி படங்களில் நடிப்பதை அடிப்படையாகக் கொண்டது. அவரது பாத்திரங்கள் ஒரு பாரம்பரிய அப்பாவி கிராமத்து பெண் முதல் நவீன கவர்ச்சியான நடிப்பு வரையிலும், காதல் முதல் அதிரடி படங்கள் வரையிலும் இருந்தது.
திருமணம்
[தொகு]அஞ்சுமான் வருமான வரி ஆணையர் மொபின் மாலிக் என்பவரைத் திருமணம் செய்தார். அவர்களுக்கு இரண்டு மகன்கள் மற்றும் ஒரு மகளும் பிறந்தனர்.[1] அவர்களுடைய குழந்தைகளான ஜீஷன், அட்னான் மற்றும் இமான் ஆகியோர் திரைப்படங்களை விட்டு வெளியேறி, ஐக்கிய இராச்சியத்தில் தனது குடும்பத்துடன் வசித்து வந்தனர். இருப்பினும், அஞ்சுமானின் கணவர் மொபின் மாலிக், 2013 ல் ஈகைத் திருநாளில் லாகூரில் உள்ள உறவினர்களைப் பார்க்கச்செல்லும் போது கொலை செய்யப்பட்டார்.[2] இந்த காலகட்டத்தில் 1996 ல் தேசிய நெடுஞ்சாலையில் சுல்தான் ரஹி கொலை செய்யப்பட்டார். இதனால் லாலிவுட் அதன் மிகவும் பிரபலமான நட்சத்திரமான அஞ்சுமானை தனது திரைப்பட வாழ்க்கையிலிருந்து ஓய்வு பெற வைத்தது. சையத் நூரின் சூரியன் (1998 திரைப்படம்) என்றத் திரைப்படத்தில் மீண்டும் நடித்து பஞ்சாபி திரையுலகம் புத்துயிர் பெறும் வரை சில ஆண்டுகளாக நடிப்பதை நிறுத்தி வைத்தார்.[3]
64 வயதான இவரது இரண்டாவது திருமணம் 2019 ஜூன் 17 அன்று வசீம் லக்கி அலியுடன் நடந்தது, இதில் நெருங்கிய குடும்பத்தினர் மற்றும் நண்பர்கள் மட்டுமே கலந்து கொண்டனர்.[4]
குறிப்புகள்
[தொகு]- ↑ 1.0 1.1 1.2 "Anjuman". Archived from the original on 17 December 2009. பார்க்கப்பட்ட நாள் 2014-03-22.
- ↑ http://www.dawn.com/news/1050549, Mobin Malik (husband of retired film actress Anjuman) murdered in Lahore in 2013 on Eid day, Dawn newspaper, Published 20 October 2013, Retrieved 10 October 2016
- ↑ http://tribune.com.pk/story/627438/choorian-not-waar-retains-title-as-pakistans-highest-grossing-film/, Article in The Express Tribune newspaper, Published 5 November 2013, Retrieved 10 October 2016
- ↑ "Former Punjabi film actress Anjuman ties the knot".
வெளி இணைப்புகள்
[தொகு]- http://www.pakmdb.com/movies.php?lang=A&q=Anjuman&Submit=Submit, Filmography of actress Anjuman on Pakistan Movie Database website, Retrieved 10 October 2016
- ஐ.எம்.டி.பி இணையத்தளத்தில் Anjuman