வார்ப்புரு பேச்சு:Angiosperm families

மற்ற மொழிகளில் ஆதரிக்கப்படாத பக்க உள்ளடக்கம்.
கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.

வேண்டுகோள்-செயரத்தினா கருவி கொண்டு மொழிமாற்ற வேண்டாம்[தொகு]

User:Jayarathina/iwt.js இந்த கருவி பல நேரங்களில் நமக்கு பேருதவியாக ஆங்கிலச் சொற்களுக்குரிய தமிழ் கட்டுரைகளை இணைப்பதில் பயன்படுகிறது. இருப்பினும், சில நேரங்களில் பிழையான இணைப்புகளும் தருகிறது. எடுத்துக்காட்டாக, பூக்கும் தாவரத் தொகுதிமரபு குழும முறைமை 4 என்ற கட்டுரையின் கிளைப்படத்தில் பயன்படுத்தியபோது, வெவ்வேறு சொற்களுக்கு ஒரே மாதிரியான இணைப்புகளத் தந்தது. தாரகைத் தாவரம் என்ற சொல், ஒன்றிற்க்கும் மேற்பட்ட முறையில் வந்தது. இது குறித்து அவருக்கு வழு பதிய வேண்டும். இதற்கு கூடுதலாக நேரம் செலவாகும் என்பதால் தள்ளிப்போடுகிறேன்.

  • இந்த வார்ப்புருவில் நான் பயன்படுத்திய போது, அல்லி, மணிவாழை என்பன தாவரக்குடும்பங்கள் அல்ல. எனினும், இணைக்கிறது.
  • வேண்டுகோள் - எனவே, அக்கருவியைப் பயன்படுத்த வேண்டாம்.

உழவன் (உரை) 02:40, 1 சனவரி 2024 (UTC)[பதிலளி]

@பயனர்:சுப. இராஜசேகர் இவ்வார்ப்புருவில் நீங்கள் செய்த மாற்றங்களை, மேற்கூறிய காரணங்களால் மாற்றியிருக்கிறேன். ஒவ்வொன்றாக சரிபார்த்து கட்டுரைகளை உருவாக்க வேண்டும். ஏனெனில், ஆங்கில விக்கிப்பீடிய மூலங்களிலும் தவறுகள்/பழைய செய்திகள் உள்ளன. அவற்றை களைந்து, இங்கு தமிழ் கட்டுரைகளை உருவாக்குவேன். உழவன் (உரை) 06:05, 3 சனவரி 2024 (UTC)[பதிலளி]
@Info-farmer பேச்சுப் பக்கத்தைக் கண்ட பிறகு, அதை அப்போதே மீளமைத்துவிட்டேன். சுப. இராஜசேகர் (பேச்சு) 07:23, 6 சனவரி 2024 (UTC)[பதிலளி]
பார்த்தேன். நன்றி. நீங்கள் தொடர்ந்து பங்களிக்கக் கோருகிறேன். உழவன் (உரை) 07:24, 6 சனவரி 2024 (UTC)[பதிலளி]