4-புளோரோபுரோமோபென்சீன்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
4-புளோரோபுரோமோபென்சீன்
4-Bromofluorobenzene
Skeletal Structure of 4-Bromofluorobenzene
Skeletal Structure of 4-Bromofluorobenzene
Space Filling Model of 4-Bromofluorobenzene
Space Filling Model of 4-Bromofluorobenzene
பெயர்கள்
விருப்பத்தெரிவு ஐயூபிஏசி பெயர்
1-புரோமோ-4-புளோரோபென்சீன்
வேறு பெயர்கள்
பாரா-புரோமோபுளோரோபென்சீன்
பாரா-புளோரோபீனைல் புரோமைடு
இனங்காட்டிகள்
460-00-4 Y
Abbreviations PBFB
ChEBI CHEBI:141551
ChEMBL ChEMBL1876826
ChemSpider 13875180
EC number 207-300-2
InChI
  • InChI=1S/C6H4BrF/c7-5-1-3-6(8)4-2-5/h1-4H Y
    Key: AITNMTXHTIIIBB-UHFFFAOYSA-N Y
  • InChI=1S/C6H4BrF/c7-5-1-3-6(8)4-2-5/h1-4H
    Key: AITNMTXHTIIIBB-UHFFFAOYSA-N
யேமல் -3D படிமங்கள் Image
பப்கெம் 9993
SMILES
  • c1cc(ccc1F)Br
UNII A7ZH69I3KH
UN number 1993
பண்புகள்
C6H4BrF
வாய்ப்பாட்டு எடை 175.00 g·mol−1
தோற்றம் நிறமற்ற நீர்மம்
உருகுநிலை −16 °C (3 °F; 257 K)
கொதிநிலை 150 °C (302 °F; 423 K)
கரையாது
கட்டமைப்பு
மூலக்கூறு வடிவம்
தீங்குகள்
GHS pictograms The flame pictogram in the Globally Harmonized System of Classification and Labelling of Chemicals (GHS)The exclamation-mark pictogram in the Globally Harmonized System of Classification and Labelling of Chemicals (GHS)
GHS signal word எச்சரிக்கை
H226, H302, H312, H315, H319, H332, H335, H336
P210, P233, P240, P241, P242, P243, P261, P264, P270, P271, P280, P301+312, P302+352, P303+361+353
மாறுதலாக ஏதும் சொல்லவில்லை என்றால் கொடுக்கப்பட்ட தரவுகள் யாவும்
பொருள்கள் அவைகளின் இயல்பான வெப்ப அழுத்த நிலையில் (25°C, 100kPa) இருக்கும்.
Infobox references

4-புளோரோபுரோமோபென்சீன் (4-Fluorobromobenzene) C6H4BrF என்ற மூலக்கூற்று வாய்ப்பாட்டால் விவரிக்கப்படும் ஒரு கரிமச் சேர்மமாகும். ஆலசனேற்றம் பெற்ற அரோமாட்டிக் சேர்மமான இது ஒரு பென்சீன் வழிப்பெறுதியாகும். பென்சீனில் ஒரு புரோமின் அணு புளோரின் அணுவின் பாரா நிலையில் பிணைந்துள்ளது. ஒரு வேளாண் வேதிப் பொருள் இடைநிலையாக சில மருந்துவகைப் பொருள்கள் தயாரிக்கவும், கரிமத் தொகுப்பு வினைகளில் ஒரு முன்னோடிச் சேர்மமாகவும் இது பயன்படுகிறது. நிறமற்ற நீர்மமான இது குறைவான நச்சுத்தன்மை கொண்டதாக உள்ளது.

தயாரிப்பு[தொகு]

இரும்பு(III) புரோமைடு அல்லது அலுமினியம் முப்புரோமைடு போன்ற இலூயிசு அமில வினையூக்கி முன்னிலையில் புளோரோபென்சீனை புரோமினேற்றம் செய்து 4-புளோரோபுரோமோபென்சீன் தயாரிக்கப்படுகிறது. [1]

1976 ஆம் ஆண்டு இயற்றப்பட்ட நச்சுப் பொருட்கள் கட்டுப்பாட்டுச் சட்டத்தின் படி 4-புளோரோபுரோமோபென்சீன் அதிக உற்பத்தி அளவு இரசாயனப் பொருளாக வகைப்படுத்தப்பட்டது. அதாவது, ஆண்டுக்கு 1 மில்லியன் பவுண்டுகள் (சுமார் 500 டன்கள்) இந்த இரசாயனப் பொருள் அமெரிக்காவில் உற்பத்தி செய்யப்படுகிறது அல்லது இறக்குமதி செய்யப்படுகிறது. 2002 ஆம் ஆண்டு நிலவரப்படி இந்த சேர்மத்தை உற்பத்தி செய்யும் அல்லது இறக்குமதி செய்யும் நிறுவனங்கள் 10 மில்லியன் (4,536,000 கிலோகிராம்கள்) 4-புளோரோபுரோமோபென்சீன் பயன்படுத்தப்பட்டதாக அறிவித்தன. இது 1986 ஆம் ஆண்டு பயன்படுத்தப்பட்ட 500,000 பவுண்டுகள் (226,800 கிலோகிராம்) என்ற அளவைக் காட்டிலும் அதிகமாகும் என்று நச்சுப் பொருள்கள் கட்டுப்பாட்டுச் சட்டத்தின் சரக்கு புதுப்பித்தல் விதியில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

வினை[தொகு]

தீங்குயிர்க்கொல்லி பிளசிலசோல் போன்ற 4-புளோரோபீனைல் சேர்மங்களை தயாரிக்கும் போது 4-புரோமோபுளோரோபென்சீன் கிரிக்கனார்டு வினைப்பொருளை உருவாக்குகிறது. [2]

பாதுகாப்பு[தொகு]

இந்த சேர்மம் ஓர் எரியக்கூடிய திரவமாகும். இது 53 டிகிரி செல்சியசு வெப்பநிலையை தீப்பற்றும் வெப்பநிலையைக் கொண்டுள்ளது. [3]

மேற்கோள்கள்[தொகு]

  1. Rosenthal, Joel; Schuster, David I. (2003). "The Anomalous Reactivity of Fluorobenzene in Electrophilic Aromatic Substitution and Related Phenomena". J. Chem. Educ. 80 (6): 679. doi:10.1021/ed080p679. Bibcode: 2003JChEd..80..679R. https://archive.org/details/sim_journal-of-chemical-education_2003-06_80_6/page/679. 
  2. "4-Bromofluorobenzene". Shandong A&Fine Agrochemicals CO.,Ltd. Archived from the original on 13 திசம்பர் 2014. பார்க்கப்பட்ட நாள் 2 January 2015.
  3. "Material Safety Data Sheet". Acros Organics. பார்க்கப்பட்ட நாள் 2 January 2015.
"https://ta.wikipedia.org/w/index.php?title=4-புளோரோபுரோமோபென்சீன்&oldid=3921443" இலிருந்து மீள்விக்கப்பட்டது