உள்ளடக்கத்துக்குச் செல்

2024 வட இந்தியப் பெருங்கடல் சூறாவளிப் பருவம்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.

2024 வட இந்தியப் பெருங்கடல் சூறாவளிப் பருவம் (2024 North Indian Ocean cyclone season) என்பது வட இந்தியப் பெருங்கடலில் தோன்றும் வெப்பமண்டல சூறாவளி]] உருவாக்கத்தின் வருடாந்திர சுழற்சியில் வரவிருக்கும் ஒரு நிகழ்வாகும். இப்பருவத்திற்கு அதிகாரப்பூர்வமான வரம்புகள் எதுவும் இல்லை, ஆனால் சூறாவளிகள் ஏப்ரல் மற்றும் டிசம்பர் மாதங்களுக்கு இடையில் உருவாகின்றன, இவை மே முதல் நவம்பர் வரை உச்சம் பெற்று இருக்கும். இந்த மாதங்கள் வட இந்தியப் பெருங்கடலில் ஒவ்வோர் ஆண்டும் பெரும்பாலான வெப்பமண்டல சூறாவளிகள் உருவாகும் காலத்தை வழக்கமாக வரையறுக்கின்றன.

வட அரைக்கோளத்தில் உள்ள இந்தியப் பெருங்கடல், ஆப்பிரிக்காவின் கொம்பு, கிழக்கு மற்றும் மலாய் தீபகற்பத்தின் மேற்கு பகுதிகள் மட்டுமே இச்சூறாவளியின் வீச்சின் எல்லைகளாகும். வட இந்தியப் பெருங்கடலில் இரண்டு முக்கிய கடல்கள் உள்ளன - இந்தியத் துணைக் கண்டத்தின் மேற்கே அரபிக் கடல், இது இந்திய வானிலை ஆய்வுத் துறையால் சுருக்கமாக ஏஆர்பி என அழைக்கப்படுகிறது; மற்றும் கிழக்கே உள்ள வங்காள விரிகுடா, சுருக்கமாக பிஓபி என அழைக்கப்படுகிறது.

இந்தப் படுகையில் உள்ள அதிகாரப்பூர்வ பிராந்திய சிறப்பு வானிலை மையம் இந்திய வானிலை ஆய்வுத் துறை ஆகும், அதே நேரத்தில் கூட்டு டைபூன் எச்சரிக்கை மையம் அதிகாரப்பூர்வமற்ற ஆலோசனைகளை வெளியிடுகிறது. சராசரியாக, ஒவ்வொரு பருவத்திலும் இந்தப் படுகையில் மூன்று முதல் நான்கு சூறாவளி புயல்கள் உருவாகின்றன.[1]

புயல் பெயர்கள்

[தொகு]

இந்தப் படுகையில், ஒரு வெப்பமண்டல சூறாவளி மணிக்கு 65 கிலோமீட்டர் வேகக் காற்றுடன் (மணிக்கு 40 மைல்) கூடிய சூறாவளி புயல் தீவிரத்தை அடைந்ததாக மதிப்பிடப்படும் போது அதற்கு ஒரு பெயர் ஒதுக்கப்படுகிறது. 2020 ஆம் ஆண்டின் நடுப்பகுதியில் புது தில்லியில் உள்ள பிராந்திய சிறப்பு வானிலை மையத்தின் புதிய பட்டியல் மூலம் பெயர்கள் தேர்ந்தெடுக்கப்பட்டன [2] இந்தப் படுகையில் வெப்பமண்டல சூறாவளி பெயர்களுக்கு ஓய்வு அளிக்கப்படுவதில்லை ஏனெனில் பெயர்களின் பட்டியல் ஒரு புதிய பெயர் பட்டியல் வரையப்படுவதற்கு முன்பு அப்பெயரை ஒரு முறை மட்டுமே பயன்படுத்த திட்டமிடப்பட்டுள்ளது. பெயரிடப்பட்ட வெப்பமண்டல சூறாவளி மேற்கு பசிபிக் பகுதியில் இருந்து படுகையில் நகர்ந்தால், அது அதன் அசல் பெயரைத் தக்க வைத்துக் கொள்ளும். வட இந்தியப் பெருங்கடல் புயல் பெயர்கள் பட்டியலில் இருந்து கிடைக்கக்கூடிய அடுத்த எட்டு பெயர்கள் கீழே உள்ளன. [3]

  • இரெமல்
  • அசுனா
  • தானா
  • பெங்கல்
  • சக்தி
  • மாந்தா
  • சென்யார்
  • தித்வா

பருவ விளைவுகள்

[தொகு]

2024 ஆம் ஆண்டு வட இந்தியப் பெருங்கடல் சூறாவளி பருவத்தின் போது உருவாகும் அனைத்து புயல்களூம் ஓர் அட்டவணையாக உருவாக்கப்பட்டுள்ளது. பருவத்தின் அனைத்து புயல்கள் அவற்றின் பெயர்கள், கால அளவு, இந்திய வானிலை ஆய்வுத்துறை புயல் அளவு, சேதம் மற்றும் இறப்பு மொத்தத்தின் படி உச்ச தீவிரம் ஆகியவை இந்த அட்டவணையில் இடம்பெற்றுள்ளன. சேதம் மற்றும் இறப்பு மொத்தத்தில், அந்த புயல் ஒரு முன்னோடி அலையாக அல்லது வெப்பமண்டல தாழ்வாக இருந்தபோது ஏற்பட்ட சேதங்கள் மற்றும் இறப்புகள் ஆகியவற்றையும் உள்ளடக்கும். சேத விவரங்கள் அனைத்தும் 2024 அமெரிக்க டாலர் அளவில் குறிப்பிடப்படும்.

மேற்கோள்கள்

[தொகு]
  1. "Annual Frequency of Cyclonic Disturbances (Maximum Wind Speed of 17 Knots or More), Cyclones (34 Knots or More) and Severe Cyclones (48 Knots or More) Over the Bay of Bengal (BOB), Arabian Sea (AS) and Land Surface of India" (PDF). India Meteorological Department. பார்க்கப்பட்ட நாள் 30 October 2015.
  2. "Tropical Cyclone Naming" (in ஆங்கிலம்). 2016-05-30. Archived from the original on December 4, 2023. பார்க்கப்பட்ட நாள் 2022-12-08.
  3. "Naming of Tropical Cyclones over the North Indian Ocean" (PDF). Archived from the original (PDF) on September 3, 2021. பார்க்கப்பட்ட நாள் September 25, 2021.

புற இணைப்புகள்

[தொகு]