2023 ஐரோப்பிய வெப்ப அலைகள்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.

2023 ஐரோப்பிய வெப்ப அலைகள் (2023 European heat waves) 2023 ஆம் ஆண்டில் ஐரோப்பாவை வெகுவாகப் பாதித்தது. 2023 ஆம் ஆண்டு சனவரி மாதம் முதல் தேதியன்று குறைந்தது எட்டு ஐரோப்பிய நாடுகள் தங்கள் வெப்பமான சனவரி நாளை பதிவு செய்தன: நடு ஐரோப்பாவில் உள்ள லீக்கின்ஸ்டைன், செக் குடியரசு, போலந்து, நெதர்லாந்து, பெலாரசு, லிதுவேனியா, டென்மார்க் மற்றும் லாத்வியா என்பவை பாதிப்புக்கு உள்ளான நாடுகளாகும்.[1] இதற்கு காலநிலை மாற்றம் காரணமாக கூறப்பட்டது.[2]

பிரித்தானிய வானிலை அலுவலகத்தின் கூற்றுப்படி, 2022 ஆம் ஆண்டில் அனுபவித்ததை விட 2023 ஆம் ஆண்டில் அதிக தீவிர வெப்ப அலைகள் இருக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.[3] சூன் மாதம் ஐரோப்பிய சுற்றுச்சூழல் நிறுவனம் வெப்பப் பள்ளிகள் மற்றும் மருத்துவமனைகளை எச்சரித்தது.[4]

நாடு வாரியாக[தொகு]

பெல்சியம்[தொகு]

12 சூன் 2023 அன்று பெல்சிய நாட்டு, அதிகாரிகள் வெப்ப அலை சுகாதார எச்சரிக்கையை வெளியிட்டனர்.[5]

பிரான்சு[தொகு]

2023 ஆம் ஆண்டு சூன் மாதம் முதல் தேதி வரை, பிரான்சின் 26 துறைகள் சிவப்பு எச்சரிக்கையின் கீழ் இருந்தன, 50 துறைகள் ஆரஞ்சு விழிப்பூட்டலின் கீழ் இருந்தன, 24 துறைகள் மஞ்சள் விழிப்புணர்வின் கீழ் இருந்தன.[6]

செருமனி[தொகு]

செருமனியில் வழக்கத்தை விட வெப்பம் அதிகமாக காணப்பட்டது.[7] செருமன் அரசாங்கம் வெப்ப அலை இறப்புகளைத் தடுக்க ஒரு திட்டத்தை உறுதியளித்துள்ளது.[8]

அயர்லாந்து[தொகு]

2023 ஆம் ஆண்டு சூலை மாதத்தில் அயர்லாந்தில் " சிறிய வெப்ப அலை" காணப்பட்டது.[9]

எசுப்பானியா[தொகு]

எசுப்பானிய வரலாற்றில் அதிக வெப்பம் ஏப்ரல் மாதத்தில் நிலவியது.[10] இதனால் அங்கு விவசாயம் பெருமளவில் பாதிக்கப்பட்டது.[11]

ஐக்கிய இராச்சியம்[தொகு]

2023 ஆம் ஆண்டு சூன் மாதம் 7 அன்று, ஐக்கிய இராச்சியத்தின் சுகாதார பாதுகாப்பு முகமை மற்றும் வானிலை அலுவலகம் ஆகியன இந்த ஆண்டின் முதல் வெப்ப-உடல்நல எச்சரிக்கையை வெளியிட்டன.[12] புதிய உயர் வெப்பநிலை எச்சரிக்கை அமைப்பு அறிமுகப்படுத்தப்பட்டதைத் தொடர்ந்து இந்த அறிவிப்பு விடப்பட்டது.[13] இலண்டன், கிழக்கு மற்றும் மேற்கு மிட்லாண்ட்சு மற்றும் கிழக்கு, தென்கிழக்கு மற்றும் தென்மேற்கு பகுதிகளுக்கு மஞ்சள் வெப்ப எச்சரிக்கை விடுக்கப்பட்டது.[14] சூன் மாதம் 10 ஆம் தேதியன்று இலண்டனில் வெப்பநிலை 30 பாகை செல்சியசை எட்டியது. இதனால் இந்த ஆண்டு வெப்பமான ஆண்டு என்ற பெயரைப் பெற்றது.[15][16] வடக்கு அயர்லாந்தும் மஞ்சள் எச்சரிக்கையில் இருந்தது.[17]

வரவிருக்கும் வெப்ப அலைகளின் அபாயங்கள் மதுபானத் தொழிலை அச்சுறுத்தியுள்ளன.[18]

மேற்கோள்கள்[தொகு]

  1. Edwards, Christian (2023-01-03). "'Uncharted territory': January heat records smashed across Europe". CNN (in ஆங்கிலம்). பார்க்கப்பட்ட நாள் 2023-06-15.
  2. "Europe Sees 'Unprecedented' Winter Heat Wave As 2023 Begins". HuffPost UK (in ஆங்கிலம்). 2023-01-03. பார்க்கப்பட்ட நாள் 2023-06-15.
  3. "Extreme weather is changing the face of tourism in Europe". EuroNews (in ஆங்கிலம்). 2023-03-07. பார்க்கப்பட்ட நாள் 2023-06-15.
  4. "Europe's city schools, hospitals at risk from extreme heat, EU agency says". Yahoo News (in பிரிட்டிஷ் ஆங்கிலம்). 2023-06-13. பார்க்கப்பட்ட நாள் 2023-06-15.
  5. "Belgium issues heatwave warning - Timeturk Haber". www.timeturk.com (in ஆங்கிலம்). பார்க்கப்பட்ட நாள் 2023-06-15.
  6. "Heatwave in Ile-de-France this summer 2023? Which departments are expected to be the hottest?". www.sortiraparis.com (in ஆங்கிலம்). பார்க்கப்பட்ட நாள் 2023-06-15.
  7. "Hot Temperatures in Germany Poised to Last Through Next Week" (in en). https://www.bloomberg.com/news/articles/2023-06-15/hot-temperatures-in-germany-poised-to-last-through-next-week. 
  8. "Germany draws up plan to prevent heatwave deaths – DW – 06/13/2023". dw.com (in ஆங்கிலம்). பார்க்கப்பட்ட நாள் 2023-06-15.
  9. McSorley, Anita (2023-06-13). "Exact date Ireland's heatwave ends as new warning issued amid sweltering heat". Irish Mirror (in ஆங்கிலம்). பார்க்கப்பட்ட நாள் 2023-06-15.
  10. "Spain braced for record April temperature of 39C as extreme heat causes misery" (in en-GB). https://www.theguardian.com/world/2023/apr/27/spain-braced-for-record-april-temperature-of-39c-as-heatwave-causes-misery. 
  11. "April Mediterranean heatwave ‘almost impossible’ without climate crisis" (in en-GB). https://www.theguardian.com/environment/2023/may/05/april-mediterranean-heatwave-almost-impossible-without-climate-crisis. 
  12. "First heat-health alert of year issued as UK set for hottest day of 2023 so far". Sky News (in ஆங்கிலம்). பார்க்கப்பட்ட நாள் 2023-06-15.
  13. "England 'not ready' to respond to extreme heatwaves this summer - and resources are at 'breaking point'". Sky News (in ஆங்கிலம்). பார்க்கப்பட்ட நாள் 2023-06-15.
  14. "'Extreme' hot weather health alert escalated as UK set to be hotter than Spain". The Independent (in ஆங்கிலம்). 2023-06-09. பார்க்கப்பட்ட நாள் 2023-06-15.
  15. "Hottest day so far this year as UK temperatures hit 30C" (in en-GB). 2023-06-10. https://www.bbc.com/news/uk-65866894. 
  16. McKie, Robin (2023-06-10). "Risk of hot summer in UK is more than twice normal figure, forecasters warn" (in en-GB). https://www.theguardian.com/environment/2023/jun/10/risk-record-heatwave-uk-twice-normal-forecasters-40c-meteorologists. 
  17. "NI weather: Heatwave to hit Northern Ireland this week" (in en-GB). 2023-06-12. https://www.bbc.com/news/uk-northern-ireland-65873712. 
  18. Drury, Paul (2023-06-15). "Heatwave risks calling time on whisky makers" (in en). பன்னாட்டுத் தர தொடர் எண்:0140-0460. https://www.thetimes.co.uk/article/heatwave-risks-calling-time-on-whisky-makers-x2kqsqgml. 
"https://ta.wikipedia.org/w/index.php?title=2023_ஐரோப்பிய_வெப்ப_அலைகள்&oldid=3750037" இலிருந்து மீள்விக்கப்பட்டது