2022 சிறீநகர் குண்டுவெடிப்பு
2022 சிறீநகர் குண்டுவெடிப்பு 2022 Srinagar bombing | |
---|---|
காசுமீர் பிரச்சினை | |
இடம் | சிறிநகர், காஷ்மீர் |
நாள் | மார்ச்சு 6, 2022 |
இறப்பு(கள்) | 2 |
காயமடைந்தோர் | 24 |
2022 சிறீநகர் குண்டுவெடிப்பு ( 2022 Srinagar bombing) இந்திய நிர்வாகத்தின் கீழ் உள்ள சம்மு காசுமீரின் சிறீநகரில் உள்ள சந்தையில் மார்ச்சு மாதம் 6 ஆம் தேதியன்று ஒரு தீவிரவாதியால் கையெறி குண்டுகள் வீசப்பட்டன. இருபத்தி நான்கு பேர் காயமடைந்தனர் மற்றும் இருவர் கொல்லப்பட்டனர்.
அமிரா கடல் பாலத்திற்கு அருகில் உள்ள அரி சிங் உயர் தெருவில் உள்ள சந்தையில் மாலை 4:20 மணியளவில் இத்தாக்குதல் நடந்தது [1] அந்நேரத்தில் தெரு மிகவும் பரபரப்பாக இருந்தது. குண்டுவெடிப்பு நடந்தபோது ஏராளமான மக்கள் சந்தையில் இருந்தனர். [2] பயங்கரவாதி பாதுகாப்புப் படையினர் மீது கையெறி குண்டுகளை வீசினார். குறைந்தது ஒரு காவலர் உட்பட மக்கள் பலர் காயமடைந்தனர். [3]
அந்த நாளின் பிற்பகுதியில், நௌகட்டாவைச் சேர்ந்த 60 வயதான முகம்மது அசுலம் மக்தூமி காயங்களுக்கு ஆளானார். 19 வயதான ரஃபியா ஜான் மறுநாள் இறந்தார்
இந்த குண்டுவெடிப்பு இந்தியாவில் மனோச் சின்கா, பரூக் மற்றும் உமர் அப்துல்லா, மெகபூபா முஃப்தி, சம்மு காசுமீர் பிரதேச காங்கிரசு கமிட்டி, பாரதிய சனதா கட்சி மற்றும் பலரிடமிருந்து பரவலான கண்டனத்தைப் பெற்றது. [4]
மேற்கோள்கள்
[தொகு]- ↑ "11 injured as terrorists hurl grenade at security forces in J&K's Srinagar". The Economic Times. https://economictimes.indiatimes.com/news/india/11-injured-as-terrorists-hurl-grenade-at-security-forces-in-jks-srinagar/articleshow/90034248.cms.
- ↑ "1 Dead, Over 20 Hurt in Grenade Attack in Kashmir Market". Associated Press via US News. https://www.usnews.com/news/world/articles/2022-03-06/1-dead-over-20-hurt-in-grenade-attack-in-kashmir-market.
- ↑ "Civilian killed, 23 injured in Srinagar grenade explosion". The Hindu. https://www.thehindu.com/news/national/other-states/civilian-killed-23-injured-in-srinagar-grenade-explosion/article65198758.ece.
- ↑ "One killed, 34 injured as terrorists hurl grenade at security forces in Jammu and Kashmir's Srinagar". The New Indian Express. Archived from the original on 2022-03-11. பார்க்கப்பட்ட நாள் 2022-03-18.