2021 ஜம்மு காஷ்மீர் மறுசீரமைப்பு (திருத்த) வரைவுச்சட்டம்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
2021 ஜம்மு காஷ்மீர் மறுசீரமைப்பு (திருத்த) வரைவுச்சட்டம்
ஜம்மு மற்றும் காஷ்மீர் இந்திய ஆட்சிப் பணி அதிகாரிகளின் கேடரை அருணாச்சலப் பிரதேசம், கோவா, மிசோரம் மற்றும் ஒன்றியப் பகுதிகளின் கேடர்களுடன் இணைப்பதற்கான அவசரச் சட்டம்.
இயற்றியதுமாநிலங்களவை
இயற்றியதுமக்களவை
சம்மதிக்கப்பட்ட தேதிபெப்ரவரி 17, 2021 (2021-02-17)
கையொப்பமிடப்பட்ட தேதி23 பிப்ரவரி 2021

2021 ஜம்மு காஷ்மீர் மறுசீரமைப்பு (திருத்தச்) சட்டம் (Jammu and Kashmir Reorganisation (Amendment) Bill, 2021), ஜம்மு காஷ்மீர் ஒன்றியப் பகுதியின் இந்திய ஆட்சிப் பணி அதிகாரிகள் தொகுப்பை (Cadre), அருணாச்சல பிரதேசம், கோவா, மிசோரம் மற்றும் ஒன்றியப் பகுதிகளின் இந்திய ஆட்சிப் பணி அதிகாரிகளின் தொகுப்புடன் இணைப்பதற்கான திருத்தச் சட்டத்தை 13 பிப்ரவரி 2021 சனிக்கிழமையன்று மக்களவையில் உள்துறை இணையமைச்சர் ஜி. கிஷன் ரெட்டியால் அறிமுகப்படுத்தப்பட்டது.[1] விவாதத்திற்குப் பின் இந்த திருத்தச் சட்டம் மக்களவையில் பெரும்பான்மையான உறுப்பினர்களின் ஆதரவு நிறைவேற்றப்பட்டது. [2]

முன்னதாக இந்த வரைவுச்சட்டம் 8 பிபரவரி 2021 அன்று மாநிலங்களவையில் அறிமுகம் செய்யப்பட்டது. விவாத்திற்குப்பின் இத்திருத்த வரைவுச் சட்டம் பெரும்பான்மை உறுப்பினர்களின் ஆதரவுடன் நிறைவேற்றப்பட்டது.[3]

எதிர்ப்பு[தொகு]

இத்திருத்தச் சட்டத்தின் மூலம் ஜம்மு-காஷ்மீரை வளர்ச்சிக்கான பாதையில் கொண்டு செல்ல இந்திய அரசு செயல்பட்டு வருவதாக உள்துறை இணையமைச்சர் மக்களவையில் கூறினார். 2019 ஜம்மு காஷ்மீர் மறுசீரமைப்புச் சட்டத்தின் மூலம் இந்திய அரசியலமைப்புச் சட்டப் பிரிவு 370ஐ நீக்கிய பின் நடுவண் அரசால் கொண்டு வரப்படும் இந்த வரைவுச்சட்டத் திருத்தத்திற்கு இந்திய தேசிய காங்கிரசு கட்சியைச் சேர்ந்த எதிர்கட்சி தலைவர் ஆதிர் ரஞ்சன் சௌத்திரி கடுமையாக எதிரிப்பு தெரிவித்தார். மேலும் ஜம்மு-காஷ்மீர் ஒரு முக்கியமான மாநிலம் என்றும், இந்திய ஆட்சிப் பணி அதிகாரிகளை உள்ளூர் பகுதியினராகவும், உள்ளூர் பிரதேச அறிவுள்ள அதிகாரிகள் அங்கு நியமிக்கப்பட வேண்டும் என்றும் கூறினார்.[4]

மேற்கோள்கள்[தொகு]

  1. Govt introduces Jammu and Kashmir Reorganisation (Amendment) Bill, 2021 in LS
  2. ஜம்மு காஷ்மீர் மறுசீரமைப்பு திருத்தச் சட்டம் நாடாளுமன்றத்தில் நிறைவேற்றம்
  3. Parliament proceedings | RS passes Jammu and Kashmir Reorganisation (Amendment) Bill
  4. Govt introduces Jammu and Kashmir Reorganisation (Amendment) Bill, 2021 in LS