உள்ளடக்கத்துக்குச் செல்

2020 நோரில்சுக் எண்ணெய்க் கசிவு

ஆள்கூறுகள்: 69°19′40″N 87°57′52″E / 69.32778°N 87.96444°E / 69.32778; 87.96444
கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
நோரில்சுக் டீசல் எண்ணெய்க் கசிவு
Norilsk diesel oil spill
சென்டினெல்-2 செயற்கைக்கோள் மூலம் கசிவின் வீரியம்
Map
அமைவிடம்நோரில்சுக், கிராசுனயார்சுக், உருசியா
ஆள்கூறுகள்69°19′40″N 87°57′52″E / 69.32778°N 87.96444°E / 69.32778; 87.96444
நாள்29 மே 2020
விபத்து
காரணம்நிலத்தடி உறைபனி உருகலில் அடித்தளம் சரிவு
இயக்குநர்NTEK
கசிவுப் பண்புகள்
பருமன்21,000 கனமீட்டர் (17,500 தொன்)[1]
பரப்பளவு350 சதுரகிமீ

நோரில்சுக் டீசல் எண்ணெய்க் கசிவு (Norilsk diesel oil spill) 2020 மே 29 முதல் உருசியாவின் சைபீரியாவில் நோரில்சுக் என்ற நகரில் இடம்பெற்ற தொழிற்துறைப் பேரழிவு ஆகும். எண்ணெய்த் தேக்கத் தொட்டி ஒன்று செயலிழந்ததால், அருகிலிருந்த ஆறுகளில் 21,000 கனமீட்டர் அளவில் டீசல் எண்ணெய் பரவ ஆரம்பித்தது.[1][2] உருசிய அரசுத்தலைவர் விளாதிமிர் பூட்டின் அவசரகால நிலையை அறிவித்தார்.[3] இவ்விபத்து உருசியாவின் அண்மைக்கால வரலாற்றில் இரண்டாவது மிகப்பெரிய எண்ணெய்க் கசிவு என அறிவிக்கப்பட்டது.[4]

காரணம்

[தொகு]
2020 சூன் 3 இல் அரசுத்தலைவர் பூட்டின் எண்ணெய்க் கசிவு குறித்து மாநாடு நடத்தினார்.[5]

நோரில்ஸ்க்-டைமிர் (என்.டி.இ.கே) நிறுவனத்தின் நிலக்கரியினால் எரிக்கப்படும் வெப்ப, மின் உற்பத்தி நிலையத்திற்கான காப்பு எரிபொருளாக டீசல் எண்ணெய் பயன்படுத்தப்படுகிறது.[6] எரிபொருள் தேக்கத் தொட்டி இல. 5 இன் அடிப்பகுதியில் உள்ள துளைகள் செயலிழந்ததை அடுத்து, இது அரிப்பை உருவாக்கியது. 2014 ஆம் ஆண்டில், உருசிய நடுவண் சுற்றுச்சூழல் நிறுவனமான ரோஸ்டெக்னாத்சோர் தொட்டிகளின் சுவர்கள் மற்றும் கூரையின் வெளிப்புறம் துருப்பிடிக்காதவாறு சுத்தம் செய்து, அரிப்பு எதிர்பொருள் பூச்சுகளை மீட்டெடுக்கவும், 2016 அக்டோபருக்குள், சிதைவுறுத்தா சோதனைகளை மேற்கொள்ளவும் உத்தரவிட்டது. ஆனாலும் இவை எதுவும் செய்யப்படவில்லை.[7][8]

தொட்டி இல. 5 அது கட்டப்பட்ட நிலத்தடி உறைபனி உருகத் தொடங்கியபோது செயலிழக்க ஆரம்பித்தது. நிறுவனம் கூறியது: "30 ஆண்டுகளுக்கும் மேலாக சிக்கல்கள் இல்லாமல் பணியாற்றிய இந்த உறைபனி அடித்தளத்தின் தாங்கிகள் திடீரெனக் கீழே இறங்கியதால், டீசல் எரிபொருள் சேமிப்புத் தொட்டி சேதமடைந்தது, இதன் விளைவாக எரிபொருள் கசிவு ஏற்பட்டது." என என்.டி.இ.கே நிறுவனம் அறிவித்தது.[9]

இந்த எண்ணெய்க் கசிவால் 180,000 சதுர மீட்டர் (44 ஏக்கர்) பகுதியில் உடனடிப் பாதிப்பு ஏற்பட்டது. பின்னர் அருகிலுள்ள தால்திகன் ஆறு, பின்னர் பியாசினோ ஏரி ஆகியவற்றுக்குக் கசிவு பரவியதால்,[10] 350 சதுர கிலோமீட்டர் (135 சதுர மைல்) பரப்பளவை மாசுபடுத்தியது. சாலைகள் இல்லாததாலும், ஆறுகள் மிகவும் ஆழமற்றவை என்பதாலும், தூய்மைப்படுத்தும் முயற்சிகள் கடினமாக இருக்கும் என்று எதிர்பார்க்கப்பட்டது. அவசரகால நிவாரண நடவடிக்கைகளின் உடனடி செலவு 10 பில்லியன் ரூபிள் (146 மில்லியன் அமெரிக்க டாலர்) என்று மதிப்பிடப்பட்டுள்ளது, மொத்தம் 100 பில்லியன் ரூபிள் (1.5 பில்லியன் அமெரிக்க டாலர்) சுத்தம் செய்ய செலவாகும், இதற்கு ஐந்து முதல் 10 ஆண்டுகள் வரை ஆகும் எனவும் மதிப்பிடப்பட்டுள்ளது.[11][12]

மேற்கோள்கள்

[தொகு]
  1. 1.0 1.1 "Diesel fuel spill in Norilsk in Russia’s Arctic contained". டாஸ் (Moscow, Russia). 5 சூன் 2020. https://tass.com/emergencies/1164423. பார்த்த நாள்: 6 June 2020. 
  2. Max Seddon (4 June 2020), "Siberia fuel spill threatens Moscow's Arctic ambitions", பைனான்சியல் டைம்ஸ்
  3. "Putin orders state of emergency after huge fuel spill inside Arctic Circle". The Guardian. 3 June 2020. பார்க்கப்பட்ட நாள் 4 June 2020.
  4. Ivan Nechepurenko (5 June 2020), "Russia Declares Emergency After Arctic Oil Spill", த நியூயார்க் டைம்ஸ்
  5. Meeting on cleaning up diesel fuel leak in Krasnoyarsk Territory, Kremlin, 3 June 2020
  6. Skarbo, Svetlana (2 June 2020), "State of emergency in Norilsk after 20,000 tons of diesel leaks into Arctic river system", The Siberian Times
  7. "Rostekhnadzor warned Norilsk Nickel about problems with fuel storage". Achyde. 5 June 2020 இம் மூலத்தில் இருந்து 8 ஜூன் 2020 அன்று. பரணிடப்பட்டது.. https://web.archive.org/web/20200608045438/https://www.archyde.com/rostekhnadzor-warned-norilsk-nickel-about-problems-with-fuel-storage-business-rbc/. பார்த்த நாள்: 8 June 2020. 
  8. Weise, Elizabeth; Zaiets, Karina; Gelles, Karl (6 June 2020). "Russia declares state of emergency over Arctic Circle oil spill caused by melting permafrost". USA TODAY. https://www.usatoday.com/in-depth/graphics/2020/06/05/oil-spill-red-river-permafrost-tied-russian-arctic-circle-emergency-diesel/3143679001/. பார்த்த நாள்: 6 June 2020. 
  9. Svetlana Skarbo (2 June 2020), State of emergency in Norilsk after 20,000 tons of diesel leaks into Arctic river system, The Siberian Times
  10. "Arrest Made Over Massive Fuel Leak In Siberia". RFE/RL. 4 June 2020. https://www.rferl.org/a/russia-fuel-leak-siberia-arrest-starostin-norilsk-pollution-environment/30653159.html. பார்த்த நாள்: 8 June 2020. 
  11. "Norilsk Nickel to pay emergency relief costs, says Putin". TASS (Moscow). 5 June 2020. https://tass.com/emergencies/1164601. பார்த்த நாள்: 6 June 2020. 
  12. ,Russia's Putin declares state of emergency after Arctic Circle oil spill, BBC, 4 June 2020