உள்ளடக்கத்துக்குச் செல்

2018 மாவீரர் நாள்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.

2018 ஆம் ஆண்டின் மாவீரர் நாள் நவம்பர் 27, 2018 அன்று இலங்கையிலும் உலகின் பல்வேறு நாடுகளிலும் கடைப்பிடிக்கப்பட்டது.[1]

இலங்கையில்[தொகு]

யாழ்ப்பாணம்[தொகு]

 • கோப்பாய் மாவீரர் துயிலும் இல்லத்தில் அஞ்சலி செலுத்தப்பட்டது. [2]
 • யாழ் பல்கலைக்கழகத்தில் நடந்த நினைவுகூரல் நிகழ்ச்சியில் மாணவர்கள் கலந்துகொண்டனர்.
 • வடமராச்சி கிழக்குப் பகுதியில் குடும்பத்தினர் அஞ்சலிச் சுடர்களை ஏற்றினர்.

கிளிநொச்சி[தொகு]

வவுனியா[தொகு]

வவுனியாவின் பல்வேறு பகுதிகளில் நினைவேந்தல் நிகழ்வுகள் நடைபெற்றன.

அம்பாறை[தொகு]

அம்பாறை கஞ்சிகுடிச்சாறு மாவீரர் துயிலும் இல்லத்தில் உறவினர்கள் மற்றும் தமிழ் மக்களாள் அஞ்சலி செலுத்தப்பட்டது.[3]

இந்தியாவில்[தொகு]

தஞ்சாவூரில் நாம் தமிழர் கட்சி சார்பில் நடந்த நினைவுகூரல் நிகழ்ச்சியில் அக்கட்சியின் தலைவர் சீமான் தலைமையுரை ஆற்றினார்.[4] புதுச்சேரியில் மில்லர் பேரறையில் நினைவுகூரல் நிகழ்ச்சி நடந்தது.[5]

மலேசியாவில்[தொகு]

மலேசியாவில் வாழும் தமிழர்கள் சார்பாக நினைவுகூரல் நிகழ்ச்சி நடந்தது.[6]

ஐக்கிய இராச்சியத்தில்[தொகு]

இலண்டன் நகரத்தில் ஆயிரக்கணக்கான தமிழர்கள் ஒன்றுகூடி மாவீரர் நாளை நினைவுகூர்ந்தனர். நகரின் எக்சல் நடுவத்தில் நடந்த நினைவுகூரல் நிகழ்வில் உரைகளும் இசை நிகழ்ச்சிகளும் இடம்பெற்றன. தாயகமான இலங்கையில் மாலை 6.05 மணிக்கு நினைவுச் சுடர் ஏற்றப்பட்ட அதே நேரத்தில் ஐக்கிய ராச்சியத்திலும் தமிழர்கள் மெழுகுவர்த்திகளை ஏற்றினர். போரில் உயிரிழந்த வீரர்களின் நினைவாக தாற்காலிகமாக ஏற்படுத்தப்பட்ட நடுகற்களின் முன்னர் குடும்பத்தார் தியாகச் சுடர்களை ஏற்றினர். துயிலும் இல்லம் பாடல் இசைக்கப்பட்டது.[7]

சுவிட்சர்லாந்தில்[தொகு]

 • சூரிக்கு நகரில் ஆயிரக்கணக்கான தமிழர்கள் ஒன்றுகூடினர். போரில் உயிரிழந்த வீரர்களின் படங்களுக்கு அஞ்சலி செலுத்தப்பட்டது.[8]

மேற்கோள்கள்[தொகு]

 1. "இலங்கையின் வடக்கு கிழக்கு மாகாணங்களில் மாவீரர்களுக்கு அஞ்சலி". பிபிசி தமிழ். 28 நவம்பர் 2018. https://www.bbc.com/tamil/sri-lanka-46371622. பார்த்த நாள்: 2 டிசம்பர் 2018. 
 2. "Tamil Eelam war heroes emotionally commemorated, people defy SL Court orders". தமிழ்நெட். 27 நவம்பர் 2018. https://www.tamilnet.com/art.html?catid=13&artid=39264. பார்த்த நாள்: 2 டிசம்பர் 2018. 
 3. மாவீரர் நாள்'[தொடர்பிழந்த இணைப்பு]
 4. "வரலாற்றில் இந்திய மத்திய அரசை ஆட்டங்காண வைத்த மாவீரர் நாள்". தமிழ்வின். 1 டிசம்பர் 2018. https://www.tamilwin.com/politics/01/200218. பார்த்த நாள்: 2 டிசம்பர் 2018. [தொடர்பிழந்த இணைப்பு]
 5. "Thousands mark Maaveerar Naal across Tamil Nadu". தமிழ் கார்டியன். 30 நவம்பர் 2018. https://www.tamilguardian.com/content/thousands-mark-maaveerar-naal-across-tamil-nadu. பார்த்த நாள்: 2 டிசம்பர் 2018. 
 6. "Maaveerar Naal commemorated in Malaysia". தமிழ் கார்டியன். 30 நவம்பர் 2018. https://www.tamilguardian.com/content/maaveerar-naal-commemorated-malaysia. பார்த்த நாள்: 2 டிசம்பர் 2018. 
 7. "British Tamils commemorate Maaveerar Naal". தமிழ் கார்டியன். 27 நவம்பர் 2018. https://www.tamilguardian.com/content/british-tamils-commemorate-maaveerar-naal. பார்த்த நாள்: 8 டிசம்பர் 2018. 
 8. "Swiss Tamils commemorate Maaveerar Naal". தமிழ் கார்டியன். 29 நவம்பர் 2018. https://www.tamilguardian.com/content/swiss-tamils-commemorate-maaveerar-naal. பார்த்த நாள்: 8 டிசம்பர் 2018. 

வெளியிணைப்புகள்[தொகு]

"https://ta.wikipedia.org/w/index.php?title=2018_மாவீரர்_நாள்&oldid=3230475" இலிருந்து மீள்விக்கப்பட்டது