மாவீரர் உரைகள் நேர்காணல்கள் (நூல்)

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
Jump to navigation Jump to search

மாவீரர் உரைகள் நேர்காணல்கள் என்னும் நூல் பிரபாகரனின் மாவீரர் நாள் உரைகள், அவர் அளித்த செவ்விகள், சிந்தனைகள் போன்றவற்றின் தொகுப்பாகும். இந்நூலை கு. பூபதி தொகுத்துள்ளார். இந்த நூல் முதற்பதிப்பாக அக்டோபர் 2009 இல் தோழமை வெளியீடாக வெளிவந்தது.

நூலமைப்பு[தொகு]

இந்நூலில் தமிழீழ மக்களின் வரலாற்றையும், புவியியல் அமைப்பையும், அவர்கள் வாழ்க்கைச் சூழலையும், விடுதலை வேட்கையையும் விளக்கும் வகையில் இரண்டு கட்டுரைகள் முன்னுரைக்கு பதிலாக இடம்பெற்றுள்ளன.

தமிழீழ விடுதலைப் புலிகளின் விடுதலைப் போராட்டத்தில் முதன்முதலாக தன்னுயிரை ஈந்த சங்கர் என்ற போராளியின் நினைவு நாளையே (1989 கார்த்திகை 27) மாவீரர் நாளாக புலிகள் கடைபிடித்தனர். 1989 முதல் 2008 வரை அந்நாளில் பிரபாகரன் ஆற்றிய உரைகள் இந்நூலில் இடம்பெற்றுள்ளன. அடுத்து 1984இல் இருந்து 2002வரை அவர் அளித்த 15 செவ்விகள் தொகுக்கப்பட்டுள்ளன. மூன்றாவதாக பிரபாகரனின் சிந்தனைகள் பொன்மொழி வடிவில் இடம்பெற்றுள்ளன.[1]

பிரபாகரனுக்குச் சித்தாந்தப் புரிதல் கிடையாது என்பவர்களுக்கு பதிலளிக்கும்விதமாக அவரிடம் அறிவுசார் அரசியலும் நிறைந்திருந்தது என்பதைகாட்டும்விதமாக இந்நூல் தொகுக்கப்பட்டுள்ளது.

இந்த நூற்றாண்டின் தலைசிறந்த தமிழ் வீரன் நமக்கு ஈந்த போராட்ட ஆவணம், பிரபாகரனின் 20 வருடப் பேச்சும், நேர்காணலும் எந்த நூற்றாண்டுக்கும் உலகத் தமிழர்களுக்கு உரிமைப்பாடம். என்று ஆனந்தவிகடன் இதழ் (02-12-09) குறிப்பிட்டுள்ளது.

குறிப்புகள்[தொகு]

  1. மாவீரர் உரைகள் நேர்காணல்கள். பக்.5

வெளியிணைப்புகள்[தொகு]