2015 மாவீரர் நாள்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.

2015 ஆம் ஆண்டுக்கான மாவீரர் நாள் நவம்பர் 27, 2015 அன்று இலங்கையிலும் உலகின் பல்வேறு நாடுகளிலும் கடைப்பிடிக்கப்பட்டது.

இலங்கையில்[தொகு]

  • நல்லூரில் எம்.கே.சிவாஜிலிங்கம் (தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் வடமாகாண சபை உறுப்பினர்) அஞ்சலி செலுத்தினார்[1].
  • மாலை 6.05 மணியளவில் விளக்கேற்றுமாறு வவுனியா மாவட்ட மக்கள் குழு வேண்டுகோள் வைத்தது[2].
  • திருகோணமலையில் கிழக்குப் பல்கலைக்கழக மாணவர்கள் இரகசியமான முறையில் மெழுகுவர்த்தி ஏற்றி வைத்து அஞ்சலி செலுத்தினர்[3].
  • திருகோணமலையில் தேவாலயங்களில் நினைவுச் சுடர்களை ஏற்றி மக்கள் அஞ்சலி செலுத்தினர்[4].
  • புதுக்குடியிருப்பில் முன்பு விடுதலைப் புலிகள் மயானமாக பயன்படுத்திய நிலப்பகுதியில் அஞ்சலிகள் செலுத்தப்பட்டன[5].
  • வவுனியாவில் ஆலயம் ஒன்றின் திறந்தவெளிப் பகுதியில் சுடர்களை ஏற்றி வைத்து அஞ்சலி செலுத்தப்பட்டது[6].
  • மன்னாரில் தேவாலயம் ஒன்றில் சுடர் ஏற்றப்பட்டு அஞ்சலி செலுத்தப்பட்டது[7].
  • 'தீவிரவாத இயக்கத்தை நினைவுகூர்ந்து நிகழ்ச்சி நடத்துபவர்கள் மீது சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்' என காவற்துறையின் செய்தித் தொடர்பாளர் ருவன் குணசேகரா தெரிவித்தார்[8].

நார்வேயில்[தொகு]

நார்வேயின் தலைநகர் ஓசுலோவில் நினைவஞ்சலி நிகழ்வு நடைபெற்றது[9][10].

தமிழகத்தில்[தொகு]

  • சென்னை கொளத்தூர் பகுதியில் நினைவஞ்சலி நிகழ்வு நடைபெற்றது[11].
  • தஞ்சாவூரில் உள்ள முள்ளிவாய்க்கால் நினைவு முற்றத்தில் நடந்த நிகழ்வில், தஞ்சை க. பத்மா எழுதிய ஈழத்தாயைச் சந்தித்த ஈர நினைவுகள் எனும் நூல் வெளியிடப்பட்டது[12].

ஐக்கிய அமெரிக்காவில்[தொகு]

ஐக்கிய அமெரிக்காவின் நியூயார்க் நகரிலும், சான் பிரான்சிசுகோ நகரிலும் அஞ்சலி செலுத்தப்பட்டது[13].

இந்தோனிசியாவில்[தொகு]

இந்தோனேசியாவிலுள்ள தமிழ் அகதிகள் முகாம் ஒன்றில் மெழுகுவர்த்திகள் ஏற்றி வைத்து அஞ்சலி செலுத்தப்பட்டது[14].

மேற்கோள்கள்[தொகு]

  1. நல்லூரில் மாவீரர்களுக்கு அஞ்சலி செலுத்தினார் சிவாஜிலிங்கம்
  2. மாலை 6.05 இக்கு விளக்கேற்றுங்கள் : மாவீரருக்கு உணர்வுபூர்வமாக அஞ்சலிக்குமாறு கோருகிறது வவுனியா மாவட்ட பிரஜைகள் குழு
  3. Students at Eastern Uni mark Maaveerar Naal
  4. Maaveerar Naal commemorated in Trincomalee
  5. Remembrance at PTK's destroyed LTTE cemetery
  6. Vavuniya commemorates Maaveerar Naal
  7. Maaveerar Naal commemorated in Mannar despite forced cancellation and threats of arrest
  8. மாவீரர் நாள் நிகழ்ச்சி கூடாது: ராஜபட்ச, இலங்கை அரசு மிரட்டல்
  9. Maaveerar Naal remembered in Norway
  10. "Heroes Day addresses in diaspora slam ‘US-Sri Lanka’ agenda on Tamils". தமிழ் நெட் இணையதளம். 29 நவம்பர் 2015. http://tamilnet.com/art.html?catid=13&artid=38031. பார்த்த நாள்: 30 நவம்பர் 2015. 
  11. சென்னை கொளத்தூரில் மாவீரர் நாள் வீர வணக்கப் பொதுக்கூட்டம்
  12. ஈழத்தில் மோசமான நிலைமையே தொடர்கிறது
  13. US Tamils mark Maaveerar Naal
  14. Tamil refugees in Indonesia mark Maaveerar Naal

வெளியிணைப்புகள்[தொகு]

"https://ta.wikipedia.org/w/index.php?title=2015_மாவீரர்_நாள்&oldid=3230442" இலிருந்து மீள்விக்கப்பட்டது