2016 இசுதான்புல் வானூர்தி நிலையத் தாக்குதல்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
Jump to navigation Jump to search
2016 இசுதான்புல் வானூர்திநிலையத் தாக்குதல்
தாக்குதல் நடைபெற்ற முனையம் 2.
Lua error in Module:Location_map at line 502: Unable to find the specified location map definition: "Module:Location map/data/Turkey Istanbul" does not exist.
இடம்அத்தாதுர்க் வானூர்தி நிலையம், இசுதான்புல், துருக்கி
நாள்28 சூன் 2016 (2016-06-28)
~22:00 PM (கிஐகோநே)
தாக்குதலுக்கு
உள்ளானோர்
அத்தாதுர்க் வானூர்தி நிலையத்தில் இருந்த குடிமக்களும் பாதுகாப்பு அலுவலரும்
தாக்குதல்
வகை
தற்கொலைத் தாக்குதல்கள், துப்பாக்கிச்சூடு, திரள் கொலை, பயங்கரவாதம்
ஆயுதம்கலாஷ்னிகோவ் துப்பாக்கிகள், வெடிகுண்டுகள்
இறப்பு(கள்)41 (+ 3 தாக்கியோர்)[1][2]
காயமடைந்தோர்239[2]
தாக்கியதாக
சந்தேகிக்கப்படுவோர்
 இராக்கிலும் சாமிலும் இசுலாமிய அரசு[3]
தாக்கியோரின் எண்ணிக்கை3 (அனைவரும் இறப்பு)[2]

சூன் 28, 2016 அன்று துருக்கியின் இசுதான்புல் நகரத்திலுள்ள அத்தாதுர்க் வானூர்தி நிலையத்தின் முனையம் இரண்டில் வெடிகளாலும் துப்பாக்கிகளாலும் தாக்குதல் நடத்தப்பட்டது.[4] தாக்குதல் நடத்தியவர்களைத் தவிர குறைந்தது 41 பேர் உயிரிழந்ததாகவும் 230 பேர் காயமுற்றதாகவும் துருக்கியப் பிரதமர் பினாலி யாகதிம் அறிவித்தார்.[2][5][6] வானூர்தி நிலையத்தின் தானுந்து நிறுத்தற் பகுதியில் துப்பாக்கிச்சூடு நடந்ததாகவும்[4] பன்னாட்டு வருகை முனையத்தின் வாயிலில் வெடிகுண்டுகள் வெடித்ததாகவும்[7] அறியப்படுகின்றது; இதனை தற்கொலைப் படையினர் நடத்தியதாகவும் கருதப்படுகின்றது.[2] வெடிகுண்டுகள் வானூர்தி நிலையத்தின் பல்வேறு பகுதிகளில் நிகழ்ந்தனவாக சில அறிக்கைகள் குறிப்பிடுகின்றன.[6] முனையத்தில் அல்லது அருகில் மூன்று தற்கொலைத் தாக்குவோர் குண்டுகளை வெடித்துள்ளனர்; நான்கு ஆயுதமேந்தியோர் குண்டு வெடித்தபின் ஓடியதாகவும் நேரடி சாட்சிகள் சிலவற்றை மேற்கோளிட்டு செய்திகள் வந்துள்ளன. இதனை காவல்துறையினர் உறுதி செய்யவில்லை. ஒருங்கிணைக்கப்பட்ட இந்தத் தாக்குதல் 90 விநாடிகளில் முடிந்து விட்டதாக ஓர் மூத்த ஐக்கிய அமெரிக்க புலனாய்வு அலுவலர் குறிப்பிட்டார்.[8]

பாதிக்கப்பட்டோர்[தொகு]

சவூதி அரேபியாவிலிருந்து ஐந்து பேரும், 23 துருக்கிய நாட்டினரும் உயிரிழந்தவர்களில் அடங்குவர்.[9]

நாடுவாரியாக பாதிக்கப்பட்டோர்
சொந்த நாடு இறப்பு காயம் மேற்.
 துருக்கி 28 [10]
 சவூதி அரேபியா 5 [10]
 ஈராக் 2 [10]
 தூனிசியா 1 1 [11]
 உஸ்பெகிஸ்தான் 1 [10]
 சீனா 1 [10]
 ஈரான் 1 5 [10]
 உக்ரைன் 1 [10]
 யோர்தான் 1 [10]
மொத்தம் 41 239 [10]

மேற்சான்றுகள்[தொகு]

 1. "Istanbul Ataturk airport attack: Deaths rise to 41, with 239 hurt". BBC News. 29 June 2016. http://www.bbc.com/news/world-europe-36662684. பார்த்த நாள்: 29 June 2016. 
 2. 2.0 2.1 2.2 2.3 2.4 "Explosions reported at Istanbul’s Ataturk Airport". Russia Today. பார்த்த நாள் 28 June 2016.
 3. "ISIS Believed Responsible for Istanbul Airport Attack; At Least 50 Dead | The American Spectator" (28 June 2016). பார்த்த நாள் 29 June 2016.
 4. 4.0 4.1 "Blast and gunfire 'at Istanbul airport'". BBC. பார்த்த நாள் 28 June 2016.
 5. Tavernise, Sabrina; Yeginsu, Ceylan (28 June 2016). "Attack at Istanbul Airport Leaves at Least 31 Dead". The New York Times. http://www.nytimes.com/2016/06/29/world/europe/turkey-istanbul-airport-explosions.html. பார்த்த நாள்: 29 June 2016. 
 6. 6.0 6.1 "BREAKING NEWS: Two explosions and gunfire at Istanbul's Ataturk airport cause multiple injuries". Daily Mail. பார்த்த நாள் 28 June 2016.
 7. "Istanbul Ataturk airport attack: At least 10 reported dead".
 8. "Istanbul airport attack: Video shows security officers take down gunman before explosion".
 9. http://www.bbc.co.uk/news/live/world-europe-36659543?ocid=socialflow_facebook&ns_mchannel=social&ns_campaign=bbcnews&ns_source=facebook
 10. 10.0 10.1 10.2 10.3 10.4 10.5 10.6 10.7 10.8 (பிரெஞ்சு) Attentat d'Istanbul: 23 Turcs et 13 ressortissants étrangers tués, BFM TV, 29 june 2016
 11. (பிரெஞ்சு) Attentat d’Istanbul : Un Tunisien parmi les victimes, Webdo.tn, 29 juin 2016