2014 அந்தமான் படகு விபத்து

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
Jump to navigation Jump to search
2014 அந்தமான் படகு விபத்து
இடம்போர்ட் பிளேர் இந்தியா
நாள்26 சனவரி 2014
பயணிகளும், பணியாளர்களும்45
இறந்தோர்21+
படகின் பெயர்அக்யூ மரைன்

2014ம் ஆண்டு சனவரி 26 இல் இந்தியா நாட்டின் ஒரு பகுதியான அந்தமான் நிகோபார்தீவுக்கூட்டங்களின் தலைநகரான போர்ட் பிளேர் அருகில் தனியாருக்கு சொந்தமான படகு ஒன்று கவிழ்ந்து விபத்துக்குள்ளானது.[1] [2][3]

விபத்து[தொகு]

இந்தியாவின் முக்கிய கோயில் நகரமான காஞ்சிபுரத்திலிருந்து ஜனவரி 26ம் தேதியான குடியரசு தினத்தைக் கொண்டாடும் விதமாக அந்தமான் நிகோபார் தீவுக்கு சென்றார்கள். அந்தமானில் ஒரு தீவிலிருந்து மற்ற தீவுக்கு செல்ல படகுகளையே பயன்படுத்தும் கட்டாயம் உள்ளது. ஆகையால் 25 [4] பேர் பயணம் செய்ய உதவும் அக்யூ மரைன் என்ற சிறிய வகையான தனியாரின் படகில் 41 பேர் ரோஸ்தீவிலிருந்து பக்கத்து தீவுக்கு பயணம் மேற்கொண்டார்கள். அப்படகு 26.ஜனவரி 2014 மாலை 4.30 மணியளவில் போர்ட் பிளேயருக்கு அருகிலேயே பாரம் தாங்காமல் கவிழ்ந்தது.[5] 17 பேர் தமிழர்கள் உட்பட மகாரஷ்டிரர்களும் சேர்த்து 32 பேர் மரணம் அடைந்தார்கள்.[6][7] பின்னர் 21 பேர் காப்பாற்றப்பட்டு அங்குள்ள மருத்துவமணையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்கள்.

விளைவு[தொகு]

இப்படகு விபத்தால் இந்திய பிரதம மந்திரி மன்மோகன் சிங் அவர்கள் இரங்கல் தெரிவித்துள்ளார். மற்றும் தமிழக முதல்வர் ஜெ. ஜெயலலிதா அவர்கள் மரணம் அடைந்தவர்களின் குடும்பத்திற்கு 1 லட்சம் வீதம் வழங்கப்படும் என அறிவித்துள்ளார்.[8]

மேலும் பார்க்க[தொகு]

உதவிக்கு


மேற்கோள்[தொகு]