ராஸ் தீவு (அந்தமான் தீவுகள்)

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
தாவிச் செல்லவும்: வழிசெலுத்தல், தேடல்
ராஸ் தீவு

ராஸ் தீவு (Ross Island) அந்தமான் தீவுக் கூட்டதில் உள்ள ஒரு தீவாகும். தற்போது முழுவதுமாக சிதைந்த நிலையிலுள்ள பழைய கட்டடங்களை மட்டுமே கொண்டிருக்கும் இத்தீவு 1941 ஆம் ஆண்டில் ஏற்பட்ட நிலநடுக்கத்திற்கு முன்புவரை அந்தமான் மற்றும் நிக்கோபார் தீவுக் கூட்டத்தின் நிர்வாக தலைமையகமாய் செயல்பட்டு வந்துள்ளது. இந்த நிலநடுக்கத்திற்குப் பிறகு போர்ட் பிளேருக்குத் தலைமையகம் மாற்றப்பட்டது. இத்தீவு தற்போது இந்தியக் கடற்படையால் நிர்வகிக்கப்படுகிறது. அந்தமானுக்கு சுற்றுலா வரும் பயணிகள் பலரும் பார்க்கும் மிக முக்கியமான சுற்றுலாத் தலமாக இத்தீவு விளங்குகிறது.

திரைப்படங்களில் ராஸ் தீவு[தொகு]

ராஸ் தீவில் பல திரைப்படங்களுக்கான படப்பிடிப்பு நடந்துள்ளது. சில திரைப்படங்கள் மற்றம் விவரங்கள்,

  • காக்க காக்க திரைப்படத்தில் வரும் உயிரின் உயிரே பாடல் முழுவதும் இந்த தீவில்தான் படமாக்கப்பட்டது.
  • கடல் திரைப்படத்தின் சில காட்சிகள் மற்றும் பாடல்கள் படமாக்கப்பட்டுள்ளது.

போக்குவரத்து[தொகு]

போர்ட் பிளேரிலிருந்து விசைப்படகுகள் இயக்கப்படுகின்றன.

வெளி இணைப்புகள்[தொகு]

காட்சியகம்[தொகு]